புதன், 11 செப்டம்பர், 2024

விஷ்வரூபதர்ஷன யோகம் 11.52 - 11.55

||11.52|| வாய்ப்பை பயன்படுத்த வேண்டிய முறை:

श्री भगवानुवाच

सुदुर्दर्शमिदं रूपं दृष्टवानसि यन्मम

देवा अप्यस्य रूपस्य नित्यं दर्शनकाङ्क्षिण: ।। ५२ ।।

ஸ்ரீப43வாநுவாச 

ஸுது3ர்த3ர்ச1மித3ம் ரூபம் த்3ருஷ்டவாநஸி யந்மம

தே3வா அப்யஸ்ய ரூபஸ்ய நித்யம் 3ர்ச1நகாங்க்ஷிண: ।। 52 ।।


श्री भगवान्  ஸ்ரீப43வான்  ஶ்ரீ பகவான்    उवाच  உவாச  சொன்னது

मम  மம  என்னுடைய    इदं  இத3ம்  இந்த    सुदुर्दर्शम्  ஸுது3ர்த3ர்ச1ம்  தரிசிப்பதற்கு அரிய    

यत् रूपं யத் ரூபம்  எந்த ரூபத்தை    दृष्टवान् असि   த்3ருஷ்டவாந் அஸி   பார்த்திருக்கிறாய்    

अस्य रूपस्य  அஸ்ய ரூபஸ்ய  அந்த ரூபத்தை   देवा: अपि  தே3வா: அபி  தேவர்களும்    

नित्यं  நித்யம்  எப்பொழுதும்    दर्शन काङ्क्षिण:  3ர்ச1 காங்க்ஷிண:  தரிசிக்க விரும்புகிறார்கள்.


ஶ்ரீ பகவான் சொன்னது: தரிசிப்பதற்கரிய எனது இந்த ரூபத்தை நீ தரிசித்திருக்கிறாய். இந்த ரூபத்தைத் தரிசிக்கத் தேவர்களும் எப்பொழுதும் விரும்புகிறார்கள்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: காண்பதற்கரிய என் வடிவத்தை இங்குக் கண்டனை, தேவர்கள் கூட இவ்வடிவத்தைக் காண எப்போதும் விரும்பி நிற்கிறார்கள்.


விளக்கம்:

    அர்ஜுனனால் பார்க்கப்பட்ட இந்த விஷ்வரூப வடிவம் தரிசிப்பதற்கு மிக மிக அரிதான வடிவம், ஸுது3ர்த3ர்ச1ம், என்கிறார் பகவான். நாம் ஏற்கனவே விசாரம் செய்ததைப் போல, இந்த ரூபம் புலனுறுப்புகளால் கிரஹிக்க முடியாத வடிவமாக இருப்பதாலும், தரிசிக்கும் தகுதியைக் கொடுக்கின்ற உபாயங்கள் என எதுவுமில்லாததாலும், இதைப் பார்ப்பதென்பது உண்மையில் சாத்தியமற்ற ஒன்றாகவே உள்ளது. ‘இருப்பினும் இந்த ரூபத்தை நீ தரிசித்திருக்கிறாய்த்3ருஷ்டவாந் அஸி’, என்கிறார். தேவர்களும் கூட இந்த ரூபத்தை தரிசிக்க எப்பொழுதும் விரும்புகின்றனர்தே3வா: அபி நித்யம் 3ர்ச1 காங்க்ஷிண:

    தேவர்கள் இச்சித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆதலால் அவர்கள் இன்னும் இறைவனை முழுதும் கண்டதில்லை. ஒரு நதியில் நீராடப் போகின்றவன் அதை ஓர் இடத்தில் ஸ்பரிசித்து மூழ்கி நீராடினால் அந்நதியைக் கண்டவன் ஆகின்றான். ஆனால் அது உற்பத்தியாகும் இடத்திலிருந்து சமுத்திரத்தில் சங்கமமாகும் வரை அதைப் பார்த்தவர்கள் மிக மிகச் சிலர். அவ்விதம் அர்ஜுனன் இறைவனைக் கண்டதுபோன்று அவரை பெரிதும் அறிந்தவர்கள் மிகச் சிலரேயாவர். இப்படிப்பட்ட யாரும் பார்த்திராத ரூபத்தை கண்ட நீ அதிர்ஷ்டசாலி என்பதை இங்கே கிருஷ்ணர் தெரிவிக்க விரும்புகிறார்.

    அர்ஜுனன் ஏன் இவ்வளவு அதிர்ஷ்டசாலி என்பதை அடுத்த சுலோகத்தில் கூறுகிறார்.

---------------------------------------------------------------------------------------------------------------------

||11.53|| சாதகர்கள் கையாண்ட உபாயங்கள்:

नाहं वेदैर्न तपसा दानेन चेज्यया

शक्य एवंविधो द्रष्टुं दृष्टवानसि मां यथा ।। ५३ ।।

நாஹம் வேதை3ர்ந தபஸா தா3நேந சேஜ்யயா

1க்ய ஏவம்விதோ4 த்3ரஷ்டும் த்3ருஷ்டவாநஸி மாம் யதா2 ।। 53 ।।


मां  மாம்  என்னை    यथा  யதா2  எவ்வாறு    दृष्टवान् असि   த்3ருஷ்டவாந் அஸி   பார்த்திருக்கிறாயோ   

एवंविध:  ஏவம்வித4:  அவ்வாறு     अहं  அஹம்  நான்   वेदै:  வேதை3:  வேதங்களால்    

द्रष्टुं  த்3ரஷ்டும்  காண்பதற்கு    शक्य 1க்ய:  இயலாது    तपसा   தபஸா  தபசால் அல்ல    

दानेन   தா3நேந  தானங்களால் அல்ல     इज्यया   இஜ்யயா  யாகத்தாலும் அல்ல.     

