புதன், 25 நவம்பர், 2020

அர்ஜுந விஷாத யோகம் 1.21 - 1.30

||1.21|| அர்ஜுனனின் கோரிக்கை:

हृषीकेशं तदा वाक्यमिदमाह महीपते

अर्जुन उवाच

सेनयोरुभयोर्मध्ये रथं स्थापय मेऽच्युत २१

ஹ்ருஷீகேச2ம் ததா3 வாக்யமித3மாஹ மஹீபதே ।

அர்ஜுன உவாச

ஸேநயோருப4யோர்மத்4யே ரத2ம் ஸ்தா2பய மேऽச்யுத ।। 21 ।।

திருதராஷ்டிர அரசே! கிருஷ்ணனுக்கு இச்சொல்லை உரைத்தான்.

அர்ஜுனன் சொன்னது

அச்யுதா, படைகளிரண்டுக்குமிடையில்  என் தேரை நிறுத்துக.

சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

அர்ஜுனன் சொல்லுகிறான்: “அச்சுதா, படைகளிரண்டுக்கும் நடுவே என் தேரைக் கொண்டு நிறுத்துகஎன்று. (கேளாய், திருதராஷ்டிர ராஜனே!)

விளக்கம்:

தன் பெருநிலையிலிருந்து இறங்காதவன் என்ற பொருளைத் தரும்அச்யுதன்என்ற சொல் விஷ்ணுவுக்கு அமைந்துள்ள பல பெயர்களில் ஒன்று.

-------------------------------------------------------------------------------------------------------------------------

||1.22||

यावदेतान्निरीक्षेऽहं योद्धुकामानवस्थितान्।

कैर्मया सह योद्धव्यमस्मिन्रणसमुद्यमे २२

யாவதே3தாந்நிரீக்ஷேऽஹம் யோத்3து4காமாநவஸ்தி2தாந்

கைர்மயா ஸஹ யோத்34வ்யமஸ்மிந்ரணஸமுத்3யமே ।। 22 ।।

இப்போரில் நான் யாரோடு யுத்தம் செய்ய வேண்டுமென்பதையும் போரை விரும்பி முன்னிற்போர் யார் என்பதையும் கவனிக்கிறேன்.

சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

சமரை விரும்பி நிற்கும் இவர்களை நான் பார்க்க வேண்டும். இந்தப் போர்த் தொடக்கத்தில் என்னோடு போர் செய்யக் கடவோர் யார்?”

-------------------------------------------------------------------------------------------------------------------------

||1.23||

योत्स्यमानानवेक्षेऽहं एतेऽत्र समागताः।

धार्तराष्ट्रस्य दुर्बुद्धेर्युद्धे प्रियचिकीर्षवः २३

யோத்ஸ்யமாநாநவேக்ஷேऽஹம் ஏதேऽத்ர ஸமாக3தா:  

தா4ர்தராஷ்ட்ரஸ்ய து3ர்பு3த்3தே4ர்யுத்3தே4 ப்ரியசிகீர்ஷவ: ।। 23 ।।

துஷ்டபுத்தியுடைய திருதராஷ்டிர புதல்வனுக்குப் பிரியம் செய்ய விருப்பமுடையவர்களாய் போர்புரிய இங்குத் திரண்டிருப்போரை நான் காணவேண்டும்.

சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

கெட்ட மதிகொண்ட துரியோதனனுக்குப் பிரீதி செய்யும் வண்ணம், இங்கு போர் செய்யத் திரண்டு நிற்போரை நான் காண வேண்டும்என்றான்.

விளக்கம்:

அளவுக்கு மிஞ்சிய ஊக்கம் விரைவில் சோர்வை உண்டு பண்ணக்கூடியது. இனி வரப்போகும் மனத்தளர்ச்சிக்கு முன்னறிகுறியாக அர்ஜுனனுக்கு அளவில்லாப் போர்த்திறம் பிறக்கிறது. ஆகவே, தன்னை எதிர்ப்பார் யார் என்று காண அவன் காமுறுகிறான்.

