புதன், 28 ஆகஸ்ட், 2024

விஷ்வரூபதர்ஷன யோகம் 11.44 - 11.46

||11.44|| பகவானுக்கு மிக்கார் யாருமில்லாததால் ஒருவன் செய்ய வேண்டியது யாது?

तस्मात्प्रणम्य प्रणिधाय कायं प्रसादये त्वामहमीशमीड्यम्

पितेव पुत्रस्य सखेव सख्यु: प्रिय: प्रयायार्हसि देव सोढुम् ।। ४४ ।। 

தஸ்மாத்ப்ரணம்ய ப்ரணிதா4 காயம்

ப்ரஸாத3யே த்வாமஹமீச1மீட்3யம்

பிதேவ புத்ரஸ்ய ஸகே2 ஸக்2யு:

ப்ரிய: ப்ரியாயார்ஹஸி தே3 ஸோடு4ம் ।। 44 ।।


देव  தே3  தேவா   तस्मात्  தஸ்மாத்  ஆகையினால்    अहं  அஹம்  நான்      कायं  காயம்  உடலால்    

प्रणिधाय  ப்ரணிதா4  கீழே வீழ்ந்து     प्रणम्य  ப்ரணம்ய  வணங்கி    

ईड्यम् ईशम्  ஈச1ம் ஈட்3யம்  போற்றத்தக்க ஈசனை     त्वां  த்வாம் உங்களை     

प्रसादये  ப்ரஸாத3யே  அருள்புரிய வேண்டுகிறேன்     पुत्रस्य  புத்ரஸ்ய  புத்திரனுக்கு    

पिता इव  பிதா இவ  பிதா போன்றும்    सख्यु:  ஸக்2யு:  தோழனுக்கு    सखा इव  ஸகா2 இவ  தோழன் போன்றும்    प्रयाया:  ப்ரியாயா:  காதலிக்கு    प्रिय:  ப்ரிய:  காதலன் போன்றும்   

सोढुम्  ஸோடு4ம்  பொறுத்துக் கொள்ள     अर्हसि  அர்ஹஸி  தகுதியுடையவராகிறீர்.


ஆதலால், தேவா, நான் உடலால் வீழ்ந்து வணங்கிப் போற்றத்தக்க ஈசனாகிய உங்களது அருளை வேண்டுகிறேன். மைந்தனுக்குத் தந்தை போன்றும், தோழனுக்குத் தோழன் போன்றும், காதலிக்குக் காதலன் போன்றும் பொருத்தருளக் கடவீர்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:

ஆதலால், உடல் குனிய வணங்கி, நின்பால் அருள் கேட்கிறேன். ஈசா வேண்டுதற்குரியாய், மகனைத் தந்தை போலும், தோழனைத் தோழன் போலும், அன்பனையன்பன் போலும் நீ என்னைப் பொறுத்தல் வேண்டும்.


விளக்கம்:

பகவானது மஹிமையை அறியும்போது அவர் போற்றுதற்குரியவர் என்பது புலப்படுகிறது. ஆகவே அர்ஜுனன் அவரை உடலைத் தாழ்த்தி வீழ்ந்து வணங்கி, ‘நான் உடலால் வீழ்ந்து வணங்கிப் போற்றத்தக்க இறைவனாகிய உனது அருளைத் தேடுகிறேன்என்கிறான். நீங்களே அனைத்துமாக இருப்பதால் என்னை நீங்கள் மன்னிக்க வல்லவர். ஆகையினால் மன்னிக்க வேண்டுகிறேன். எப்படியெனில், மகனின் தவறுகளை தந்தை மன்னிப்பதைப் போல, புத்ரஸ்ய பிதா இவ; அல்லது ஒரு நண்பன் தனது தோழனின் தவறுகளைப் பெரிதாக பொருட்படுத்தாமல் மன்னிப்பதைப் போல, ஸக்2யு: ஸகா2 இவஅல்லது ஒரு கணவன் தன் மனைவியின் மீதுள்ள அன்பின் காரணமாக அவளின் அனைத்து குறைபாடுகளையும் மன்னிப்பது போல, ப்ரியாயா: ப்ரிய:. அர்ஜுனன் ஏன் இந்த மூன்று உதாரணங்களைக் கூறுகிறான்? கிருஷ்ணருடனான அவனது உறவைப் பற்றிய புரிதலை அவை பிரதிபலிக்கின்றன.