            

நீ என்னை எவ்வாறு தரிசித்தாயோ அவ்வாறு நான் வேதங்களாலும் தவத்தாலும் தானத்தாலும் யாகத்தாலும் தரிசிக்க இயலாதவன்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:

என்னை நீ கண்டபடி, இவ்விதமாக வேதங்களாலும் தவத்தாலும், தானத்தாலும், வேள்வியாலும் என்னைக் காணுதல் இயலாது.


விளக்கம்:

கடவுளைக் காண்பதற்கு சாதகர்கள் இத்தனை வகையான உபாயங்களைக் கையாண்டும் அவர்களுக்கெல்லாம் கிட்டாத தரிசனம் அர்ஜுனனுக்கு கிடைத்திருக்கிறது என்பதை இங்கு பகவான் கூறுகிறார். பெரும்பாலும் நாற்பத்தி எட்டாவது சுலோகத்தில் (11.48) கூறப்பட்டதே இங்கு திரும்பக் கூறப்படுகிறது. பொதுவாக திரும்பக் கூறுதல் என்பது ஒரு குறையாகக் கருதப்படுகிறது; ஆனால் அது கற்பித்தலின்போது அல்ல. மேலும் இது, அடுத்து வர இருக்கின்ற மிக முக்கியமான இரண்டு சுலோகங்களுக்கு அறிமுகமாகவும் இருக்கிறது


=> இவையாவும் உதவமாட்டா:

நான்கு வேதங்களை அறிவதனால் அல்ல, வேதை3:, பெரிய தவத்தாலும் அல்ல, தபஸா, தானத்தாலும் அல்ல, தா3நேந, மற்றும் சடங்குகளாலும் கூட அல்ல, இஜ்யயா, என்கிறார். முன்னதாக அவர் வேதங்களிலிருந்து நாம் அறிந்த ஸ்ரெளத கர்மங்களை மட்டுமேயக்ஞஎன்ற சொல்லின் மூலம் குறிப்பிட்டிருந்தார். இங்கு அவர் பூஜை உள்ளிட்ட ஸ்மார்த்த கர்மங்களையும்இஜ்யயாஎனும் சொல்லினால் உள்ளடக்குகிறார். இப்படிப்பட்ட பல்வேறு வகையான உபாயங்களாலும் கூட, ‘என்னை இந்த வடிவத்தில் பார்க்க முடியாது —  அஹம் ஏவம்வித4: த்3ரஷ்டும் 1க்ய:’, என்கிறார். அர்ஜுனனால் அவரைப் பார்க்க முடிந்த அந்த வடிவத்தில், மேற்கூறப்பட்ட இத்தனை பெரும் முயற்சிகள் செய்தும் வேறு யாரும் பார்த்திருக்கவில்லை. பொற்க்காசு ஒன்றை இழந்தவன் அதன்மீது நின்றுகொண்டே அதை எவ்வளவு தேடினாலும் அதை அடையமாட்டான். வேதம், வேள்வி, தானம், தபசு முதலியன மனிதனைப் பண்படுத்துதற்குப் பயன்படலாம். ஆனால் கடவுளைக் காண இவையாவும் உதவாது.

இவ்விதம் முந்தைய சுலோகத்தில் கூறப்பட்டதையே திரும்பச் சொல்லியிருந்தாலும், இங்கே அது ஒரு கேள்வியைத் தூண்டுவதற்காக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. யக்ஞம், தானம், தவம் போன்ற அனைத்து சிறந்த பயிற்சிகளாலும் இந்த தரிசனத்தை அடைய முடியாது என்றால், ஒருவனால் உங்களைப் பார்ப்பது எப்படி சாத்தியமாகும்? இதற்கான பதிலை அடுத்த சுலோகத்தில் உரைக்கிறார்.

---------------------------------------------------------------------------------------------------------------------

||11.54|| கடவுளைக் காண வேறு என்ன செய்வது?

भक्त्या त्वनन्यया शक्य अहमेवंविधोऽर्जुन

ज्ञातुं द्रष्टुं तत्त्वेन प्रवेष्टुं परंतप ।। ५४ ।।

4க்த்யா த்வநந்யயா 1க்ய அஹமேவம்விதோ4ऽர்ஜுந

ஜ்ஞாதும் த்3ரஷ்டும் தத்த்வேந ப்ரவேஷ்டும் பரந்தப ।। 54 ।।


परंतप  பரந்தப  எதிரிகளை வாட்டுபவனே    तु  து  ஆனால்    

अनन्यया भक्त्या   அநந்யயா 4க்த்யா  அநந்ய பக்தியால்    एवं विध:  ஏவம் வித4:  இவ்விதம்    अहं  அஹம்  நான்   तत्त्वेन  தத்த்வேந  உள்ளபடி    ज्ञातुं  ஜ்ஞாதும்  அறிந்துகொள்ளுதற்கும்    द्रष्टुं  த்3ரஷ்டும்   காண்பதற்கும்     प्रवेष्टुं   ப்ரவேஷ்டும்   அடைதற்கும்    शक्य:  1க்ய:  கூடியவன்     अर्जुन  அர்ஜுந  அர்ஜுனா.


