வியாழன், 26 நவம்பர், 2020

அர்ஜுந விஷாத யோகம் 1.31 - 1.40

||1.31|| அர்ஜுனனின் மனக்கலக்கத்தின் வெளிப்பாடு:

निमित्तानि पश्यामि विपरीतानि केशव

श्रेयोऽनुपश्यामि हत्वा स्वजनमाहवे ३१

நிமித்தாநி பச்1யாமி விபரீதாநி கேச1

ச்1ரேயோऽநுபச்1யாமி ஹத்வா ஸ்வஜநமாஹவே ।। 31 ।।


கேசவா, கேடுடைய சகுனங்களையும் காண்கிறேன். போரிலே சுற்றத்தாரைக் கொல்லுதலில் நன்மையை நான் காண்கிறேனில்லை.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

கேசவா, விபரீதமான சகுனங்கள் பல காண்கிறேன். போரிலே சுற்றத்தார்களை மடிப்பதில் எனக்கு நன்மை தோன்றவில்லை.


விளக்கம்:

கேசவஎன்ற சொல்லிற்கு மூன்று வித விளக்கங்கள் அளிக்கலாம்:

(1) கேசின் என்ற அசுரனைக் கொன்றவன்.

(2) அழகான உரோமத்தை உடையவன்.

(3) ‘என்பது பிரம்மாவையும், ‘என்பது விஷ்ணுவையும், ‘ஈசஎன்பது ருத்ரனையும் குறிப்பதால், மும்மூர்த்திகளை வசமாய் வைத்திருப்பவன்.

நிமித்தம், சகுனம், குறி ஆகியவைகள் ஒருபொருட்சொற்கள். நாடிய செயலொன்று குறித்த வேளையில் அல்லது இடத்தில் நிறைவேறும் அல்லது நிறைவேறாது என்பதற்கு இயற்கையில் இதர உயிர்களின் செயல்கள் சில முன்னறிகுறிகளாக வந்தமைகின்றன. தன் கடமையை முறையாகச் செய்பவர் குறி பார்ப்பதில் கருத்து வைக்கலாகாது. மாணாக்கன் ஒருவன் பரீக்ஷைக்குப் போகும்பொழுது, நாடு ஒன்று தர்மயுத்தத்தில் பிரவேசிக்கும் பொழுது சகுனம் பார்ப்பது பொருள்படாச் செயலாகும். அப்போதைக்கப்போது செய்து முடிக்கவேண்டிய வினையில் தீவிரமாகக் கருத்தைச் செலுத்தவேண்டும்

அர்ஜுனனுக்கு அபசகுனங்கள் தென்பட்டதற்கு அவனுடைய மனக்கலக்கமே காரணமாகும். வீரன் ஒருவனுக்கு மனக்கலக்கம் பொருந்தாது.

-------------------------------------------------------------------------------------------------------------------------

||1.32|| அர்ஜுனனின் போலி வேதாந்தம்:

काङ्क्षे विजयं कृष्ण राज्यं सुखानि

किं नो राज्येन गोविन्द किम् भोगैर्जीवितेन वा ३२

காங்க்ஷே விஜயம் க்ருஷ்ண ராஜ்யம் ஸுகா2நி

கிம் நோ ராஜ்யேந கோ3விந்த3 கிம் போ4கை3ர்ஜீவிதேந வா ।। 32 ।।


கிருஷ்ணா! வெற்றியையும் ராஜ்யத்தையும் இன்பங்களையும் நான் வேண்டுகிறேன். கோவிந்தா, நமக்கு ராஜ்யத்தால், போகத்தால் அல்லது ஜீவித்திருப்பதால்தான் ஆவதென்ன?


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

கண்ணா, நான் வெற்றியை விரும்புகிலேன்; ராஜ்யத்தையும் இன்பங்களையும் வேண்டுகிலேன். கோவிந்தா. நமக்கு ராஜ்யத்தால் ஆவதென்? இன்பங்களால் ஆவதென்? உயிர் வாழ்க்கையாலேனுமாவதென்னே?


விளக்கம்:

சுலோகங்கள் முப்பத்தியொன்று முதல் நாற்பத்தியாறு வரை, அர்ஜுனன் தனது மனக்கலத்தினால் உண்டான போலி வேதாந்தத்தை வெளிப்படுத்துகிறான். அவனின் இந்த விரக்தி விவேகத்திலிருந்து வந்ததன்று. மயக்கத்தின் விளைவானது பற்றற்றவனது பாங்குபோன்று வடிவெடுக்கிறது.

-------------------------------------------------------------------------------------------------------------------------

||1.33||

येषामर्थे काङ्क्षितं नो राज्यं भोगाः सुखानि

इमेऽवस्थिता युद्धे प्राणांस्त्यक्त्वा धनानि ३३

யேஷாமர்தே2 காங்க்ஷிதம் நோ ராஜ்யம் போ4கா3: ஸுகா2நி

இமேऽவஸ்தி2தா யுத்3தே4 ப்ராணாம்ஸ்த்யக்த்வா 4நாநி ।। 33 ।।


எவர்பொருட்டு நாம் ராஜ்யத்தையும், போகங்களையும், இன்பங்களையும் விரும்புகிறோமோ, அவர்கள் உயிரையும் செல்வங்களையும் துறந்தவராய் இங்கு வந்து நிற்கின்றனர்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

யாவர் பொருட்டு நாம் ராஜ்யத்தையும், போகங்களையும், இன்பங்களையும் விரும்புகிறோமோ, அவர்கள் உயிரையும் செல்வங்களையும் துறந்தோராய் இங்கு வந்து நிற்கிறார்கள்.


