திங்கள், 25 செப்டம்பர், 2023

ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம் 9.9 - 9.10

||9.9|| ஈஷ்வரன் பந்தப்படுவதில்லை:

मां तानि कर्माणि निबध्नन्ति धनञ्जय  

उदासीनवदासीनमसक्तं तेषु कर्मसु ।। ।।

மாம் தாநி கர்மாணி நிப3த்4நந்தி 4நஞ்ஜய

உதா3ஸீநவதா3ஸீநமஸக்தம் தேஷு கர்மஸு ।। 9 ।।


धनञ्जय  4நஞ்ஜய  தனஞ்ஜயா   मां  மாம்  என்னை   तेषु कर्मसु  தேஷு கர்மஸு  அந்தக் கர்மங்களில்   

असक्तं  அஸக்தம்  பற்றற்றவனை        மேலும்   उदासीनवत्  உதா3ஸீநவத்  உதாஸீனனைப் போன்று   सीनम्  ஆஸீநம்  அமர்ந்திருப்பவனை   तानि कर्माणि  தாநி கர்மாணி  அக் கர்மங்கள்   

निबध्नन्ति  நிப3த்4நந்தி  பந்தப்படுத்துவதில்லை.


தனஞ்ஜயா, அக்கர்மங்களில் பற்றற்றவனும் உதாஸீனனைப் போல அமர்ந்திருப்பவனும் ஆகிய என்னை அவைகள் பந்தப்படுத்துவதில்லை.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

தனஞ்ஜயா, என்னை அத்தொழில்கள் தளையுறுத்தா. அவ்வினைகளிடையே நான் மேற்பட்டவன் போல் அமர்ந்திருக்கிறேன்.


விளக்கம்:

கர்த்தாவாக இருப்பவன் கண்டிப்பாக போக்தாவாக இருந்துதான் ஆகவேண்டும். இந்த சிருஷ்டியை தோற்றுவித்த கர்த்தாவான ஈஷ்வரன், ஒரு போக்தாவாகவும் ஆகி பந்தப்படலாம் என ஒருவன் நினைக்கலாம். ஆகவே இந்த சுலோகத்தில்நான் முக்தன்என்பதை காரணத்துடன் விளக்குகிறார். உயர்ந்தது-தாழ்ந்தது, ஆரோக்கியமானது-ஆரோக்கியமற்றது போன்று பல்வேறு மாறுபாடுகளுடன் கூடிய இந்த சிருஷ்டி என்னை எவ்விதத்திலும் பாதிப்பதில்லை, ஏனெனில் நான் அஸங்கமானவன்(அஸங்கோ3ஹம்), தொடர்பில்லாதவன் என்கிறார் பகவான். பரமேஷ்வரனான பகவான் இந்த கர்மங்களில்(தேஷு கர்மஸு) சம்பந்தப்படாதவராக இருப்பதற்கு இரு காரணங்களை இங்கு கூறுகிறார். (1) உதாஸீனனாக அமர்ந்திருப்பதனால் (2) பற்றற்றவனாக இருப்பதனால்.


=> உதாஸீனன்:

உதா3ஸீநஎனில் முற்றிலும் அலட்சியமாக இருப்பவன், கண்டுகொள்ளாதவன், தன்னை அதில் ஈடுபடுத்திக் கொள்ளாதவன் என்று பொருள். அது குறித்து விருப்போ அல்லது வெறுப்போ அற்றவன் உதாஸீனன். இங்குவத்எனும் பின்னொட்டுபோலஎனும் அர்த்தத்தைக் கொடுக்கின்றது. அதாவது பொறுப்பில்லாதவன் அல்ல; ஆனால் பொறுப்பில்லாதவனைப் போல அமர்ந்திருப்பவன். ‘ஆஸீநஎனில் அமர்ந்திருப்பவன். எவ்விதம் ஒருவனின் புத்தியில் அமர்ந்திருக்கும் ஸத்-சித்-ஆனந்த-ஆத்மாவானது நல்ல அல்லது கெட்ட எண்ணத்திலோ மற்றும் நல்ல அல்லது தீய செயலிலோ தொடர்புபடுத்திக் கொள்ளாமல் உதாஸீனனைப் போல அமர்ந்துள்ளதோ அதேபோல சிருஷ்டி, ஸ்திதி, லயம் எனும் இந்த கர்மங்களில் தொடர்புபடுத்திக் கொள்ளாமல் பரமேஷ்வரன் அமர்ந்திருக்கிறார். எனவே பகவான், ‘நான் உண்மையில் ஈடுபடவில்லைஎன்கிறார். நான் கர்த்தா என்ற உணர்வு அவரிடம் இல்லை. ஆத்ம-அறிவை அடைந்த எவனொருவனுக்கும் இவ்விதம் நான் கர்த்தா அல்ல என்று உணர்தல் சாத்தியப்படுகிறது. பரமேஷ்வரனின் ஆத்மாவும் ஸத்-சித்-ஆனந்தம் மற்றும் ஜீவனின் ஆத்மாவும் ஸத்-சித்-ஆனந்தம். இதை புரிந்த எவரும்செய்பவன்எனும் அடையாளத்திலிருந்து விடுபட்டு உதாஸீனனைப் போல ஆக முடியும்