எதிரிகளை வாட்டவல்ல அர்ஜுனா, மாறாத பக்தியாலேயே இவ்விதம் என்னை உள்ளபடி உணரவும் காணவும் அடையவும் கூடும்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:

பிறிதிடஞ் செல்லாத பக்தியால் மாத்திரமே என்னை இவ்விதமாக அறிதலும், உள்ளபடி காணுதலும் என்னுட் புகுதலும் இயலும்.


விளக்கம்:

=> பிளவுபடாத பக்தி:

என்னை இந்த வடிவில் காண்பது சாத்தியம் எனக் கூறுகிறார் பகவான். இது எந்த மாயமோ மந்திரமோ அல்ல; முற்றிலும் சாஸ்திரத்தின் படியே இவ்விதம் கூறப்படுகிறது. அது எப்படி சாத்தியம்? ‘ அநந்ய பக்தியினால்அநந்யயா 4க்த்யா’.

அந்யஎனில் மற்றொன்று; வேறொன்று. ‘அநந்யஎனில்வேறு எதுவும் இல்லாத’, வேறுபடாத, பேதமில்லாத, என்பது பொருள். ஆகவே வேறு எதையும் குறிக்காத, கடவுளைத் தவிர வேறு ஒன்றையும் நாடாத பக்தி என்பது அநந்ய-பக்தி ஆகும். கடவுளுக்குப் புறம்பாக எதையும் பொருட்படுத்துவதில்லை. எல்லாம் அவன் மயம்; எல்லாம் அவன் செயல் என்ற மனநிலை அநந்ய பக்தியிலிருந்து வருகிறது

சுலோகம் 8.22-ல் பகவான் அநந்ய-பக்தியைப் பற்றிய அறிமுகத்தை கொடுத்திருக்கிறார் — ‘உயிர்கள் எவனுள் இருக்கின்றனவோ, எவனால் இவையாவும் வியாபிக்கப்பட்டும் இருக்கின்றனவோ, அந்தப் பரம புருஷன் அநந்ய-பக்தியினால் அடையப்படுகிறான்’. மூன்று வகையான பக்தியைப் பற்றி நாம் அங்கு விசாரம் செய்தோம். முதல் வகையில், பக்தனாகிய நான் வேறு; சுகம் வேண்டும், துக்கம் நீங்க வேண்டும் போன்ற எனது லக்ஷியங்கள் வேறு; அதை அருளும் பகவான் வேறு என மூன்றுவித பிளவுகளை உண்டாக்கிறோம். இரண்டாவது வகையில், மனத்தூய்மை எனும் பெயரில் பக்தனே லக்ஷியமாகிறான் அல்லது பகவானை அடைதல் இலக்காகிறது. எனவே இதில் பக்தன் மற்றும் பகவான் எனும் இரு பிளவுகள் உள்ளன. மூன்றாவது வகை, அநந்ய-பக்தி எனப் பார்த்தோம். இதில் எந்தப் பிளவும் இல்லாது, பகவானும் பக்தனும் ஐக்கியமான நிலை; வேறுபாடற்ற நிலை. இவ்வித பக்தியே தன்னை அடைவதற்கான சாதனமாக பகவான் கூறுகிறார்.


=> தவறாக பொருள்படுத்துதல்:

வேறு எதையும் குறிக்காத பக்தி என கிருஷ்ணர் கூறுவதைச் சிலர் தவறாகப் பொருள்படுத்துகின்றனர். ராமரையோ அல்லது வேறு எந்தக் கடவுளையோ அல்லாமல், கிருஷ்ணரிடம் மட்டுமே செலுத்தும் பக்தியினால்தான் கடவுள் தரிசனம் கிடைக்கும் எனக் கூறுகின்றனர். இது தவறான விளக்கமாகும். இதன் சரியான பொருள், இந்த பக்தியில் இறைவன் மட்டுமே இருக்கின்றார், வேறு யாருமில்லை; எதுவுமில்லை.

இந்நிலையை அடைய நிறைய விசாரம் தேவை. ஒருவனது விசாரம் எவ்வளவு தீவிரமானதாக ஆழமானதாக ஆகிறதோ, அவ்வளவு அதிகமாக ஈஷ்வரனே அனைத்தும் என காண்கிறான். ‘ஈஷ்வரனுக்கு வெளியே என எதுவுமில்லை; ஈஷ்வரனுக்கு வேறாக என எதுவுமில்லைஎன புரிந்து கொள்ளும்போது இறைவனின் மீதான பக்தி மேலும் மேலும் என வளர்கிறது. இறுதியாக இதில், முழு உலகமும் பகவான்தான் என ஆகிறது. விஷ்வரூபம் என்பது வேறென்ன? இதுதான் விஷ்வரூப தரிசனம். அர்ஜுனன் தன்னை விலக்கிக் கொண்டு, தான் சேர்க்கப்படாத விஷ்வரூபத்தை தரிசித்தான். ஆனால் அநந்ய-பக்தியினால் கிடைக்கப்பெரும் தரிசனத்தில் ஒருவன் தன்னையும் முழுமையாகச் சேர்த்துக் கொள்கிறான். அதனால்தான் உண்மையான விஷ்வரூப தரிசனம் ஞானத்தினால் மட்டுமே சாத்தியமாகும். இதை தெளிவுபடுத்தும் விதமாகவே கிருஷ்ணர் உண்மையாக, தத்த்வேந, எனும் சொல்லை உபயோகிக்கிறார் — ‘அநந்ய-பக்தியினால் மட்டுமே என்னை இந்த வடிவத்தில் உள்ளபடி காண முடியும்’.


