திங்கள், 14 அக்டோபர், 2024

பக்தி யோகம் 12.8 - 12.9

||12.8|| பகவானின் அறிவுரைகள்:

मय्येव मन आधत्स्व मयि बुद्धिं निवेशय

निवसिष्यसि मय्येव अत ऊर्ध्वं संशय: ।। ।।

மய்யேவ மந ஆத4த்ஸ்வ மயி பு3த்3தி4ம் நிவேச1  

நிவஸிஷ்யஸி மய்யேவ அத ஊர்த்4வம் ஸம்ச1: ।। 8 ।।


मयि एव  மயி ஏவ  என்னிடத்திலேயே     मन:  மந: மனதை     आधत्स्व  ஆத4த்ஸ்வ  நிறுத்தி வை    मयि  மயி  என்னிடத்தில்    बुद्धिं  பு3த்3தி4ம்  புத்தியை     निवेशय  நிவேச1  செலுத்து     

अत: ऊर्ध्वं  அத: ஊர்த்4வம்  இனி     मयि एव  மயி ஏவ  என்னிடத்திலேயே    

निवसिष्यसि  நிவஸிஷ்யஸி  வசிப்பாய்    संशय:  ஸம்ச1:  சந்தேகமில்லை.


என்னிடத்தே மனதை வைத்து என்னிடத்து புத்தியைச் செலுத்துக. பின்பு என்னிடத்தே வசிப்பாய் என்பதில் சந்தேகமில்லை.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

மனதை என்பால் நிறுத்து; மதியை என்னுட் புகுத்து, இனி நீ என்னுள்ளே உறைவாய்; ஐயமில்லை.


விளக்கம்:

மரணத்துடன் கூடிய சம்சார சமுத்திரத்திலிருந்து விடுபட, ஒரு ஜீவன் செய்யவேண்டியதென்ன என்பதற்கான விடையாக, அல்லது அர்ஜுனனுக்கு கொடுக்கின்ற அறிவுரையாக, இந்த சுலோகம் வருகிறது.

மயி ஏவஎன்னிடத்திலே மட்டும். என்னிடம் என்பது இங்குவிஷ்வரூபமான ஈஷ்வரனிடம்என்பதைக் குறிக்கிறது. நிர்குணமான என்னை நினைக்க இயலாததால், ஒரு படி கீழிறங்கிய நான்காவதான இந்த நிலையில், விஷ்வரூபமாக என்னை நினைத்து, ‘மனதை என்னிடத்தில் ஒப்படைப்பாயாகமந: ஆத4த்ஸ்வ, என்கிறார். பொதுவாக மனம் மற்றும் புத்தி, இவையிரண்டும் எண்ணங்களே; இரண்டுமே அந்த-கரணத்தையே குறிக்கின்றன. ஆனால் இங்கு குறிக்கப்படுவதைப் போல தனித்தனியாக சுட்டிக் காட்டப்படும்போது ஒவ்வொன்றும் அதற்கேயுண்டான பிரத்யேக பொருளைக் கொண்டதாக அல்லது சிந்தனையின் செயல்முறையில் வேறுபாடுடையதாக ஆகிறது. அதன்படி, உணர்ச்சி மயமாயிருப்பது மனம்; இதுவா அல்லது அதுவா என்ற சங்கல்ப ரூபமாக இருப்பது மனம்சங்கல்ப-விகல்ப-ஆத்மகம். தீர்மானிக்கும் தன்மையுடையது புத்திநிச்1சயாத்மிகா


=> உணர்வு-ரீதியாக சார்ந்திருத்தல்:

எனவே உணர்வு மயமான மனதை என்னிடத்தில் நிலைநிறுத்துவாயாக. உயர்வு தாழ்வு, அவமானம், துக்கம், பாதுகாப்பு, பயம், அன்பு, ஆதரவு அல்லது ஆரோக்கியம் என எதுவாயினும், உனது உணர்ச்சி ரீதியான தேவைகள் அனைத்தையும் என்னிடமிருந்தே எடுத்துக் கொள், என்கிறார். இவைகளை நாம் பெற்றோர்கள், பிள்ளைகள் அல்லது உறவினர்கள் என உலகத்தவரிடமிருந்து எதிர்பார்க்கும்போது சில சமயங்களில் அது கிடைக்கலாம்; பல சமயங்களில் அது ஏமாற்றமும் ஏக்கமுமாக மிஞ்சலாம். ஆனால் பிரபஞ்ச வடிவினனான நான் அனைத்துமாக, எங்கும் வியாபித்து இருப்பதால் உனது தேவைகள் எதுவாக இருந்தாலும் என்னிடமிருந்து எடுத்துக் கொள். நீ இந்த உலகை கொடுப்பதற்கு மட்டுமென பயன்படுத்திக் கொள். அன்பு, கவனிப்பு, பாதுகாப்பு முதலியவற்றை கொடுக்கும் களமாக மட்டும் உலகையும் மக்களையும் வைத்துக் கொள். மற்றபடி உனக்கு எது வேண்டுமானாலும் அதை என்னிடமிருந்து எடுத்துக் கொள். ஒவ்வொருவருக்கும் அவரவரது கடமைகள் உள்ளன; எனவே அவர்கள் வேண்டிய நேரத்தில் வேண்டிய இடத்தில் குறிப்பிட்ட ஒருவருக்காக இருக்கமுடியாது. ஆனால் விஷ்வரூப-ஈஷ்வரனோ எங்கும் இருப்பதால் இறைவனை இழக்கவே முடியாது. ஆகவே, விஷ்வரூப ஈஷ்வரனான என்னைச் சார்ந்திருக்க உணர்ச்சிப்பூர்வமாகக் கற்றுக்கொள் என்று கிருஷ்ணர் கூறுகிறார்.


=> புத்தியை செலுத்துதல்:

மயி பு3த்3தி4ம் நிவேச1எனில் புத்தியை பகவானிடம் செலுத்து என்பது பொருள். ஒருவனது புத்தியும் பகவானின் விஷ்வரூப இயல்பை நிச்சயிக்க வேண்டும். அனைத்தும் இறைவன் என வெறுமனே கண்மூடித்தனமாக நீண்டகாலம் சொல்லமுடியாது. மனிதன் என்பவன் பகுத்தறிவுடைய உயிரினம். எனவே அவனது புத்தியானது அவனை கேள்வி கேட்கும். அதை சமாதானப்படுத்துவதற்குரிய உறுதியான பதில் வேண்டும். ஆகவேதான் சாஸ்திர கல்வி அவசியம். ஈஷ்வரனைப் பற்றிய அறிவில்லாமல் அவரிடம் கொண்ட பக்தி எளிதில் அசைக்கப்படலாம்; தகர்க்கப்படலாம். ஆனால் பக்தியானது புரிதலின் அடிப்படையில் அமையும்போது அது ஒருபோதும் அசைக்கப்படாது. அப்படிப்பட்ட திடமான புரிதலை அடைய ஒருவன் சாஸ்திரத்தைப் பயில வேண்டும். சுருதியை விசாரம் செய்வதனால் மட்டுமே ஒருவன் இந்த நிச்சயத்தை அடைய முடியும். எனவேதான் கீதையில் ஏழாவது, ஒன்பதாவது, பத்தாவது மற்றும் பதினொன்றாவது அத்தியாயத்தில் பகவான் கூறும் உபதேசங்களை நன்கு புரிந்து கொள்ளுதல் வேண்டும்