கிருஷ்ணர் சிருஷ்டி கர்த்தாவாக இருப்பதால், சரீரத்தின் அடிப்படையில் அர்ஜுனன் தன்னை புத்திரனாகப் பார்க்கின்றான். கொடுக்கப்பட்ட உபாதியில், ஒரு ஜீவன் பரமேஷ்வரனின் பிள்ளை ஆகிறான். மேலும் பகவானை அந்தர்யாமி என்ற நோக்கில், நண்பன் எனக் கூறுகிறான். புத்தி-சாட்சியாக விளங்கும் ஆத்மா என்பது தோழனைப் போன்றது; புத்தி எங்கு சென்றாலும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஒரு நண்பனைப் போல அது சேர்ந்து கொள்கிறது. மேலும், ஆத்மா ஆனந்த சொரூபமாக இருப்பதால் அது பிரியமானது. ஆனந்தம் ஆத்மா என்பதால் ஆனந்தத்தை காதலிக்கும்நான்’, ‘நான்என்பதன் காதலன் ஆகிறேன். ஆத்மாவிலிருந்து வேறாக இல்லாத, ப்ரம்மமான, பரமேஷ்வரனாக விளங்கும் பகவானிடம் அர்ஜுனன் இந்த மூன்று உறவுகளையும் ஏற்றிவைக்கிறான்.


=> சுவாமி சித்பவானந்தர்:

போற்றுதற்குரிய பொருளாக இறைவன் இருக்கிறார் என்று அறிவதால் பக்தனுக்கும் பகவானுக்கும் உள்ள இணக்கம் தடைப்படுவதில்லை. அது படிப்படியாக நெருங்கி ஐக்கியத்தை உண்டுபண்ணுகிறது. தந்தைக்கும் மகனுக்கும் பிரிக்கமுடியாத தொடர்புண்டு. ஆனால் பயபக்தியினால் பிள்ளை பிதாவிடத்துச் சம உரிமை கொண்டாடுவதில்லை. இப்படிப்பட்ட தொடர்பு இருப்பது மட்டுமல்ல, உயர்வு தாழ்வு பாராட்டாத தோழமையும் இதிலுண்டு என அடுத்தபடியாகச் சொல்லப்படுகிறது. மேலும் அத்தோழமையில் இனிமையும் உண்டு என்பதால் காதல் நிலையில் வைத்து அது மேலும் விளக்கப்படுகிறது. அத்தகைய பேரிணகத்தில் குற்றங்காணாது குணம் காணும் பண்பு நன்கு அமையப் பெறுகிறது.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

பராபக்தியில் பக்தன் ஈஷ்வரனைத் தனக்கு அத்யந்தம் நெருங்கிய அன்பனாகக் கருதுகிறான். அது கிருஷ்ண பரமாத்மாவிடம் கோபஸ்திரீகளுக்கு இருந்த பக்தி போன்றது. அவர்கள் அவரை எப்பொழுதும் கோபிகாநாதன் என்று கருதியழைத்தனரே தவிர ஜகந்நாதன் என்று கருதி அழைத்ததில்லை.

---------------------------------------------------------------------------------------------------------------------

||11.45|| அர்ஜுனன் மேலும் தொடர்கிறான்:

अदृष्टपूर्वं हृषितोऽस्मि दृष्ट्वा भयेन प्रव्यथितं मनो मे।

तदेव मे दर्शय देव रूपं प्रसीद देवेश जगन्निवास ।। ४५ ।।

அத்3ருஷ்டபூர்வம் ஹ்ருஷிதோऽஸ்மி த்3ருஷ்ட்வா

4யேந ப்ரவ்யதி2தம் மநோ மே

ததே3 மே 3ர்ச1 தே3 ரூபம்

ப்ரஸீத3 தே3வேச1 ஜக3ந்நிவாஸ ।। 45 ।।


देव  தே3  தேவா    अदृष्ट पूर्वं  அத்3ருஷ்ட பூர்வம்  முன்பு பார்க்காததை     दृष्ट्वा  த்3ருஷ்ட்வா  பார்த்து    

हृषित: अस्मि  ஹ்ருஷித: அஸ்மி  மகிழ்ந்தவனாய்  भयेन  4யேந  பயத்தால்    

मे मन:  மே மந:  என்னுடைய மனது    प्रव्यथितं   ப்ரவ்யதி2தம்   நடுங்கிக் கொண்டிருக்கிறது     

तत् रूपं एव  தத் ரூபம் ஏவ  அந்த ரூபத்தையே    मे  மே  எனக்கு   दर्शय  3ர்ச1  காட்டுக   देवेश  தே3வேச1  தலைவா    जगन्निवास  ஜக3ந்நிவாஸ  ஜகத்துக்கெல்லாம் இருப்பிடமானவரே   प्रसीद  ப்ரஸீத3  அருள்புரிக.


தேவா, முன்பு காணாததைக் கண்டு மகிழ்ந்தவனாயிருக்கிறேன்; மேலும் மனது அச்சத்தால் நடுங்குகிறது. முன்னைய இனிய வடிவத்தையே எனக்குக் காட்டுக. தேவேசா, ஜகந்நிவாஸா, அருள்புரிக.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:

இதற்கு முன் காணாததை இன்று கண்டு மகிழ்சியுறுகிறேன்; எனினும் என் மனம் அச்சத்தால் சோர்கிறது. தேவா, எனக்கு நின் முன்னை வடிவத்தைக் காட்டுக. தேவேசா, ஜகத்தின் நிலையமே எனக்கருள் செய்க.