=> உண்மையான ரூபத்தை பார்த்தல்:

என்னைப் பார்க்கவும் அறியவும் முடியும்அஹம் ஜ்ஞாதும் த்3ரஷ்டும் 1க்ய:, என்கிறார் பகவான். ‘பார்க்க இயலும்என்று கூறியிருப்பதால், இங்கு கூறப்படும்ஜ்ஞாநஎன்பது சாஸ்திரத்தை படித்ததனால் கிடைக்கின்ற வெறும் பரோக்ஷ-ஞானம் மட்டுமே அல்ல. இது ஒரு தெளிவான நேரடி-ஞானத்தைக் குறிக்கிறது. அதாவது, படைப்பிற்கு காரணமானதாகவும் எல்லையற்றதாகவும் ப்ரம்மம் இருக்கின்றது என ஒருவன் புரிந்து கொண்டால் அது மறைமுக-ஞானம், பரோக்ஷ-ஞானம் ஆகும். ஆனால், ‘அனைத்தின் காரணமாக நானே இருக்கின்றேன்என ஒருவன் அறிவது, நேரடி-ஞானம், அபரோக்ஷ-ஞானம். இது ஒரு பெரிய படி; இதையே தரிசனம் என அழைக்கிறோம். உள்ளபடி பார்த்தல், தத்த்வேந, என்பதும் இதையே குறிக்கிறது. இதில் பார்ப்பவனும் சேர்க்கப்படுகிறான். ‘ஈஷ்வர: மத் அந்ய:ஈஷ்வரன் எனக்கு வேறாக இல்லை’. இதுவே அநந்ய-பக்தி; பக்தியின் உச்சநிலை.


=> இதன் விளைவு என்ன?

இதன் விளைவாக அவன் மோக்ஷத்தைப் பெறுகிறான், ஈஷ்வரனுள் நுழைந்து அவருடன் ஐக்கியமாகிறான். உடல் இறந்தபோதிலும் அவன் இறைவனை விட்டுப் பிரியாமல், அவருடன் ஒன்றாகிறான். ‘ப்ரவேஷ்டும்என்பது நுழைதலை, அடைதலைக் குறிக்கின்றது. இறந்தபிறகு ஈஷ்வர சொரூபமாகவே, ப்ரம்ம சொரூபமாகவே ஆதலைக் குறிக்கின்றது. உண்மையில் இந்தநுழைதல்(ப்ரவேஷ)’ என்பது, ஒரு அலையானது தனது நிஜ-சொரூபம் நீர் என்று புரிந்துகொண்டு கடலாக ஆவதைக் குறிக்கின்றது. இந்த அறிவு, அலையை தனித்தன்மையிலிருந்து விடுவித்து கடலுடன் ஐக்கியப்படுத்துகிறது. இது மோக்ஷம் என்று அழைக்கப்படுகிறது. இது அநந்ய-பக்தியின் மூலம் அடையப்படுகிறது என பகவான் இங்கு சுட்டிக்காட்டுகிறார்

  

  ஈஷ்வரனைத் தவிர வேறெதுவும் இல்லை என்ற ஞானம் மட்டுமே, எனது யதார்த்த சொரூபத்தைக் காண்பதை சாத்தியப்படுத்தும்என்பதை பகவான் இங்கு தெளிவாக எடுத்துரைக்கிறார். அர்ஜுனன் பார்த்தது உண்மையில் விஷ்வரூபம் அல்ல. ஏனெனில் உண்மையான விஷ்வரூபம் என்பது தன்னையும் உள்ளடக்கியது என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இவை அனைத்தும் அறிவினால் புரிந்து கொள்ளப்பட வேண்டியவை. இல்லையெனில், பக்தியை தீவிரப்படுத்தும் செயல்களின் மூலம் அர்ஜுனன் கண்ட அதே விஷ்வரூபத்தை பார்க்கமுடியும் என்கிற தவறான புரிதலுக்கு ஒருவன் வரக்கூடும். அப்படியே அவன் அதைப் பார்த்தாலும் அர்ஜுனனைப் போல பயந்துவிடவும் கூடும். எனவே அநந்ய-பக்தி எனில் எங்கும் எல்லாமுமாக பகவானை மட்டுமே பார்ப்பது என்றும், அதில் பார்ப்பவனும் அடக்கம் என்றும், அது ஞானத்தின் மூலம் மட்டுமே சாத்தியமாகும் என்றும் புரிந்து கொள்வது முக்கியமாகும்.  