=> பற்றற்றவன்:

அஸக்தஎனில் பற்று இல்லாதவன், தொடர்பற்றவன் என்பது பொருள். எல்லா செயல்களுக்கும் ஆதாரமாக அமர்ந்திருந்தும் அவைகளின் பலன்களுடன் தொடர்பில்லாத ஆத்மாவை போலவே, இங்கு மாயையின் அடித்தளமாக அமர்ந்திருக்கும் பரமேஷ்வரனும் அதனுடன் தொடர்பில்லாதவராக, கர்ம பலன்களில் பற்று இல்லாதவராக, கர்த்தா எனும் அடையாளத்தை விட்டவராக இருக்கிறார். எனவே சிருஷ்டி உள்ளிட்ட கர்மங்கள் அவரை பந்தப்படுத்துவதில்லை - நிப3த்4நந்தி

ஜகத் சிருஷ்டியில் நானாவகைக் கர்மங்களும் அடங்கியிருக்கின்றன. அவைகளில் பற்றுவிட்டவரே உதாஸீனர் ஆகின்றார். ஈஷ்வரன் அந்நிலையில் நிலைத்திருப்பதால் அவருடைய பிரக்ருதி செய்யும் இத்தனைவிதக் கர்மங்களும் அவரைக் கட்டுப்படுத்துவதில்லை.

இங்கு உதாஸீநவத் எனும் சொல்லை சரியான அர்த்தத்தில் புரிந்துகொள்ள வேண்டும். விளைவு நம்மை பாதிக்கக் கூடாது என்பதற்காக பொறுப்பில்லாமல் இருக்கவேண்டும் என்பது இதன் பொருள் அல்ல. செய்யவேண்டிய செயலைச் செவ்வனே செய்யவேண்டும். முயற்சி செய்த பின், பலனில் பற்றற்றவனாக மற்றும் விளைவுகளால் பாதிக்கப்படாதவனாக இருக்கவேண்டும். படைப்பு காரியத்தில் ஈடுபடும் முக்த புருஷனான பகவான் அதன் பலனில் பந்தப்படுவதில்லை; விளைவுகளால் பாதிக்கப்படுவதில்லை. ‘இதை நான் செய்கிறேன்-கர்த்ருதுவம், இதை நான் அனுபவிக்கிறேன்-போக்த்ருதுவம்என்கிற உணர்வு இல்லாமலிருக்கும் பட்சத்தில் ஒருவன் ஈஷ்வரனைப் போல பந்தப்படமாட்டான். இதனால் அவனும் முக்த புருஷனாகிறான்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

நான்என்பது இறந்தால் துன்பமெல்லாம் தொலையும். ஈஷ்வர கிருபையால்என் செயலாலாவது யாதொன்றுமில்லைஎன்னும் கொள்கை மனதில் ஸ்திரமாக நிலைக்குமானால், மனிதனுக்கு இந்த ஜென்பத்திலேயே முக்தி உண்டாகும்

---------------------------------------------------------------------------------------------------------------------

||9.10|| உலக நடைமுறைக்கும் தமக்குமுள்ள தொடர்பு பற்றி கூறுகிறார்:

मयाध्यक्षेण प्रकृति: सूयते सचराचरम्

हेतुनानेन कौन्तेय जगद्विपरिवर्तते ।। १० ।।

மயாத்4யக்ஷேண ப்ரக்ருதி: ஸூயதே ஸசராசரம்

ஹேதுநாநேந கௌந்தேய ஜக3த்3விபரிவர்ததே ।। 10 ।।


कौन्तेय  கௌந்தேய  குந்தியின் மகனே   मया  மயா  என்னால்   

अध्यक्षेण  அத்4யக்ஷேண  கண்காணிக்கப்பெற்று    प्रकृति:  ப்ரக்ருதி:  பிரக்ருதியானது   

सचराचरम् ( चर अचरम्ஸசராசரம் ( சர அசரம்) இந்த நகர்கின்ற நகராத படைப்பை    

सूयते  ஸூயதே  படைக்கின்றது   अनेन हेतुना  அநேந ஹேதுநா  இந்த காரணத்தால்    

जगद्  ஜக3த்3 உலகானது     विपरिवर्तते  விபரிவர்ததே  சுழல்கிறது.


