திங்கள், 27 மார்ச், 2023

ஞானவிக்ஞான யோகம் 7.21 - 7.22

||7.21|| வழிபாட்டின் பலனை அடைய சிரத்தை முக்கியம்:

यो यो यां यां तनुं भक्त: श्रद्धयार्चितुमिच्छति

तस्य तस्याचलां श्रद्धां तामेव विदधाम्यहम् ।। २१ ।।

யோ யோ யாம் யாம் தநும் 4க்த: ச்1ரத்34யார்சிதுமிச்ச2தி  

தஸ்ய தஸ்யாசலாம் ச்1ரத்3தா4ம் தாமேவ வித3தா4ம்யஹம் ।। 21 ।।


: :  : :  எந்த எந்த   भक्त:  4க்த:  பக்தன்   यां यां  யாம் யாம்   எந்தெந்த   तनुम्  தநும்  தேவ வடிவத்தை श्रद्धया  ச்1ரத்34யா  சிரத்தையோடு   अर्चितुम्  அர்சிதும்  அர்ச்சிக்க   इच्छति  இச்ச2தி  விரும்புகிறானோ   तस्य तस्य  தஸ்ய தஸ்ய  அவ்வவனுடைய (அந்தந்த பக்தனுடைய)   

ताम् एव श्रद्धां  தாம் ஏவ ச்1ரத்3தா4ம்  அதே சிரத்தையை   अचलाम्  அசலாம்  அசையாததாக   

अहम् विदधामि  அஹம் வித3தா4மி   நான் செய்கிறேன்.


எந்தெந்த பக்தன் எந்தெந்த தேவ வடிவத்தை சிரத்தையோடு அர்ச்சிக்க விரும்புகிறானோ அந்தந்த பக்தனுடைய நம்பிக்கையை உறுதியானதாக நான் செய்கிறேன்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

எந்த எந்த பக்தன், நம்பிக்கையுடன் எந்த எந்த வடிவத்தை அர்ச்சிக்க விரும்புகிறானோ, அவனுடைய அசையாத நம்பிக்கைக்குத் தக்க வடிவத்தை நான் மேற்கொள்ளுகிறேன்.


விளக்கம்:

: : 4க்த:எந்தெந்த பக்தன்; அதாவது துயருற்றவன்(ஆர்த) அல்லது பொருளின்பம் தேடுபவன்(அர்தார்த்தீ) என யாராக இருந்தாலும், யாம் யாம் தநும் —  எந்தவொரு குறிப்பிட்ட தெய்வ வடிவத்தை, ச்1ரத்34யா அர்சிதும் இச்ச2திநம்பிக்கையுடன் வழிபட விரும்புகிறானோ, அந்த நம்பிக்கையை நான் உறுதியானதாகச் செய்கிறேன் என்கிறார் பகவான். இங்கு பக்தன் தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதில் முழு அக்கறை கொண்டிருந்தாலும் அவனுக்கு கடவுளின் மீது சிரத்தையிருப்பதால் அவன் காமி அல்ல, பக்தனாகிறான். மனிதனுக்கு தேவையாயிருப்பது கடவுள் பக்தி. அவன் எத்தகைய வடிவத்தைக் கற்பித்துக்கொண்டாலும் அது கடவுளுக்குச் சம்மதம். யானை, குதிரை, பசு என பல்வேறு வடிவத்திலுள்ள மிட்டாய்களில் குழந்தைகளுக்கு விருப்பமானதை கடைக்காரன் அதற்கு அளிக்கிறான். அதே முறையில் பகவானும் பக்தனுக்கு உற்சாகம் ஊட்டுகிறார். சிறு தெய்வ வணக்கத்தையும் பாங்குடன் செய்தால் அது முடிவில் ஈஷ்வர ஆராதனையாகத் திருந்தியமைகிறது. பக்தனுடைய பக்தியைப் பெருக்குவது பகவானுடைய கருணையாகும்.