அடுத்த சுலோகத்தில் பகவான், இந்த அத்தியாயத்தையும் இதுவரையில் சொல்லப்பட்ட அனைத்தையும் சுருக்கமாகச் சொல்லுகிறார். முழு கீதையின் உபதேசமும் இதில் சாராமாகக் கொடுக்கப்பட்டுள்ளது என சங்கரர் இதற்கு முன்னுரை கொடுக்கிறார்


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

பலர் பாலைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர் பாலைப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் பாலைப் பருகினவர்கள் அதிலும் சிலரே.

ஊனக்கண் கொண்டு கடவுளைக் காணமுடியுமா என்ற பேச்செழுந்தது. இல்லை; ஊனக் கண்களால் காணமுடியாது. பக்தி பண்ணும்போது அன்புமயமான சரீரம் ஒன்று நமக்குள் உண்டாகிறது. அச்சரீரத்துக்கு அன்புமயமான கண்களும் காதுகளும் உண்டு. அவற்றால் நீ இறைவனைக் காணவும் கேட்கவும் முடியும்.

---------------------------------------------------------------------------------------------------------------------

||11.55|| பக்தியைப் பெருக்கி இறைவனை அடைதற்கு என்ன செய்யவேண்டும்?

मत्कर्मकृन्मत्परमो मद्भक्त: सङ्गवर्जित:

निर्वैर: सर्वभूतेषु : मामेति पाण्डव ।। ५५ ।।

மத்கர்மக்ருந்மத்பரமோ மத்34க்த: ஸங்க3வர்ஜித:

நிர்வைர: ஸர்வபூ4தேஷு : மாமேதி பாண்ட3 ।। 55 ।।


पाण्डव  பாண்ட3  பாண்டவா     मत्कर्मकृत्  மத்கர்மக்ருத்  எனக்காகக் கர்மம் செய்கிறவன்    

मत्परम:  மத்பரம:  என்னைக் குறியாகக் கொள்கிறவன்   मद्भक्त:  மத்34க்த:  என்னிடத்து பக்தி பண்ணுபவன்   सङ्ग वर्जित:  ஸங்க3 வர்ஜித:  பற்றில்லாதவன்    सर्वभूतेषु  ஸர்வபூ4தேஷு  எல்லா உயிர்களிடத்தும்    

निर्वैर:  நிர்வைர: வெறுப்பற்றவனும்    : :  எவனோ    :  :  அவன்    

माम्  மாம்  என்னை   एति  ஏதி  அடைகிறான்.


பாண்டவா, எனக்காகக் கர்மம் செய்கிறவனும், என்னைக் குறியாகக் கொள்கிறவனும், என்னிடத்து பக்தி பண்ணுபவனும், பற்றற்றவனும், எல்லா உயிர்களிடத்தும் வெறுப்பற்றவனும் எவனோ அவன் என்னை அடைகிறான்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:

என்தொழில் செய்வான், எனைத் தலைக் கொண்டோன்,
என்னுடைய அடியான் பற்றெலாம் இற்றான்,
எவ்வுயி ரிடத்தும் பகைமை யிலாதான் யாவன்,

பாண்டவா! அவனென்னை எய்துவான்.


விளக்கம்:

இங்கே பட்டியலிடப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டவன், ‘என்னை அடைகிறான், : மாம் ஏதிஎன்று கிருஷ்ணர் கூறுகிறார்.


(1) மத்கர்மக்ருத்எனக்காக கர்மம் செய்பவன். செயலைச் செய்பவன்கர்மக்ருத்எனப்படுகிறான். இங்கே கூறப்பட்டவன், தனது அன்றாடக் கடமைகளை தர்மத்துக்காகவோ, அர்த்தத்திற்காகவோ, காமத்திற்காகவோ அல்லாமல் மோக்ஷத்திற்காகச் செய்கிறான்; தனது பல்வேறு கர்மங்களிலும் ஈஷ்வரனை மையமாக வைத்து ஈடுபடுகிறான். அப்படிப்பட்டவன்மத்கர்மக்ருத்ஆகிறான். அவனுடைய கர்மங்கள் ராக-த்வேஷத்திற்காக அல்லாமல், தர்ம-அதர்மத்தின் பொருட்டுச் செய்யப்படுகின்றன. இறைவனுக்காக செயலாற்றுதல் என்பதன் உண்மைப் பொருள் என்ன?

நாராயணாஎன்று கூறி அனைத்துச் செயல்களையும் செய்யவேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், அவருடைய பெயரைச் சொன்னால் அது எப்படி அவருக்காக செய்யப்பட்ட கர்மமாக மாறும்? எனது செயலை இறைவனுக்கு அர்ப்பணிப்பது எப்படி? ‘ இறைவா, இதை நான் உங்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்என்று சொன்னாலும், செயலோ, பலனோ இறைவனுக்குச் செல்வதில்லை. கீதையில் தெளிவில்லாமல் புரிந்து கொள்ளப்படும் வார்த்தைகளில்மத்கர்மக்ருத்என்பதும் ஒன்று. ஆனால் பகவான் முன்னதாக, ‘விருப்பு-வெறுப்பின் பிடியில் வராதேராக-த்வேஷயோ: வஸம் ஆகச்சேத், தன்னறத்தில் இறப்பதுவும் மேல்; பிறர் தர்மம் பயம் தருவதாகும்ஸ்வதர்மே நிதநம் ஸ்ரேய: பரதர்ம: பயாவஹ:என்று தெளிவாக விளக்கியுள்ளார்.