விளக்கம்:

கோ’ - உயிர்; ‘விந்தன்’ - அறிபவன். கோவிந்தன், உயிர்களின் உள்ளத்தில் இருப்பதை நன்கு அவன் அறிகிறபடியால் இதற்கு ஒரு முடிவு அவன்தான் சொல்லியாக வேண்டும்.

-------------------------------------------------------------------------------------------------------------------------

||1.34||

आचार्याः पितरः पुत्रास्तथैव पितामहाः

मातुलाः श्वशुराः पौत्राः श्यालाः सम्बन्धिनस्तथा ३४

ஆசார்யா: பிதர: புத்ராஸ்ததை2 பிதாமஹா:  

மாதுலா: ச்1வசு1ரா: பௌத்ரா: ச்1யாலா: ஸம்ப3ந்தி4நஸ்ததா2 ।। 34 ।।


ஆசாரியர்கள், தந்தையர், மக்கள், பாட்டன்மார், மாதுலர், மாமனார், பேரர், மைத்துனர், சம்பந்திகள் முதலாயினோர் (இங்கு இருக்கின்றனர்).


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

குருக்களும், தந்தையரும், மக்களும், பாட்டன்மாரும், மாதுலரும், மாமன்மாரும், பேரரும், மைத்துனரும், சம்பந்திகளும் (இங்குளர்).

-------------------------------------------------------------------------------------------------------------------------

||1.35||

एतान्न हन्तुमिच्छामि घ्नतोऽपि मधुसूदन

अपि त्रैलोक्यराज्यस्य हेतोः किं नु महीकृते ३५

ஏதாந்ந ஹந்துமிச்சா2மி க்4நதோऽபி மது4ஸூத3

அபி த்ரைலோக்யராஜ்யஸ்ய ஹேதோ: கிம் நு மஹீக்ருதே ।। 35 ।।


மதுசூதனா, நான் கொல்லப்படினும் மூவுலகை ஆளுதற்கென்றும் இவர்களைக் கொல்லேன். பூமியின் பொருட்டுக் கொல்வேனா?


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

மதுசூதனா, யான் கொல்லப்படினும் இவர்களைக் கொல்ல விரும்புகிலேன். மூவுலகின் ஆட்சி பெறுதற்கெனினும் (இது செய்யேன் செய்யேன்!) பூமியின் பொருட்டு செய்வனோ?


விளக்கம்:

மதுஎன்ற அசுரனைக் கொன்றதனால் கிருஷ்ணருக்கு மதுசூதனன் என்ற பெயர் வந்தது.

-------------------------------------------------------------------------------------------------------------------------

||1.36||

निहत्य धार्तराष्ट्रान्नः का प्रीतिः स्याज्जनार्दन

पापमेवाश्रयेदस्मान्हत्वैतानाततायिनः ३६

நிஹத்ய தா4ர்தராஷ்ட்ராந்ந: கா ப்ரீதி: ஸ்யாஜ்ஜநார்த3

பாபமேவாச்1ரயேத3ஸ்மாந்ஹத்வைதாநாததாயிந: ।। 36 ।।


ஜநார்தனா! திருதராஷ்டிரப் புதல்வர்களைக் கொன்று நமக்கு என்ன இன்பம் வரப்போகிறது? இந்த ஆகதாயிகளைக் கொல்வதால் பாபமே நம்மை வந்தடையும்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

ஜநார்த்தன! திருதராஷ்டிரக் கூட்டத்தாரைக் கொன்று நாம் என்ன இன்பத்தையடையப் போகிறோம்? இந்தப் பாதகரைக் கொல்வதனால் நம்மைப் பாவமே சாரும்.


விளக்கம்:

ஜநார்த3’ — பொருள், வீடு இரண்டின் பொருட்டு ஜனங்களால் துதிக்கப்படுபவன். இது கிருஷ்ணருடைய மற்றொரு பெயர்.

ஆததாயினர் என்னும் சொல் பெரும்பாபிகள் எனப் பொருள்படும். ஒருவன் குடியிருக்கும் வீட்டில் தீ வைத்தல், உணவில் விஷத்தை வைத்து வழங்கல், உருவிய வாளோடு ஒருவனைக் கொல்லப் பாய்தல், ஒருவனுடைய செல்வத்தை நிலத்தை அல்லது மனைவியைத் திருடவும் அபகரிக்கவும் முயலுதல் ஆகிய இவையாவும் மஹா பாபங்களாகின்றன. திருதராஷ்டிரனுடைய மக்கள் இத்தனைவிதக் குற்றங்களையும் செய்தவர்கள் ஆவர். ஆததாயி ஒருவன் பண்டிதனாயிருப்பினும், அவனைக் கொல்லுதல் முறை. ஆனால், இளகிய நெஞ்சத்தால் அர்ஜுனன் அங்ஙனம் செய்ய இசையவில்லை.