=> சிரத்தை:

எனவே இங்கு கடவுளின் மீதான நம்பிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. அத்தியாயம் நான்கில், முப்பத்தி ஒன்பதாவது சுலோகத்தில்(4.39) பகவான், சிரத்தையுள்ளவன் ஈஷ்வரனான எனக்கும் ஜீவனான தனிமனிதனுக்கும் உள்ள ஐக்கிய ஞானத்தை அடைகிறான் - ச்1ரத்3தா4வாந் லபதே ஞானம், என்கிறார். இந்த சுலோகத்தில், ஒரு பக்தன் எந்தவிதமான நம்பிக்கையுடன் உள்ளானோ அதை நான் அசைக்கமுடியாததாக உறுதியானதாக ஆக்குகிறேன் என்கிறார்தஸ்ய அசலாம் ச்1ரத்3தா4ம் வித3தா4மி அஹம். ஒரு குறிப்பிட்ட பலனுக்காக ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை வழிபடும்பொருட்டு யாருடைய சிரத்தையானது வெளிப்படுகிறதோ, அவனுடைய அந்த சிரத்தையை நான் உறுதியாக்குகிறேன். எப்படி? தேவையான பலன்களை அளிப்பதன் மூலம். ஒருகால் ஒருவன் ஒரு குறிப்பிட்ட வழிபாட்டுமுறையை பின்பற்றி பலனை வேண்டி, அதை அவன் பெறவில்லையெனில் அவனது சிரத்தையானது விரைவில் மறைந்துவிடும். ஆகவே பலன்களைக் கொடுப்பதன்மூலம் அது அவ்விதம் நடக்காமல் நான் உறுதிசெய்கிறேன் என பகவான் அடுத்த சுலோகத்தில் கூறுகிறார்.

----------------------------------------------------------------------------------------------------------------------------

||7.22|| நானே கர்மபலனைக் கொடுப்பவன் என்கிறார் பகவான்:

तया श्रद्धया युक्तस्तस्याराधनमीहते

लभते तत: कामान्मयैव विहितान्हितान् ।। २२ ।।

தயா ச்1ரத்34யா யுக்தஸ்தஸ்யாராத4நமீஹதே  

லப4தே தத: காமாந்மயைவ விஹிதாந்ஹிதாந் ।। 22 ।।


:  :  அந்த பக்தன்   तया श्रद्धया युक्त:   தயா ச்1ரத்34யா யுக்த:  அந்த சிரத்தையோடு கூடியவனாய்   

तस्य राधनम् ईहते   தஸ்ய ஆராத4நம் ஈஹதே  அந்த தேவதையின் ஆராதனையைச் செய்கிறான்   

तत:  தத:  அத்தேவதையிடமிருந்து   मया एव विहितान्  மயா ஏவ விஹிதாந்   என்னாலே வகுக்கப்பட்ட   

(1) तान् कामान्   தாந் காமாந்  அந்த ஆசைகளை   हि लभते  ஹி லப4தே   நிச்சயமாக அடைகிறான்.

(2)  हितान् कामान्   ஹிதாந் காமாந்  நன்மையான பொருளை/வேண்டத்தக்கவைகளை   लभते  லப4தே  அடைகிறான்.


சிரத்தையோடு கூடியவனாகிய அந்த பக்தன் அத்தேவதையை ஆராதித்து, அத்தேவதையிடமிருந்து தான் ஆசைப்பட்டவைகளை அடையப்பெறுகிறான். ஆயினும் அவ்வாசைப் பொருள்களை உண்மையில் வகுத்து வழங்குபவன் நானே.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

அவன் அந்த நம்பிக்கையுடன் கலந்து அவ்வடிவத்தை ஆராதித்து வேண்டுகிறான். அதனின்றும் தான் விரும்பியனவற்றை எய்துகிறான்; எனினும் அவற்றை வகுத்துக் கொடுப்போன் யானே.