கொடுக்கப்பட்ட சூழ்நிலையில் ஒருவனால் செய்யப்பட வேண்டியது அவனது தன்னறம்(ஸ்வதர்மம்) ஆகிறது. தனது சொந்த விருப்பு-வெறுப்பிற்காக அதிலிருந்து விலகாமல், தர்மத்தின்படி நின்று தனது கடமையைச் செய்ய வேண்டும்


=> விருப்பு-வெறுப்பு:

என்ன செய்யப்பட வேண்டுமோ அது எனது விருப்பத்திற்கு ஒத்தும், எது செய்யப்படக் கூடாதோ அது எனது வெறுப்பிற்கு ஒத்ததாகவும் இருந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் பெரும்பாலும் தர்மமும் அதர்மமும் விருப்பு மற்றும் வெறுப்பிற்கு எதிராகப் போட்டியிடுகின்றன. இது தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடக்கும் யுத்தம், தேவாஸுர-யுத்த. எனவே தர்மத்திற்கு எதிராக நமது விருப்பு-வெறுப்பு நிற்கும்போது, அதைச் செய்யலாகாது. ஏனெனில் தர்மத்திற்கு எதிரானது என்பது பகவானுக்கு எதிரானது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். பகவானே தார்மீக ஒழுங்காக இருக்கிறார்

படைக்கப்பட்டவைகள் அனைத்தும் இறைவனிடமிருந்து பிரிக்கப்படாதது என்பதை புரிந்த ஒருவன் ஞானி என்பதால், அவனுடைய எந்தவொரு கர்மமும் இயல்பாகவே தர்மத்துடன் இயைந்தே இருக்கும். அடுத்ததாக, ஒரு கர்ம-யோகியானவன் தர்ம-அர்த்த-காமத்தில் ஆர்வம் காட்டுவதில்லை. அவனுக்கு ராக-த்வேஷங்கள் இருந்தாலும், அவனது செயல்கள் மோக்ஷத்திற்காக ஒரு யோகமாகச் செய்யப்படுகிறது. அப்போது அவன்மத்கர்மக்ருத்’. தார்மீக ஒழுக்கத்தை பகவானின் படைப்பாக, பகவானாகவே புரிந்துகொள்வதன் மூலம், ஒருவன் தனது நடத்தையை தர்மத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்கிறான். ஈஷ்வரனுக்காக கர்மம் செய்வது என்பது தர்மத்திற்காகவே தவிர, ராக த்வேஷங்களுக்காக அல்ல. இதுவே கர்ம-யோகம் எனப்படுகிறது. அடுத்ததாக, எவரேனும் இறைவனை வழிபட்டாலும், அதை சொர்க்கத்துக்காகவோ அல்லது வேறு நோக்கத்திற்காகவோ செய்கிறான் என்றால், அவன் மத்கர்மக்ருத் அல்ல. அவன் உண்மையில் தனது சொந்த விருப்பு-வெறுப்புக்காக அதைச் செய்கிறான்

இதிலிருந்து மத்கர்மக்ருத் என்பது முமுக்ஷுவான ஒரு கர்ம-யோகியைக் குறிக்கிறது. அவனது நாட்டம் மோக்ஷம் மட்டுமே. ஆனால் சூழ்நிலை காரணமாக அவன் சந்யாசி அல்ல; அவனுக்குச் சில கட்டாய கடமைகள் இருக்கின்றன.


(2) மத்பரம:என்னை இலக்காகக் கொண்டவன். இறைவனையே தனது வாழ்க்கையின் லக்ஷியமாகக் கொண்டவனாக அவன் இருக்கின்றான். இறைவனை நோக்கிய அவனது மனப்பான்மை என்பது தனது எஜமானனிடம் ஒரு வேலைக்காரனுக்கு இருக்கும் மனப்பான்மை போன்றது என்கிறார் சங்கரர். ஒரு வேலைக்காரன் தன் எஜமானைப் திருப்திப்படுத்தவும் மகிழ்விக்கவும் எல்லாவற்றையும் செய்வது போல, அவன் கடவுளுக்காக எல்லாவற்றையும் செய்கிறான். ஆனால் ஈஷ்வரனுக்காக கர்மங்களைச் செய்வது, மற்றவருக்காகச் செய்யும் செயலிலிருந்து சற்று வித்தியாசமானது. மற்றதில் நாம் எஜமானனை மகிழ்விக்க விரும்பினாலும் அவரையே இறுதி இலக்காகப் பார்ப்பதில்லை. ஆனால் இங்கு ஈஷ்வரனுக்கான செயலைச் செய்வதன் முழு நோக்கமும் பரம கதியான ஈஷ்வரனுடன் ஒன்றாவதாகும். அதற்கு மேலும் என வேறு எந்த முடிவும் விரும்பப்படாமல், தனது ஒரே இறுதி முடிவு இதுவே எனப் புரிந்தவன் அவன். அதுவே அவனது கர்மயோகத்தின் நோக்கமாகவும் இருக்கிறது. அவன் தனது கடமைகளை யோகமாகச் செய்து, ஞானத்தை தொடர்கிறான். கர்ம-யோகத்தினால் அந்த-கரண-சுத்தியை அடைந்து ஞானத்துக்கு தயாராக ஆகிறான். ஈஷ்வரனே தனது இறுதி முடிவு எனக் கொள்பவன்மத்பரம’. அதிலிருந்து எப்போதும் அவன் கவனத்தை எடுப்பதில்லை.


