வெள்ளி, 27 நவம்பர், 2020

அர்ஜுந விஷாத யோகம் 1.41 - 1.47

||1.41||

अधर्माभिभवात्कृष्ण प्रदुष्यन्ति कुलस्त्रियः

स्त्रीषु दुष्टासु वार्ष्णेय जायते वर्णसङ्करः ४१

அத4ர்மாபி44வாத்க்ருஷ்ண ப்ரது3ஷ்யந்தி குலஸ்த்ரிய:  

ஸ்த்ரீஷு து3ஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸங்கர: ।। 41 ।।

அதர்மம் மிகுதலால் குலப்பெண்கள் கற்பிழக்கின்றனர். கிருஷ்ணா! மாதர் கற்பிழக்குமிடத்து வர்ணக்கலப்பு உண்டாகிறது.

சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

கண்ணா, அதர்மம் சூழ்வதனால் குல ஸ்திரீகள் கெட்டுப் போகிறார்கள். விருஷ்ணி குலத் தோன்றலே, மாதர் கெடுவதனால் வர்ணக் குழப்பமுண்டாகிறது.

-------------------------------------------------------------------------------------------------------------------------

||1.42||

सङ्करो नरकायैव कुलघ्नानां कुलस्य

पतन्ति पितरो ह्येषां लुप्तपिण्डोदकक्रियाः ४२

ஸங்கரோ நரகாயைவ குலக்4நாநாம் குலஸ்ய

பதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்தபிண்டோ33கக்ரியா: ।। 42 ।। 

கலப்பினால் குலத்தார்க்கும் அதனை அழித்தார்க்கும் நரகமே ஏற்படுகிறது. அவர்களுடைய பித்ருக்கள் பிண்டத்தையும் நீரையும் இழந்து வீழ்கிறார்கள்.

சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

அக்குழப்பத்தால் குலத்தார்க்கும் அதனை அழித்தார்க்கும் நரகமேற்படுகிறது. இவர்களுடைய பிதிர்க்கள் பிண்டமும் நீருமின்றி வீழ்ச்சி பெறுகிறார்கள்.

விளக்கம்:

மரணமடைந்தவர்கள் கொஞ்சகாலம் பித்ருலோகத்தில் வசிக்கின்றனர். அவர்களையும், பித்ருலோகத்தில் அவர்களைச் சூழ்ந்திருப்பவர்களையும் குறித்து எண்ணும் நல்லெண்ணம் அவர்களுக்குச் சகாயம் செய்கிறது. இச்செயல் சிராத்தம் என்று சொல்லப்படுகிறது. முன்னோர்களைக் குறித்து எழும் நல்லெண்ணம் உறுதிப்படுதற்பொருட்டுப் பிண்டம், ஜலம் முதலிய பண்டங்கள் கையாளப்படுகின்றன. மற்றும் பல மனிதர்களுடைய நல்லெண்ணங்களை அவ்வேளையில் துணை கொள்ளுதற்பொருட்டு வறியோர்க்கும் மற்றவர்க்கும் சிராத்த காலங்களில் உணவளிக்கப்படுகிறது.

-------------------------------------------------------------------------------------------------------------------------

||1.43||

दोषैरेतैः कुलघ्नानां वर्णसङ्करकारकैः

उत्साद्यन्ते जातिधर्माः कुलधर्माश्च शाश्वताः ४३

தோ3ஷைரேதை : குலக்4நாநாம் வர்ணஸங்கரகாரகை:  

உத்ஸாத்3யந்தே ஜாதித4ர்மா : குலத4ர்மாச்1 சா1ச்1வதா: ।। 43 ।। 

குலநாசகர்கள் செய்யும் வர்ணக் கலப்பை விளைவிக்கும் இக்கேடுகளால் நிலைத்துள்ள ஜாதி தர்மங்களும் குல தர்மங்களும் நிலைகுலைக்கப்படும்.

சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

வர்ணக் குழப்பமுண்டாகும்படி குலக் கேடர் செய்யும் இக்குற்றங்களால் ஜாதி தர்மங்களும் தொன்று தொட்டுள்ள குலதர்மங்களும் எடுபட்டுப் போகின்றன.

-------------------------------------------------------------------------------------------------------------------------

||1.44||

उत्सन्नकुलधर्माणां मनुष्याणां जनार्दन

नरके नियतं वासो भवतीत्यनुशुश्रुम ४४

உத்ஸந்நகுலத4ர்மாணாம் மநுஷ்யாணாம் ஜநார்த3  

நரகே நியதம் வாஸோ 4வதித்யநுசு1ச்1ரும ।। 44 ।।

ஜனார்தனா! குலதர்மத்தை இழந்தவர் நரகத்தில் நெடிது வசிக்கின்றனர் என்று கேட்டிருக்கிறோம்.

சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

ஜநார்த்தனா! குலதர்மங்கள் எடுபட்டுப் போன மனிதருக்கு எக்காலும் நரகத்தில் வாசமென்று கேள்விப்படுகிறோம்.

-------------------------------------------------------------------------------------------------------------------------

||1.45||

अहो बत महत्पापं कर्तुं व्यवसिता वयम्

यद्राज्यसुखलोभेन हन्तुं स्वजनमुद्यताः ४५

அஹோ 3 மஹத்பாபம் கர்தும் வ்யவஸிதா வயம்

யத்3ராஜ்யஸுக2லோபே4 ஹந்தும் ஸ்வஜநமுத்3யதா: ।। 45 ।। 

அரசசுக ஆசையினால் சுற்றத்தாரைக் கொல்லத்துணிதல் என்ற பெரும் பாபத்தைச் செய்யத் தலைப்பட்டோம், அந்தோ!

சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

அந்தோ! அரசவின்பத்தை விழைந்து சுற்றத்தாரைக் கொல்ல முற்படும் நாம் பெரிய பாவஞ் செய்யத் தலைப்பட்டோம்!

-------------------------------------------------------------------------------------------------------------------------

||1.46||

यदि मामप्रतीकारमशस्त्रं शस्त्रपाणयः

धार्तराष्ट्रा रणे हन्युस्तन्मे क्षेमतरं भवेत् ४६

யதி3 மாமப்ரதீகாரமச1ஸ்த்ரம் 1ஸ்த்ரபாணய:  

தா4ர்தராஷ்ட்ரா ரணே ஹந்யுஸ்தந்மே க்ஷேமதரம் 4வேத் ।। 46 ।।

எதிர்க்காமலும் ஆயுதமில்லாமலும் இருக்கிற என்னைக் கையில் ஆயுதம் பிடித்துத் திருதராஷ்டிர மக்கள் யுத்தத்தில் கொல்லுவார்களானால் அதுவே எனக்குப் பெருநன்மையாகும்.

சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

கையிலாயுதமில்லாமல், எதிர்க்காமல் நிற்குமென்னை இந்தத் திருதராஷ்டிரக் கூட்டத்தார் ஆயுதபாணிகளாய்ப் போரில் மடித்துவிடினும் அது எனக்குப் பெரிய நன்மையேயாம்.”

விளக்கம்:

இக்கூற்றானது அளவுக்கு மிஞ்சிய மனக்குழப்பத்தின் அறிகுறியாகும்.

-------------------------------------------------------------------------------------------------------------------------

||1.47||

सञ्जय उवाच 

एवमुक्त्वार्जुनः सङ्ख्ये रथोपस्थ उपाविशत्

विसृज्य सशरं चापं शोकसंविग्नमानसः ४७

ஸஞ்ஜய உவாச 

ஏவமுக்த்வார்ஜுந : ஸங்க்2யே ரதோ2பஸ்த2 உபாவிச1த்  

விஸ்ருஜ்ய ஸச1ரம் சாபம் சோ1கஸம்விக்3நமாநஸ: ।। 47 ।।

சஞ்ஜயன் சொன்னது: இங்ஙனம் இயம்பி, அம்பையும் வில்லையும் அரங்கத்தில் எறிந்துவிட்டுத் துயரம் துய்க்கும் மனத்தினனாய் அர்ஜுனன் தேர்த்தட்டில் உட்கார்ந்தான்.

சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

சஞ்ஜயன் சொல்லுகிறான்: செருக்களத்தில் இவ்வாறு சொல்லிவிட்டுப் பார்த்தன் அம்புகளையும் வில்லையும் எறிந்து போட்டுத் துயரில் மூழ்கிய மனத்தனாய்த் தேர்ப்பீடத்தின் மேலுட்கார்ந்து கொண்டான்.

-------------------------------------------------------------------------------------------------------------------------

ऒं तत्सत् इति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे 

श्रीकृष्णार्जुनसंवादे अर्जुनविषादयोगो नाम प्रथमोऽध्याय: ।।

ஓம் தத் ஸத்   இதி ஶ்ரீமத்343வத்3கீ3தாஸு உபநிஷத்ஸு ப்3ரஹ்மவித்3யாயாம் யோக3சா1ஸ்த்ரே ஶ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே3 அர்ஜுநவிஷாத3யோகோ3 நாம ஸப்தமோऽத்4யாய: ।।

ப்ரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஶ்ரீ கிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத் கீதை என்னும் உபநிஷத்தின்கண் அர்ஜுந விஷாத யோகம் என்ற முதலாம் அத்தியாயம்.

-------------------------------------------------------------------------------------------------------------------------