விளக்கம்:

ஈஷ்வரனாக விளங்கும் நானே அனைத்து கர்மபலனையும் வகுத்துக் கொடுக்கிறேன் என்கிறார் பகவான்

ஒரு குறிப்பிட்ட யக்ஞம் அல்லது வேதச்சடங்கிற்கு ஒரு குறிப்பிட்ட பலனை உறுதியளிக்கும் சாஸ்திரத்தில் நம்பிக்கையுடைய அந்த பக்தன்: யுக்த: தயா ச்1ரத்34யா. வேதத்தில் கொடுக்கப்பட்ட வழிமுறையானது அதற்கென கொடுக்கப்பட்டுள்ள பலனை உருவாக்கும் திறன் கொண்டது; அவைகளுக்கிடையேயான அந்த தொடர்பும் நிரந்தரமானது. இந்த நியதி, கர்மத்தின் கோட்பாடு ஈஷ்வரனே ஆகும். ஒரு குறிப்பிட்ட யக்ஞம் அல்லது வழிமுறை, புத்திரனுக்கானது மழைக்கானது ஆயுளுக்கானது சொர்க்கத்திற்கானது என ஒரு குறிப்பிட்ட பலனோடு இணைக்கப்பட்டுள்ளது எனும் இந்த தொடர்பு, ஈஷ்வரன் அருளிய சாஸ்திரத்திலிருந்து வெளிப்படுகிறது. இங்கு சிரத்தை என்பது அந்த இணைப்பை சந்தேகமில்லாமல் ஏற்றுக்கொள்வது - ‘இதைச் செய்தால் இது நடக்கும். எனவே இதைச் செய்கிறேன்என்பது அந்த பக்தனின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் அவன் அந்த தேவதையின் வழிபாட்டில் ஈடுபடுகிறான்தஸ்ய ஆராத4நம் ஈஹதே.

=> ஈஷ்வரனே கர்மபலனைத் தருகிறார்:

அந்த தெய்வத்திடமிருந்து தனது விருப்பத்திற்குரிய பொருளை அடைகிறான்லப4தே தத: காமாந். பொதுவாககாமஎன்பது ஆசை மற்றும் ஆசைக்குரிய பொருள் இரண்டையும் குறிக்கலாம். ஆனால் இங்கே அது விரும்பிய பொருட்களைக் குறிக்கிறது. அந்த பக்தன் வழிபட்ட தேவதையாக நானே இருக்கின்றேன் என்கிறார் கிருஷ்ணர்.

மயா ஏவ விஹிதாந் ஹி தாந் என்னாலேயே அவர்களின் வழிபாட்டின் பலன்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. மக்கள் நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்கிறார்கள் அல்லது வேதச்சடங்குகளைச் செய்கிறார்கள்; அதற்கான பலன்களை அடைகிறார்கள். இந்த பலன்கள் ஈஷ்வரனாகிய என்னால் தீர்மானிக்கப்படுகின்றன, ஆனால் அவை தாங்கள் வழிபட்ட தெய்வத்திடமிருந்து வந்தவை என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஈஷ்வரனை அங்கீகரிக்கவில்லை எனினும் பிரார்த்தனையின் பலனாக வேண்டியது கிடைத்ததனால் அவர்களின் சிரத்தை உறுதி பெறுகிறது. இதனால் அடுத்தமுறை இன்னும் பல மடங்கு நம்பிக்கையுடன் வழிபடுவார்கள்; ஒரு குறிப்பிட்ட முதிர்ச்சியை அடையும் வரை அவர்கள் இதனுள் சுழல்கிறார்கள்.  


=> இரு வகையான விளக்கம்:

விஹிதாந் ஹிதாந் காமாந் லப4தேஎன்ற இந்த பகுதிக்கு இரு வகையில் விளக்கமளிக்கலாம்.