(3) மத்34க்த:என்னிடத்தில் பக்தி செலுத்துபவன்; என்னையே மனதில் நினைத்துக் கொண்டிருப்பவன். அவனது முழு மனதும் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக இருக்கிறது. சாஸ்திரம் படிப்பது, நாமஜபம் செய்வது, பகவானின் பெருமைகளைப் பாடுவது என எதைச் செய்தாலும் மிகுந்த ஆர்வத்துடன் செய்கிறான். தான் விரும்புவதை உற்சாகமாக செய்வதென்பது இயற்கையானதே. ஈஷ்வரனே அடையப்பட வேண்டிய இறுதி இலக்கு என அவன் தெளிவாக அறிந்திருப்பதால் அவன் ஒரு கர்ம-யோகி. ‘மத்கர்மக்ருத்மற்றும்மத்பரமஎன்று ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கும் போது, ‘மத்34க்தஎன்று தனியாக ஏன் குறிப்பிட வேண்டும்? ஒரு கர்மயோகியானவன் தன்னறத்தை பின்பற்றுபவனாக இருப்பினும், அவன் ஞானி அல்ல என்பதால் மோக்ஷத்தைப் பற்றிய அவனது புரிதல் என்பது தெளிவற்றதாக இருக்கும். எனவே பக்தி எனும் உந்துதல் இல்லாமல் கர்மயோகியாக இருப்பதற்குத் தேவையான அனைத்தையும் செய்வதென்பது இயலாது. எனவே அவனது உற்சாகத்தை சுட்டிக் காட்டும் விதமாக பகவான் இங்குமத்34க்தஎன்பதை குறிப்பிட்டுச் சொல்லுகிறார். இறைவனுக்கான அவனது அர்ப்பணிப்பு என்பது முழுமையானது என்பதை இது காட்டுகிறது.  

 

(4) ஸங்க3 வர்ஜித:பற்றில்லாதவன். இறைவனிடம் அன்பு அதிகரிக்கின்ற அளவு உலகப் பொருள்களிடத்துப் பற்று அகலுகிறது. பொதுவாக, பற்று என்பது ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது விஷயத்துடன் உண்டாகிறது. செல்வம்(3), மகன் அல்லது மகள்(புத்ர), நண்பன்(மித்ர), மனைவி(கலத்ர), உறவினர்கள்(3ந்து4) என அவைகளில் சிலவற்றை சங்கரர் தனது உரையில் குறிப்பிடுகிறார். ஆழ்ந்த பற்றுதலிலிருந்து அல்லது உணர்ச்சி வயப்படும் நிலையிலிருந்து விடுபட்ட, வைராக்கியம் மிக்க ஒருவன்ஸங்க3 வர்ஜிதஎனப்படுகிறான். மேற்கூரியவற்றின் மீது அன்பு அல்லது அக்கறை இருந்தாலும், தனது நலனுக்காக இவைகளைச் சார்ந்தில்லாதவனாக அவன் இருக்கின்றான்.

ஏனெனில் இவைகளுடனான ஒட்டுதல்(ஸங்க3) என்பது பல பிரச்சனைகளைக் கொண்டதாக இருக்கிறது. எதிர்பார்ப்பு, கவலை, வலி முதலியவைகளோடு கூடி ராக-த்வேஷம் பிரதானமாக ஆகிறது. இது ஒரு தொடர் பிரச்சனையாக உருவெடுக்கிறது. உதாரணமாக உறவினருடனோ, மனைவியுடனோ அல்லது குழந்தையுடனோ என யாரேனும் ஒருவருடன் ஏதேனுமொரு விதத்தில் தவறான புரிதல்கள் தோன்றலாம். ஒன்றைத் தீர்க்க மற்றொன்று உருவாகலாம். முழு வாழ்க்கையும் சுற்றத்தாரை திருப்திப்படுத்துவதில் கழியலாம். இது முடிவில்லாதது என்பதால், முதலில் இவையனைத்தின் அடிப்படையை புரிந்து கொள்ளவேண்டும். மனதின் இயல்பை அங்கீகரித்து, பற்றின்மை என்றால் என்ன என்ற விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும். உணர்ச்சி வசப்படுதல் என்பது உலகளாவிய சிக்கல். அதை ஏற்றுக் கொண்டு, அதை புரிந்துகொள்ளும் முயற்சியில் ஈடுபடுதல் வேண்டும். இதன்மூலம் உறவுகள் பிரச்சனைக்குரியதாக அல்லாமல் ரசிக்கக் கூடியதாக ஆகிறது. உண்மையில் அது நாம் வளர உதவுகிறது


(5) நிர்வைர:வெறுப்பற்றவன்; எல்லா உயிர்களிடமும் பகைமையற்ற நிலை. ஒருவன் மற்றொருவனை வெறுப்பதற்கு காரணம் தான் அடையவிரும்பும் பொருளை மற்றொருவன் கைக்கொள்ள முயலுவதால் வருகிறது. பக்தனுக்கோ ஒரு பொருளிலும் பற்றில்லையாதலால் அதை முன்னிட்டு யாரையும் வெறுக்கவேண்டிய அவசியமில்லை