-------------------------------------------------------------------------------------------------------------------------

||1.24||

सञ्जय उवाच

एवमुक्तो हृषीकेशो गुडाकेशेन भारत

सेनयोरुभयोर्मध्ये स्थापयित्वा रथोत्तमम् २४

ஸஞ்ஜய உவாச

ஏவமுக்தோ ஹ்ருஷீகேசோ1 கு3டா3கேசே1 பா4ரத

ஸேநயோருப4யோர்மத்4யே ஸ்தா2பயித்வா ரதோ2த்தமம் ।। 24 ।।

சஞ்ஜயன் சொன்னது: திருதராஷ்டிரரே, இங்ஙனம் சொல்லப்பட்ட ஹிருஷீகேசர் மாண்புடைய அத்தேரை இரண்டு சேனைகளினுடைய மத்தியில் நிறுத்தினார்.

சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

சஞ்ஜயன் சொல்லிக்கொண்டு வருகிறான்: (கேளாய்) பரத நாட்டரசே, இங்ஙனம் பார்த்தனுரைத்துக் கேட்ட கண்ணன் மிகவும் மேன்மை கொண்ட அத்தேரை இரண்டு படைகளுக்குமிடையே கொண்டு நிறுத்தினான்.

விளக்கம்:

அர்ஜுனனுக்கு குடாகேசன், தூக்கத்தை வென்றவன் என்ற பெயர் உள்ளது. நினைத்தபடி நினைத்தபொழுது தூங்கவோ அல்லது தூங்காதிருக்கவோ அவனால் இயலும். மனத்தை வென்றவன் எதற்கும் கலங்கான். அத்தகைய மனவுறுதியுடையவனையும் கலக்கும்படியான பெரியதோர் போராட்டம் வரப்போகிறது என்பது அவனுக்குக் காண்பிக்கப்படுகிறது

-------------------------------------------------------------------------------------------------------------------------

||1.25||

भीष्मद्रोणप्रमुखतः सर्वेषां महीक्षिताम्

उवाच पार्थ पश्यैतान्समवेतान्कुरूनिति २५

பீ4ஷ்மத்3ரோணப்ரமுக2: ஸர்வேஷாம் மஹீக்ஷிதாம்  

உவாச பார்த2 பச்1யைதாந்ஸமவேதாந்குரூநிதி ।। 25 ।।

பீஷ்மருக்கும் துரோணருக்கும் மற்ற எல்லா வேந்தர்களுக்கு எதிரிலும் தேரை நிறுத்தி, ‘பார்த்தா! கூடியுள்ள இக்கெளரவர்களைப் பார்எனக் கூறினார்.

சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

பீஷ்மனுக்கும் துரோணனுக்கும் மற்றெல்லா வேந்தருக்குமெதிரே தேரை நிறுத்திக்கொண்டு, “பார்த்தா! இங்குக் கூடி நிற்கும் கௌரவரைப் பார்!” என்றான்.

-------------------------------------------------------------------------------------------------------------------------

||1.26||

तत्रापश्यत्स्थितान्पार्थः पितॄनथ पितामहान्

आचार्यान्मातुलान्भ्रातॄन्पुत्रान्पौत्रान्सखींस्तथा २६

தத்ராபச்1யத்ஸ்தி2தாந்பார்த2: பித்ரூநத2 பிதாமஹாந்

ஆசார்யாந்மாதுலாந்ப்4ராத்ரூந்புத்ராந்பௌத்ராந்ஸகீ2ம்ஸ்ததா2 ।। 26 ।।

அங்கு பார்த்தன் தகப்பன்மார்களையும் பாட்டன்மாரையும் ஆசாரியர்களையும் மாதுலரையும் அண்ணன் தம்பிகளையும் மக்களையும் பேரர்களையும் தோழர்களையும் பார்த்தான்.

சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

அங்குப் பார்த்தன் தன்னுடைய தந்தையாரும், பாட்டன்மாரும், குருக்களும், மாதுலரும், அண்ணன் தம்பிகளும், மக்களும், பேரரும், தோழர்களும் நிற்பது கண்டான்.