குந்தியின் மகனே, என்னால் கண்காணிக்கப்பெற்று, பிரக்ருதியானது ஸ்தாவர ஜங்கம உலகத்தை சிருஷ்டிக்கிறது. இதன் காரணத்தால் உலகானது சுழல்கிறது.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

என் மேற்பார்வையில் சக்தி சராசர உலகங்களைப் பெறுகிறாள். குந்தி மகனே, இந்த ஏதுவால் உலகமே சுழல்கிறது.


விளக்கம்:

  ஏழு முதல் பத்து வரையிலான இந்த நான்கு சுலோகங்களில் உலக இயக்கத்திற்கும் தமக்கும் உள்ள தொடர்பு எத்தகையது என்பதை பகவான் படிப்படியாக விளக்குகிறார். ஏழாவது சுலோகத்தில், ‘நான் சிருஷ்டிக்கிறேன்என்கிறார். எட்டாவதில், பிரக்ருதியை கொண்டு அக்காரியத்தை செய்வதாகச் சொல்லுகிறார். ஒன்பதாவது சுலோகத்தில் நடுவுநிலை வகிக்கும் தன்னை இந்த பிரக்ருதியின் செயல் பந்தப்படுத்துவதில்லை என்கிறார். இங்கு தாம் சாக்ஷியாய் வீற்றிருந்து கண்காணிக்கையில், அதாவது தமது சன்னிதான விசேஷத்தால் பிரக்ருதிக்கு ஜகத் காரியங்களைச் செய்யும் வல்லமை வந்தமைவதாக கூறுகிறார். சூரியனுடைய முன்னிலையில் சூரிய கிரணங்கள் பொருள்களைப் பிரகாசிப்பதைப் போல, ஈஷ்வரனுடைய முன்னிலையில் அவருடைய மாயா சக்தியால் உலகனைத்தும் உரு எடுப்பவனவாகின்றன


=> எனதிருப்பே எனது செயல்:

பிரக்ருதியானது நகரும் மற்றும் நகராத அனைத்து படைப்பையும் சிருஷ்டிக்கிறதுப்ரக்ருதி: ஸசராசரம் ஸூயதே, என்கிறார் கிருஷ்ணர். இங்கு கூறப்படும்சரமற்றும்அசரஎன்பதை இரு வகையாகப் பொருள் கொள்ளலாம். ஒன்று, மரம் மற்றும் செடி கொடி போன்ற நகராத உயிர்கள் அசர என்றும், நகர்கின்ற உயிர் வகைகள் சர என்றும் கூறலாம். அல்லது சர என்பது உணர்வுடைய உயிர்கள் என்றும், அசர என்பது உணர்வற்ற உயிர்வகைகள் என்றும் கூறலாம். மொத்தத்தில் இந்த முழு படைப்பும் என்பது பொருள்

மயா அத்4யக்ஷேணஎன் மேற்பார்வையின் கீழ், பிரக்ருதி இந்த முழு படைப்பையும் தோற்றிவைக்கிறது(ஸூயதே). பகவான், ‘என்_மயாஎன்று கூறும்போது அவர் தூய பிரக்ஞை உணர்வான பரமாத்மாவைக் பொருள்படுத்துகிறார். ‘அத்4யக்ஷன்எனில் சபாபதி, கண்காணிப்பவன், மேற்பார்வையாளன் அல்லது தலைமைத் தாங்குபவன் என்று பொருள். சங்கரர்மயா அத்4யக்ஷேணஎன்ற சொற்றொடருக்கு, ‘தூய பிரக்ஞையான என்னால் - மயா த்ர்சி1 மாத்ர ஸ்வரூபேநஎன விளக்கமளிக்கிறார். ஜடமான மனமும் புலன்களும் பிரக்ஞை சொரூபமான ஆத்மாவின் இருப்பினால் உணர்வுடையதாக ஆகி படைப்பாற்றல் திறன் கொண்டதாக மாறுகிறது. அதுபோலவே ஜடத்தன்மையை தனது இயல்பென கொண்ட இந்த பிரக்ருதி, என் இருப்பினாலேயே படைக்கும் சக்தியைப் பெறுகிறது. அதனுடைய இருப்பும் அறிவும் என்னைச் சார்ந்துள்ளது என்கிறார் பகவான்


=> இரு வகைக் காரணம்:

      (1) ஷவிகார காரணம்: மாற்றத்தை அடையும் காரணம், மாயை.