-------------------------------------------------------------------------------------------------------------------------

||1.37||

तस्मान्नार्हा वयं हन्तुं धार्तराष्ट्रान्स्वबान्धवान्

स्वजनं हि कथं हत्वा सुखिनः स्याम माधव ३७

தஸ்மாந்நார்ஹா வயம் ஹந்தும் தா4ர்தராஷ்ட்ராந்ஸ்வபா3ந்த4வாந்  

ஸ்வஜநம் ஹி கத2ம் ஹத்வா ஸுகி2: ஸ்யாம மாத4 ।। 37 ।।


ஆதலால் நம் சுற்றத்தாராகிய திருதராஷ்டிர புத்திரர்களைக் கொல்லுதல் நமக்குத் தகாது. மாதவா, உற்றாரைக் கொன்று நாம் இன்புற்றிருப்பது எங்ஙனம்?


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

ஆதலால், சுற்றத்தாராகிய திருதராஷ்டிர வர்க்கத்தாரைக் கொல்வது நமக்குத் தகாது. மாதவா, பந்துக்களைக் கொன்றபின் நாம் இன்புற்றிருப்பதெப்படி?

-------------------------------------------------------------------------------------------------------------------------

||1.38||

यद्यप्येते पश्यन्ति लोभोपहतचेतसः

कुलक्षयकृतं दोषं मित्रद्रोहे पातकम् ३८

யத்3யப்யேதே பச்1யந்தி லோபோ4பஹதசேதஸ:  

குலக்ஷயக்ருதம் தோ3ஷம் மித்ரத்3ரோஹே பாதகம் ।। 38 ।।


ஆசை மிகுதியால் அறிவிழந்த இவர்கள் குலநாசத்தால் விளையும் கேட்டையும் நண்பருக்குச் செய்யும் துரோகத்தால் விளையும் பாதகத்தையும் காண்கிலராயினும், … 


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

அவாவின் மிகுதியால் அறிவிழந்த இவர்கள் குலத்தையழிப்பதில் விளையும் தீங்கையும் நண்பருக்குச் சதி செய்வதிலுள்ள பாதகத்தையும் காண்கிலராயினும்,

-------------------------------------------------------------------------------------------------------------------------

||1.39||

कथं ज्ञेयमस्माभिः पापादस्मान्निवर्तितुम्

कुलक्षयकृतं दोषं प्रपश्यद्भिर्जनार्दन ३९

கத2ம் ஜ்ஞேயமஸ்மாபி4: பாபாத3ஸ்மாந்நிவர்திதும்  

குலக்ஷயக்ருதம் தோ3ஷம் ப்ரபச்1யத்3பி4ர்ஜநார்த3 ।। 39 ।।


குலநாசத்தால் உண்டாகும் கேட்டை நன்கு உணர்ந்த நாம் ஏன் ஜநார்தனா, இப்பாபத்தினின்றுப் பின்வாங்கத் தெரிந்து கொள்ளலாகாது?


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

ஜநார்த்தன! குலநாசத்தால் ஏற்படுங் குற்றத்தையுணர்ந்த நாம் இப்பாவத்தினின்று விலகும் வழியறியாதிருப்பதென்ன?


விளக்கம்:

நாளைக்கு அர்ஜுனனே இக்குலநாசத்தைச் செய்யப் போகிறான் என்பது இப்போது அவனுக்குத் தெரியாது. ஆசைமிகுதியால் கெளரவர்கள் உற்றாரை ஒழிக்க முன்வந்திருக்கிறார்கள். மற்று உறவினர் வாஞ்சையால் அர்ஜுனன் மனந்தளர்ந்து பின்வாங்கப் பார்க்கிறான். பொருளாசை ஒருபக்கம், மக்கள் வாஞ்சை மற்றொரு பக்கம். வாழ்வின் கோட்பாடு வேறு ஏதும் இல்லையா?

-------------------------------------------------------------------------------------------------------------------------

||1.40||

कुलक्षये प्रणश्यन्ति कुलधर्माः सनातनाः

धर्मे नष्टे कुलं कृत्स्नमधर्मोऽभिभवत्युत ४०

குலக்ஷயே ப்ரணச்1யந்தி குலத4ர்மா: ஸநாதநா:  

4ர்மே நஷ்டே குலம் க்ருத்ஸ்நமத4ர்மோऽபி44வத்யுத ।। 40 ।।


குலம் அழிந்தால் என்றுமுள்ள குலதர்மங்கள் அழிகின்றன. தர்ம நாசத்தால் குலம் முழுவதையும் அதர்மம் சூழ்கிறது.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

குலநாசத்தால் என்றுமுள்ள குலதர்மங்கள் அழிகின்றன. தர்மம் அழிவதனால் குலமுழுவதையும் அதர்மம் சூழ்கிறதன்றே?

-------------------------------------------------------------------------------------------------------------------------