உபதேசத்தின் சாரம் என்ன? இறைவன் இவ்வுலகின் மூலகாரணமான வரையறுக்கப்பட்டார் - நிமித்த மற்றும் உபாதான காரணம் இரண்டுமாக அவரே இருக்கிறார். பகவான் காரணம்; மற்றும் இந்த முழு பிரபஞ்சமும் காரியம், அதாவது விளைவு. காரியம் காரணத்திலிருந்து வேறுபட்டதல்ல என்பதை பார்த்துள்ளோம். கார்யரூபம் ஜக3த்; காரண ரூபத்வத் ஈஷ்வர: பிந்நம் 4விதும் அர்ஹதி. எந்த காரியத்தையும் காரணத்திலிருந்து பிரிக்க முடியாது. எனவே ஆபரணங்களைக் கையாளும்போது ஒருவன், அதன் காரணமான தங்கத்தை மட்டுமே கையாளுகிறான். நாற்காலி உள்ளிட்ட மரச்சாமான்களை கையாளும் ஒருவன், அதன் மூலகாரணமான மரத்தையே கையாளுகிறான். பானைகளை கையாளும் ஒருவன் உண்மையில், களிமண்ணைத் தான் கையாளுகிறான். இவ்விதம், இந்த உலகைக் கையாளும் ஒருவன், அதன் ஒரே மூலகாரணமான ஈஷ்வரனையே கையாளுகிறான். எனவே ஆகாசம் ஈஷ்வரன்; வாயுவும் ஈஷ்வரன்; அக்னி ஈஷ்வரன். அனைத்தும் சிவமயம். இது சாஸ்த்திரத்தை கற்பதிலிருந்து கிடைக்கின்ற நிச்சயம்.

சாஸ்திரத்தை கற்கும் ஒருவன், தன்னை பரமேஷ்வரனுக்கு அர்ப்பணிக்கிறான். என்னை இலக்காகத் தேர்ந்தெடுத்ததையடுத்து, உனது மனம் என்மீது நிலைத்திருக்கட்டும், உன் புத்தி என்னுள் நுழையட்டும். எனவேமயி பு3த்3தி4ம் நிவேச1என்பது பரமேஷ்வரனை பற்றிய விசாரத்தில் ஈடுபடு என்பதைக் குறிக்கிறது. இதுதத் த்வம் அஸிஎனும் வேதாந்த விசாரத்திற்கு இட்டுச் செல்கிறது. எனவே கர்மயோக வாழ்க்கையின் மூலம் சகுண-ப்ரம்மத்தின் மீது மனதை நிறுத்தி வைத்து, பின்னர் புத்தியை ஈஷ்வர விசாரத்திற்கு அர்ப்பணிக்கும்போது, ‘என்னைஅறிந்து கொள்வதிலிருந்து அவனைத் தடுக்க எதனாலும் முடியாது

=> என்னிடத்தில் வாசம் செய்தல்:

அதன்பின், என்னிடத்திலேயே வசிப்பாய் என்பதில் சந்தேகமில்லைஅத: ஊர்த்4வம் மயி ஏவ நிவஸிஷ்யஸி ஸம்ச1:. இதை இருவகையில் பொருள் கொள்ளலாம்

  (1) இதை நான்காவதான நிலைக்கானதாக எடுத்துக் கொள்ளும்போது: ஈஷ்வரனை விஷ்வரூபமாக பார்க்கும் ஒருவன், அவரை எல்லா நேரத்திலும் எல்லா இடத்திலும் எல்லோருடனும் பார்க்கின்றான். அப்படியிருக்கையில்நான்இல்லாதநீஇல்லை என்பதால் எல்லா நேரத்திலும் என்னுடனே வசிக்கிறாய். கடலிலிருந்து அலை எப்போதும் விலகாதது போல

  (2) பொதுவானதாக எடுத்துக் கொள்ளும்போது, விஷ்வரூப தியானத்தின் பலனாக அவன் ஐந்தாவது நிலைக்கு முன்னேறி, ஞானயோகத்தைப் பின்பற்றி, ஞானநிஷ்டை அடைந்து ஜீவ-ஈஷ்வர ஐக்கியத்தை அடைகிறான். அவன் ஜீவனாகிய தன்னைப் பற்றிய தவறான கருத்தை முடிவுக்கு கொண்டுவருவதால், இனி ஒருபோதும் ஈஷ்வரனின் ஆத்மா மற்றும் ஜீவனின் ஆத்மா என்ற வேறுபாடு இல்லாது, தன்னை ஒரு வரையறைக்குட்படாத சுயமாக அறிந்து கொள்ளுதல் என்பது நிகழ்கிறது. இது ஈஷ்வரனுள் நுழைதல் அல்லது ஈஷ்வரனிடம் வசித்தல் ஆகிறது. இது தியானம் மற்றும் ஈஷ்வர விசாரத்துடன் கூடிய கர்ம-யோக வாழ்க்கையின் இறுதிப் பலனாகக் கிடைக்கிறது