      (2) நிர்விகார காரணம்: மாற்றத்திற்கு உட்படாத காரணம், ப்ரம்ம.

இந்த சுலோகத்தில் பகவான், மாயையானது ஷவிகார காரணம் என்றும், தான் நிர்விகார காரணம் என்றும் கூறுகிறார். மாற்றத்தை அடையாத தத்துவமான பரமாத்மாவாகிய எனது முன்னிலையில் பிரக்ருதியானது அண்டங்களை இயக்கவல்ல உயிரையும் அருளையும் பெற்றுத் தொழில்புரிகிறது.

இந்த காரணத்தினால் உலகம் இயங்கி வருகிறதுஅநேந ஹேதுநா ஜக3த்3 விபரிவர்ததே. தோற்றுவித்தல் மற்றும் ஒடுக்குதல் மட்டுமல்லாமல் படைப்பில் காணப்படும் அத்தனைவித மாற்றங்களும் இதன் காரணமாகவே சாத்தியப்படுகிறது. அதாவது, இருப்பை நான் கொடுக்கும் காரணத்தினால் ஜடத் தன்மையுடைய மாயைக்கு இருத்தல்(ஸத்தா) என்னிடமிருந்து கிடைக்கிறது. உணர்வு சொரூபமான என்னால் அருளப்பட்டு இந்த பிரக்ருதி அம்சம் அனைத்து மாற்றங்களுக்கும் உள்ளாகி எல்லாவற்றையும் செய்கிறது. எனது இருப்பே, எனது சன்னிதானமே பிரக்ருதிக்கு அந்த சக்தியை அளிக்கிறது.


=> ஆத்மாவின் அருள்:

தனிமனிதனின் உடலை எடுத்துக் கொள்வோம். இது உருவாக்கப்பட்டதா இல்லையா? பிரக்ருதி அல்லது மாயையின் மாறுபாட்டிற்கு உட்படுவதால் இந்த பெளதிக உடலும் பிரக்ருதியால் உருவாக்கப்பட்டதுதான். அதேபோல, ப்ராணன், மனம் மற்றும் புலன்கள் ஆகியவை அனைத்தும் பிரக்ருதியால் உருவாக்கப்பட்டது. இவை அனைத்திற்கும் பின்னால் இருப்பது ஸத்-சித்-ஆனந்த-ஆத்மா ஆகும். எனவே ஆத்மாவினால் அருளப்பட்டதாக ஒருவனது மனமானது செயல்படுகிறது, அதாவது ஒவ்வொரு எண்ணமும் இந்த சைத்தன்ய-ஆத்மாவை அனுபவிக்கிறது. ஒரு தனிப்பட்ட நபரின் மனமும் எண்ணங்களும் உள்ளடக்கிய தனிப்பட்ட சிருஷ்டியாக இருந்தாலும் சரி, அல்லது மொத்த சிருஷ்டியாக இருந்தாலும் சரி, ஆத்மா ஒன்றுதான். ஒருவனின் தனிப்பட்ட படைப்பாகட்டும் அல்லது மொத்த பிரபஞ்சத்தின் படைப்பாகட்டும் எந்தவொரு காட்சிக்குப் பின்னாலும் நின்று அருளிக் கொண்டிருப்பது அந்த ஒரேயொரு சைத்தன்ய-ஆத்மா மட்டுமேயாம். எனவே இந்த உண்மையை புரிந்துகொள்ளும் எவனொருவனும் பகவானுடன் சேர்ந்து, ‘என்னால் அருளப்பட்டு, அசையும் மற்றும் அசையாத இந்த உலகத்தை பிரக்ருதி உருவாக்குகிறதுமயா அத்4யக்ஷேண ப்ரக்ருதி: ஸூயதே ஸசராசரம்’, எனக் கூறலாம். இதுவே ஞானம். நான் எந்தச் செயலையும் செய்வதில்லை, ஆனால் என் முன்னிலையில்தான் அனைத்துச் செயல்களும் நடைபெறுகிறது. ஜடமானது எதையும் உருவாக்க முடியாது, அதேசமயம் தூய பிரக்ஞையும் எதையும் உருவாக்குவதில்லை. ஆனால் எங்கோ இடையில் இந்த படைப்பெனும் தோற்றம் தெரிந்துகொண்டுள்ளது. இவ்வாறு, சைத்தன்ய-ஆத்மாவினால் அருளப்பட்ட ஜடப் பிரக்ருதி முழு படைப்பிற்கும் காரணமாகிறது

---------------------------------------------------------------------------------------------------------------------