ஒருவன் தனது செயல்களுக்கும் உணர்ச்சி வெளிப்பாட்டிற்கும், தானே பொறுப்பேற்க வேண்டும். மேலும் ஒவ்வொரு நபரும் அவரவர் மனதிற்கு ஏற்ப நடந்து கொள்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளும்போது பிரச்சனைகள் வெகுவாகக் குறையும். நம்மிடம் வெறுப்பை உமிழும் மனிதர்களிடமும், ‘அவர்களின் கடந்த காலத்தால் உதவியற்ற முறையில் கட்டளை இடப்பட்டதைப்போல அவ்வாறு நடந்து கொள்கிறார்கள்; நமக்கும் அதே கடந்த காலம் இருந்தால், நாமும்கூட அவ்வாறே செயல்படுவோம்’. இதை புரிந்து கொள்ளும்போது அவர்களின்மீதும் பகை இருக்கமுடியாது. மனிதர்கள் எப்படி இருக்கிறார்களோ அவர்களை அப்படியே இருக்க அனுமதிக்கிறோம். இது ஒரு குறிப்பிட்ட முதிர்ச்சியுடன் மட்டுமே சாத்தியமாகும் நிலை. அதைப் பெற, ஒருவன் தனது எதிர்வினைகளைத் தொடர்ந்து பகுப்பாய்வு செய்து கொண்டே இருக்கவேண்டும்

மனிதன் எதன்பால் தன்னை ஒப்படைக்கின்றானோ அதை அவன் அடைகிறான். கடவுள்பால் தன்னை ஒப்படைப்பவன் கடவுளை அடைகின்றான். மேற்கூரிய இந்த அனைத்து குணாதிசயங்களையும் கொண்ட ஒருவன் என்னுடன் ஒன்றாகிவிடுகிறான், மாம் ஏதி. ‘நான்தான் அவனுக்கு இறுதி மற்றும் ஒரே முடிவு, என்கிறார்


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

ஈஷ்வரனிடம் நமக்கு எவ்வளவு தீவிரமான பக்தி இருக்க வேண்டுமென்பதை நீ அறிவாயா? தனது கணவனிடம் ஒரு கற்புடைய மாதுக்கு இருக்கும் அன்பு, தான் புதைத்து வைத்த பணத்தினிடம் ஒரு லோபிக்கு இருக்கும் ஆசை, உலகப் பொருள்களைப் பெறவேண்டுமென்று பற்றுள்ளவர்கள் கொள்ளும் ஆவல், இந்த மூன்றும் ஒன்று கூட்டினார்போல தீவிர பக்தியானது ஈஷ்வரனைக் காணவேண்டியதற்காக உன் மனதில் உதித்திருக்குமானால் அப்போது அவனை நீ நிச்சயமாக அடைவாய்

---------------------------------------------------------------------------------------------------------------------

ऒं तत्सत् इति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे 

श्रीकृष्णार्जुनसंवादे विश्वरूप दर्शनयोगो नाम एकादशोऽध्याय: ।।

ஓம் தத் ஸத்   இதி ஶ்ரீமத்343வத்3கீ3தாஸு உபநிஷத்ஸு ப்3ரஹ்மவித்3யாயாம் யோக3சா1ஸ்த்ரே ஶ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே3 விச்1வரூப 3ர்ச1நயோகோ3 நாம ஏகாத3சோ1ऽத்4யாய: ।।

ப்ரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஶ்ரீ கிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத் கீதை என்னும் உபநிஷத்தின்கண் விஷ்வரூப தர்ஷணயோகம் என்ற பதினொன்றாம் அத்தியாயம்.

——————————————————————————————————————————

விஷ்வரூபதர்ஷண - சாரம்:

(1) முந்தைய பத்து அத்தியாயங்களின் சாரத்தை அர்ஜுனன் கூறுதல்  [1 - 2]

(2) விஷ்வரூப தர்ஷணம் வேண்டுமென்ற பிரார்த்தனை [3 - 4]

(3) கோரிக்கைக்கு சம்மதித்து அதற்கான தகுதியைக் கொடுத்தல் [5 - 8]

(4) சஞ்ஜயனின் விஷ்வரூப வர்ணனை [9 - 14]

(5) ஆச்சரிய பாவனையுடன் அர்ஜுனன் விஷ்வரூபத்தை வர்ணித்தல் [15 - 22]

(6) பய பாவனையுடன் அர்ஜுனன் விஷ்வரூபத்தை வர்ணித்தல் [23 - 30]

(7)நீங்கள் யாரென்று விளக்குங்கள்என்ற அர்ஜுனனின் வேண்டுதல் [31 - 35]

(8) பக்தி பாவனையுடன் அர்ஜுனன் விஷ்வரூபத்தை வர்ணித்தல் [36 - 45]

(9) பழைய ரூபத்தை காட்டி அர்ஜுனனை ஆற்றுப்படுத்துதல் [46 - 53]

(10) விஷ்வரூப தரிசன உபாயத்தை கூறுதல் [54 - 55]

---------------------------------------------------------------------------------------------------------------------