இதில் எந்த சந்தேகமுமில்லைஎன்கிறார் பகவான். இந்த உபதேசத்தில் ஒருவன் என்ன செய்யவேண்டும் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. எனவேசந்தேகம் வேண்டாம்என தனியாகக் கூறத் தேவையில்லைதான். எனினும் சந்தேகம் கொண்டதினாலேயே அர்ஜுனன், ‘மோக்ஷத்திற்கு அருகில் யார் இருக்கிறார்கள்?’ என்ற கேள்வியைக் கேட்டதனால் பகவான் இங்கு, ‘இப்படி வாழ்ந்தால் என்னுள் நுழைவாய் என்பதில் சந்தேகமில்லைஎனக் கூறுகிறார்.

=> அடுத்த படிநிலை:

ஒருகால் ஒருவன் விஷ்வரூப-உபாசனையும் கடினமானதாக உள்ளது என எண்ணலாம். ஏனெனில் பகவானை விஷ்வரூபமாகக் காண ஒரு குறிப்பிட்ட மனமுதிர்ச்சி தேவை. பிரபஞ்சத்தையே ஈஷ்வரனாக மாற்றும் அளவுக்கு மனம் விரிந்திருக்க வேண்டும். அதாவது விருப்பு-வெறுப்பு இருக்கக் கூடாது; எதையும் குறைகூறாது, படைப்பின் ஒவ்வொரு பகுதியையும் தெய்விகமானதாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கவேண்டும். சரியான தகுதி இல்லையெனில், இது மிகவும் கடினமானதாகவே இருக்கும். அப்படிப்பட்டவர்கள் இன்னும் ஒரு படி கீழிறங்கி மூன்றாவது படிக்கு வரவேண்டும். இதை பகவான் அடுத்த சுலோகத்தில் விரித்துச் சொல்லுகிறார்


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

உலகத்தில் மனிதன் பிறக்கும்போது, வித்தியாகுணம் அவித்யாகுணம் என்ற இரண்டு குணங்களுடன் பிறக்கிறான். வித்தியாகுணம் முக்தியை அடையச் செய்யும். அவித்தியா குணமோ மனிதனை உலகப் பற்றுக்குள்ளாக்கும். பிறக்கும்போது இவ்விரு குணங்களும் தராசின் தட்டுகளைப் போலச் சரிசமமாக இருக்கும். சீக்கிரத்தில் உலக இன்பங்கள் ஒரு தட்டிலும் ஆத்ம விஷயங்கள் மற்றொரு தட்டிலும் ஏற்றப்படுகின்றன. மனம் உலக சுகங்களை விரும்புமானால் அவை வைக்கப்பட்டிருக்கும் தட்டு கனத்துக் கீழே செல்லும். அவ்வாறன்றி ஆத்ம விஷயத்தை மனம் பற்றுமானால் அவ்வாத்மா விஷயங்களடங்கிய தட்டு ஈஷ்வரனை நோக்கித் தாழும்.

---------------------------------------------------------------------------------------------

||12.9|| மூன்றாவது படிநிலை:

अथ चित्तं समाधातुं शक्नोषि मयि स्थिरम्

अभ्यासयोगेन ततो मामिच्छाप्तुं धनञ्जय ।। ।।

அத2 சித்தம் ஸமாதா4தும் 1க்நோஷி மயி ஸ்தி2ரம்

அப்4யாஸயோகே3 ததோ மாமிச்சா2ப்தும் 4நஞ்ஜய ।। 9 ।।


धनञ्जय  4நஞ்ஜய  தனஞ்ஜயா   अथ  அத2  இனி    मयि  மயி  என்னிடத்து    

चित्तं  சித்தம்  சித்தத்தை     स्थिरम्  ஸ்தி2ரம்  உறுதியாக    समाधातुं  ஸமாதா4தும்  நிறுத்துதற்கு     