(1) தாந் விஹிதாந் காமாந் லப4தே ஹிஅவர்கள் அந்த பலன்களை அடைகிறார்கள் ஏனெனில் அது என்னாலே வகுக்கப்பட்டது. இங்குஹிஎன்பதற்கும் இரு பொருள் கொடுக்கலாம். (i) ஏனெனில், (ii) நிச்சயமாக.

சர்வத்தையும் அறிந்த பரமேஷ்வரனால் நிர்ணயிக்கப்படுவதால் செய்யப்பட்ட கர்மத்திற்கு ஏற்ற துல்லியமான பலனை ஒருவன் அடைகிறான். சில சமயங்களில் ஒரே செயலுக்கு வெவ்வேறு முடிவுகளை நம்மால் பார்க்க முடியும். உதாரணமாக, புத்திர பாக்கியத்தை அளிக்கும்புத்திர-காமேஷ்டிசடங்கை இருவர் செய்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். அதில் ஒருவருக்கு அழகான, புத்திசாலியான மற்றும் ஆரோக்கியமான மகனும், இனியொருவருக்கு பார்வை குறைபாடுள்ள மகனும் பிறக்கிறான். இதில் இரண்டாமானவர் செய்த சடங்கில் சில குறைபாடுகள் இருந்திருக்கலாம். ஒரு குறிப்பிட்ட சடங்கு ஒரு குறிப்பிட்ட பலனை உருவாக்குகிறது எனினும் அதை அவன் எவ்விதம் செய்கிறான், அது குறித்த அவனது புரிதல் எந்த அளவில் உள்ளது என்பதும் முடிவின் தன்மையைத் தீர்மானிக்கிறது. உதாரணமாக வேள்விக்கான தானம் வழங்கும்போது அவனது அணுகுமுறை - முழு மனதுடன் கொடுக்கிறானா அல்லது இழக்கும் உணர்வு மேலெழ கொடுக்கிறானா, அவனுடைய நம்பிக்கை, அவனது அறிவு, செயல்திறன், அச்சடங்கைச் செய்யும் முறை என அனைத்தும் வெவ்வேறு அளவுகளில் இருப்பதால் அதற்கேற்ற முடிவுகளைப் பெறுகிறார்கள். சகலத்தையும் அறிந்தவனாகிய இறைவன் பலனைத் தருவதால், செய்யப்படும் செயலுக்கு ஏற்ற துல்லியமான முடிவு வந்தமைகிறது.

(2) இதில் இரண்டாவது வாசிப்பில்ஹிமற்றும்தாந்என்பது சேர்த்துஹிதாந்என ஒற்றைச் சொல்லாக வாசிக்கப்படுகிறது. விஹிதாந் ஹிதாந் காமாந் லப4தேநன்மையை தரும் முடிவுகளை அடைகிறான். ‘ஹிதஎனில் ஒருவனுக்கு நன்மையைத் தருவது. உண்மையில் ஆசை என்பது ஒருவனுக்கு நன்மையைத் தருவது அல்ல என சங்கரர் இந்த இடத்தில் எச்சரிக்கிறார். தனது சுய சொரூபத்திற்கு வேறான எந்தவொரு ஆசையும் ஆசைக்குரிய பொருளும் நன்மையைத் தருபவை அல்ல. ஏனெனில் அந்த ஆசை நிறைவேறவில்லையெனில் அது வேதனைக்குரியதாகிறது. ஒருகால் அந்த விருப்பத்திற்குரிய பொருளை அடைந்தாலும் காலநகர்வின் காரணமாக அது முடிவை அடையும்போது துக்கத்தை தருகிறது. எதற்கும் எல்லையென்று ஒன்று இருப்பதால் அது ஹிதம் அல்ல, விருப்பதிற்குரியது அல்ல. இதை பகவான் அடுத்த சுலோகத்தில் விளக்குகிறார்.

----------------------------------------------------------------------------------------------------------------------------