-------------------------------------------------------------------------------------------------------------------------

||1.27||

श्वशुरान्सुहृदश्चैव सेनयोरुभयोरपि

तान्समीक्ष्य कौन्तेयः सर्वान्बन्धूनवस्थितान् २७

ச்1வசூ1ராந்ஸுஹ்ருத3ச்1சைவ ஸேநயோருப4யோரபி

தாந்ஸமீக்ஷ்ய கௌந்தேய: ஸர்வாந்ப3ந்தூ4நவஸ்தி2தாந் ।। 27 ।।

அங்ஙனமே மாமனார்களையும் அன்பர்களையும் இரண்டு சேனைகளிலும் நிற்கக் கண்டான். குந்தியின் மகனாகிய அர்ஜுனன் நிற்கின்ற பந்துக்கள் எல்லாரையும் உற்றுப் பார்த்து

சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

அங்ஙனமே மாமன்மாரும், நண்பர்களும், உறவினரெல்லாரும் இரண்டு படைகளிலும் நிற்கக் கண்டு, குந்தி மகனாகிய அப்பார்த்தன் மிகவும் இரக்கமுற்றவனாய்த் துயருடன் சொல்லுகிறான்:

-------------------------------------------------------------------------------------------------------------------------

||1.28|| அர்ஜுனனது தடுமாற்றம்:

कृपया परयाऽविष्टो विषीदन्निदमब्रवीत्

अर्जुन उवाच

दृष्ट्वेमं स्वजनं कृष्ण युयुत्सुं समुपस्थितम् ॥२८॥

க்ருபயா பரயாऽவிஷ்டோ விஷீத3ந்நித3மப்3ரவீத்

அர்ஜுன உவாச

த்3ருஷ்ட்வேமம் ஸ்வஜநம் க்ருஷ்ண யுயுத்ஸும் ஸமுபஸ்தி2தம் ।। 28 ।।

(நிற்கின்ற பந்துக்களையெல்லாம் பார்த்த அர்ஜுனன்), பேரிக்கம் படைத்தவனாய் விசனத்துடன் இங்ஙனம் பகர்ந்தான்.

அர்ஜுனன் சொன்னது: கிருஷ்ணா! போர்புரிதற்குக் கூடியுள்ள உற்றாரைப் பார்த்து … 

சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

அர்ஜுனன் சொல்லுகிறான்: கண்ணா, போர் செய்ய வேண்டு இங்கு திரண்டு நிற்கும் சுற்றத்தார்களைக் கண்டு

விளக்கம்:

கிருஷ்ணன் என்கிற சொல்லுக்கு கீழ்கண்ட மூன்று அர்த்தங்கள் உள்ளன:

(1) கருநீல வண்ணமுடையவன்.

(2) கிருஷ் = ஸத்; () = ஆனந்தம். சச்சிதானந்த சொரூபம், ப்ரம்ம சொரூபம்.

(3) அடியார் படும் துயரம் துடைப்பவன்.

-------------------------------------------------------------------------------------------------------------------------

||1.29|| அர்ஜுனன் தனது நடுக்கத்தை விவரித்தல்:

सीदन्ति मम गात्राणि मुखं परिशुष्यति

वेपथुश्च शरीरे मे रोमहर्षश्च जायते ॥२९॥

ஸீத3ந்தி மம கா3த்ராணி முக2ம் பரிசு1ஷ்யதி  

வேபது2ச்1 1ரீரே மே ரோமஹர்ஷச்1 ஜாயதே ।। 29 ।।

(போர்புரிய நிற்கும் என் உற்றாரை பார்த்து), என் உறுப்புகள் சோர்வடைகின்றன; வாயும் வறள்கிறது. என் உடலில் நடுக்கமும் மயிர்ச்சிலிர்ப்பும் உண்டாகின்றன

சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

என் அவயங்கள் சோர்கின்றன. என் வாய் உலர்கிறது. என்னுடம்பு நடுங்குகிறது. மயிர் சிலிர்க்கிறது.

-------------------------------------------------------------------------------------------------------------------------

||1.30||

गाण्डीवं स्रंसते हस्तात्त्वक्चैव परिदह्यते

शक्नोम्यवस्थातुं भ्रमतीव मे मनः ३०

கா3ண்டீ3வம் ஸ்ரம்ஸதே ஹஸ்தாத்த்வக்சைவ பரித3ஹ்யதே

1க்நோம்யவஸ்தா2தும் ப்4ரமதீவ மே மந: ।। 30 ।।

கையிலிருந்து காண்டீபம் நழுவுகிறது. மேலெல்லாம் தோலும் எரிகிறது. என்னால் நிற்க இயலவில்லை. மனது சுழல்கிறது.

சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

காண்டீவம் கையிலிருந்து நழுவுகிறது. உடம்பில் எரிச்சலுண்டாகிறது. என்னால் நிற்க முடியவில்லை. என் மனம் சுழலுகிறது.

-------------------------------------------------------------------------------------------------------------------------