शक्नोषि  1க்நோஷி  இயலாவிட்டால்     तत:  தத:  அப்பொழுது    

अभ्यासयोगेन  அப்4யாஸயோகே3  பழகுதல்(அப்யாசம்) எனும் யோகத்தால்   

माम्  மாம்  என்னை    आप्तुं  ஆப்தும்  அடைய    इच्छा  இச்சா2  இச்சைகொள்.         

  

தனஞ்ஜயா, இனிச் சித்தத்தை என்பால் உறுதியாக வைக்க இயலாவிடின் அப்யாசம் எனும் யோகத்தால் என்னை அடைய விரும்பு


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

என்னிடம் ஸ்திரமாக நின் சித்தத்தைச் செலுத்த நின்னால் முடியாதென்றால், பழகிப் பழகி என்னையடைய விரும்பு.


விளக்கம்:

=> இஷ்ட தேவதா பக்தி:

உள்ளத்தை உறுதியாக இறைவன்பால் வைக்க இயலாதவர்கள், அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மனதை தியானத்தில் ஈடுபடுத்தமுடியாதவர்கள், அல்லது விஷ்வரூப பக்தி செலுத்த இயலாதவர்கள் என்ன செய்யவேண்டும்

ஈஷ்வரனே இவ்வுலகின் உபாதான காரணமாக உள்ளார் என்கிற ஞானம் இருப்பவர்களே, நான்காவது படிநிலையான விஷ்வரூப பக்திக்கு தகுதியானவர்கள் ஆவர். சில நேரங்களில், இந்த அறிவு இருந்தபோதிலும் மிக இறுக்கமான விருப்பு-வெறுப்பு அவனை அந்நிலையில் இருக்கவிடாது. அப்போது அவன் அடுத்த படிநிலையான இஷ்ட-தேவதா பக்தியைக் குறிக்கும் மூன்றாவது படிக்கு வர வேண்டும்இங்கு அவரவர்களின் சம்ஸ்காரங்களுக்கு(வாசனைகளுக்கு) ஏற்ப, விநாயகர், முருகர், ராமர், ஐயப்பர் என அவரவர்களுக்கு இஷ்டமான ஒரு கடவுளைத் தேர்ந்தெடுத்து, அந்த நாமத்திலும் ரூபத்திலும் மனதை வைத்துப் பழகுதல் வேண்டும். இதில் பூஜை, ஜபம், யாத்திரை, இஷ்ட-தேவதையைக் குறித்த புராணக் கதைகளைப் படித்தல் முதலிய செயல்களை தனது ஆன்மீக சாதனைகளாகக் கொள்ளலாம். தன் உணர்வுகளை தனது இஷ்ட தெய்வத்திடம் பகிர்ந்து கொள்ளுதல், மற்றும் தந்தையாக நண்பனாக பாவிப்பதன் மூலம் தன்னிடமில்லாததை இஷ்ட தெய்வத்திடமிருந்து எடுத்துக் கொள்வது என தனது மனம் மற்றும் புத்தியை ஒரு ரூபத்தில் வைத்துப் பழகுதல் வேண்டும். எனவேதான் இது ஏக-ரூப ஈஷ்வர உபாசனை எனவும் அழைக்கப்படுகிறது. இப்படிப்பட்டவர்களே அடுத்த நான்காவது படிநிலையான விஷ்வரூப பக்தனாக உயர முடியும்


=> அப்யாச யோகம்:

சித்தத்தை என்பால் உறுதியாக வைக்க இயலவில்லையெனில்மயி சித்தம் ஸ்தி2ரம் ஸமாதா4தும் 1க்நோஷி. விஷ்வரூப ஈஷ்வரனாகிய என்னிடத்தில் தொடர்ந்து சீராக தியானம் மேற்கொள்ள இயலவில்லையென்றால், எனக் கூறி அதற்கான தனது உபாயத்தை கிருஷ்ணர் உரைக்கிறார். நான்காவது படி கடினமாக இருக்கும் பட்சத்தில் கவலைக் கொள்ளத்தேவையில்லை. ஒரு படிநிலை கீழிறங்கி மூன்றாவது படிநிலையான, ஏக-ரூப ஈஷ்வர உபாசனைக்கு வாருங்கள் என்கிறார். அதை அவர், ‘அப்4யாஸயோக3ம்என்ற சொல்லின்மூலம் குறிப்பிடுகிறார். ‘அப்4யாஸஎனில் ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்வது என்று பொருள், புந: புந:. இயந்திரத் தனமாக அல்லாமல் அதை விழிப்புணர்வுடன் செய்யவேண்டும். மனது உறுதியாக இறைவன்பால் நிலைத்து நின்றுவிடுமானால் அது முதிர்ந்த பக்தியாகிறது. அப்படியல்லாது அது விஷயாதிகளில் சலித்து ஓடும் தன்மை உடையதாக இருந்தால் பழக்கத்தால் அதை ஒழுங்குப்படுத்த வேண்டும். விஷயங்களிலிருந்து அதை மீட்டெடுத்து பகவானிடம் வைப்பதற்கு அப்யாச யோகம் என்று பெயர். நல்ல இயல்பு, கெட்ட இயல்பு இரண்டுக்கும் பழக்கமே காரணமாகிறது. உதாரணமாக, கார் அல்லது விமானம் என எதை ஓட்ட விரும்பினாலும் அதற்கு சரியான அளவு பயிற்சி தேவை. இங்கும் அப்படிதான். அப்யாசம் இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட தியானப் பொருளுடன் மனம் இருக்க முடியாது. தனது இயல்பினால் அது எல்லாப் பக்கமும் அலைகிறது.

மற்ற எல்லாவற்றிலிருந்தும் மனதை மீண்டும் மீண்டும் தியானப் பொருளுக்கு கொண்டு வரவேண்டும்என அப்யாச-யோகத்திற்கு சங்கரர் வரையறை கொடுக்கிறார். மனம் என்பது எளிதாக திசை திரும்பும் தன்மையுடையது. எனவேதான் அதை மீண்டும் மீண்டும் தியானப் பொருளுக்கு கொண்டுவருமாறு கூறப்படுகிறது. தியானம் என்பதன் வரையரையே, ‘மனதை மீண்டும் மீண்டும் தியானப் பொருளுக்குக் கொண்டுவருதல்என்பதாகும். ஒருகால் தியானத்தில் மனம் லயித்துப்போனால் அது சமாதி என்றழைக்கப்படுகிறது. எனவே மனம் தியானத்தில் அலைபாய்கிறது எனக் குறைகூறுதல் கூடாது. அதை பழக்கத்தின் மூலம் ஒரு இடத்தில் இருத்திப் பழகுதல் வேண்டும். பழக்கத்தால் ஆகாததை ஆகும்படிச் செய்யலாம்

ஐந்தாவது படி என்பது அரூப-ஈஷ்வர: மற்றும் நிதித்யாசனம். நான்காவது படி என்பது அநேக-ரூப-ஈஷ்வர: மற்றும் விஷ்வரூப உபாசனை. இங்கு மூன்றாவது படியாக வருவது ஏக-ரூப-ஈஷ்வர: மற்றும் இஷ்ட தேவதா உபாசனை. அதை பகவான் இங்கு அப்யாச யோகம் என்றழைக்கிறார்.

இந்த அப்யாச யோகத்தினால் என்னை அடைய விரும்புவாயாகஅப்4யாஸயோகே3 மாம் ஆப்தும் இச்சா2. எனவே இஷ்ட-தேவதா உபாசனையின் மூலம் என்னை அடைய ஆசை கொள்வாயாக; என்னை அடைவது மோக்ஷத்தை அடைவதாகும். இவ்விதமாக மோக்ஷத்தை அடைய முயற்சி செய்வாயாக


=> இஷ்ட-தேவதா-உபாசனையே மோக்ஷத்தை அடைவிக்குமா?

அப்யாச யோகமெனும் இந்த இஷ்ட-தேவதா உபாசனையின் மூலம் ஒருவன் முக்தியை அடைய முடியுமா? இந்த கேள்விக்கு பதில், ஆம் மற்றும் இல்லை. (1) இல்லை, ஏனெனில் இவ்வகை உபாசனையின் மூலம் ஒருவன் நேரடியாக மோக்ஷத்தை அடைய முடியாது. (2) ஆம், ஏனெனில் இஷ்ட-தேவதா-உபாசனை மூலம் மறைமுகமாக மோக்ஷத்தை அடையலாம். அதாவது இந்த உபாசனை ஒருவனை படிப்படியாக விஷ்வரூப உபாசனைக்கு வர உதவி செய்யும். விஷ்வரூப-உபாசனை அவனை இயற்கையாகவே நிர்குண-உபாசனைக்கு அதாவது வேதாந்த-விசாரத்திற்கு உயர்த்தி விடும்.

இனி, இந்த இஷ்ட-தேவதா உபாசனைக்கும் நான் தகுதியானவன் அல்ல என ஒருவன் கூறுகிறான் என வைத்துக் கொள்வோம். ஏனெனில் உபாசனை என்பது மனதினால் செய்யப்படும் செயல். அதற்கு சத்வ-குணம் அதிகமாக இருக்க வேண்டும். ஒருகால் ஒருவன் ரஜோ-குணப் பிரதானமானவனாக இருந்தால் அவனுக்கு ஓர் இடத்தில் அமைதியாக அமர்ந்து தியானம் செய்தல் என்பது சிரமமான காரியமாக இருக்கும். அவனது ரஜோ-குணமே அவனை செயல் செய்யத் தூண்டிக் கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவன், செயலை அடிப்படையாகக் கொண்ட அடுத்த படிநிலைக்கு வரலாம். பக்தியின் இரண்டாவது படிநிலை குறித்த விளக்கத்தை பகவான் அடுத்த சுலோகத்தில் எடுத்துரைகிறார்.    


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

ஒரு மனிதன் ஒரு நாயை வெகு பிரியமாக வளர்த்து வந்தான். அவன் அதனோடு கொஞ்சுவான்; விளையாடுவான். அதைக் கைகளில் தூக்கிக் கொண்டு போவான்; அதை முத்தமிடுவான். இந்த முட்டாள்தனத்தைக் கவனித்த ஓர் அறிஞர் நாயுடன் அப்படிப் பழகலாகாது என்றார். நாயின் சொந்தக்காரன் அதைக் கேட்டதும் நாயைத் தூர எறிந்துவிட்டான். இனி, அதனோடு கொஞ்சி குழாவுவதில்லை என்றும் தீர்மானித்தான். தன் எஜமானனது மாறிய மனதை நாய் அறியவில்லை. அது அடிக்கடி அவனிடம் ஓடிவந்து குலாவத் தலைப்பட்டது. நன்றாய்ப் பலதடவை அடிபட்ட பிறகுதான் அது தன் எஜமானனைத் தொந்தரவு செய்வதை விட்டது. உனது நிலைமையும் அப்படிப்பட்டதே. உன் மனதில் இதுவரையில் வைத்துப் போற்றி வந்த ஆசை என்னும் நாயை நீ விடவேண்டுமென்றாலும் அது உன்னை எளிதில் விடாது; இருந்தாலும் பாதகமில்லை. அந்த நாயோடு இனிமேல் கொஞ்சிக் குலாவாது, உன்னிடன் அது குலாவ வரும்போதெல்லாம் அதை நன்றாய் அடி. காலக்கிரமத்தில் அதனுடைய தொந்தரைகள் உனக்கு முற்றிலும் இல்லாமலே அகன்றொழியும்.

---------------------------------------------------------------------------------------------