விளக்கம்:

விஷ்வரூபத்தைக் காட்டியருள வேண்டுமென்று அர்ஜுனன் பிரார்த்தித்தான். அதற்கு இரங்கிய பகவான் யுத்த நெருக்கடிக்குப் பொருத்தமாயிருந்த ஸம்ஹார சொரூபத்தை விசேஷமாகக் காட்டியருளினார். அதனால் அர்ஜுனனுக்கு யுத்தத்தைப் பற்றிய மயக்கம் ஒழிந்தது. எனினும் எப்பொழுதும் அதிலேயே திளைத்திருக்க தனஞ்ஜயனுக்குப் பிடிக்கவில்லை. கொந்தளிப்புள்ள கடலில் மீன் மருளுவது போன்று அவன் மயங்கினான். எப்பொழுதும் இன்பம் தருகிற சாந்த சொரூபத்தைக் காணவேண்டுமென்று விண்ணப்பிக்கிறான்.


=> முன்பு பார்த்திராத ரூபம்:

அர்ஜுனன் மட்டுமல்ல, இந்த விஷ்வரூப வடிவத்தை இதுவரை யாரும் பார்த்ததில்லை, அத்3ருஷ்ட பூர்வம். யாருமே பார்த்திராத ஒன்றை தான் பார்த்ததனால் அர்ஜுனன் முதலில், ‘தேவா, முன்பு காணாததைக் கண்டு மகிழ்ந்தவனாகிறேன், த்3ருஷ்ட்வா ஹ்ருஷித: அஸ்மிஎன்கிறான். ஆனால் அவனுக்கு கலவையான உணர்வுகள் இருந்தன. அதாவது, விஷ்வரூபத்தைப் பார்ப்பது அற்புதமானது எனினும் அதில் தென்படும் அனைத்துவிதமான அழிவுகளையும் கண்டு பயம் கொள்கிறான். எனவே, ‘எனது மனம் பயத்தால் பீடிக்கப்பட்டு நடுங்குகிறது, 4யேந ப்ரவ்யதி2தம் மந: மேஎன்கிறான்

ஆகையினால் உங்களுடைய அந்த (அசல்) வடிவத்தை எனக்கு காட்டுங்கள்தத் ரூபம் ஏவ மே 3ர்ச1. எந்த வடிவத்தில் தனது உயிர்த் தோழனைப் பார்த்தானோ, அந்த பழைய வடிவத்திற்குத் திரும்புமாறு அர்ஜுனன் கோரிக்கை விடுக்கிறான். இங்கு கிருஷ்ணரை, அனைத்து தேவர்களுக்கும் தலைவா, தே3வேச1, என்றும் முழு உலகுக்கும் இருப்பிடமாக இருப்பவரே, ஜக3ந்நிவாஸ, என்றும் அழைத்து, தயவு செய்து பழைய வடிவத்துடன் என்னை ஆசிர்வதியுங்கள்என்கிறான்.  

உக்கிரரூபம் எடுப்பதும் பகவானது லீலை என்பதைத் தெரிந்துகொண்டால் போதுமானது. அக்காட்சியிலேயே நிலைபெற்றிருக்க பக்தன் விரும்புவதில்லை.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

சிங்கம் போலப் பொய்க்கோலம் பூண்டுகொண்ட ஹரி, பார்க்க வெகு பயங்கரமாகத்தான் இருக்கிறான். அவன் தன் தங்கை விளையாடுமிடத்துக்குச் சென்று பயங்கரமாகக் கூச்சலிடுகிறான். அதைக் கேட்டு நடுநடுங்கிய அவள், இந்தக் குரூரப் பிராணியிடமிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டுமேயென்று துக்கத்தோடு உரக்கக் கூச்சலிட்டு அழுகிறாள். ஆனால் ஹரி தன் வேஷத்தைக் கலைத்து விட்டதும், பயந்து போயிந்த சிறுமி தனது பிரிய சகோதரனைக் கண்டு, ‘, அண்ணாதானா இது என்று சொல்லிக் கொண்டு அவனிடம் ஓடுகிறாள். மாயையாகிற கோலத்தில் பிரம்மம் தன்னை மறைத்துக் கொள்கிறது. அப்பொழுது அது இரக்கமற்ற மூர்த்தியாகவும் தோன்றுகிறது. மாயையை அகற்றிவிட்டால் பிரம்மம் அன்புருவான அந்தர்யாமியாகவே தோன்றும்.

---------------------------------------------------------------------------------------------------------------------

||11.46|| தான் விரும்பும் வடிவம் இன்னதென்று இனி அர்ஜுனன் தெளிவுபடுத்துகிறான்:

किरीटिनं गदिनं चक्रहस्तम्‌ इच्छामि त्वां दृष्टुमहं तथैव

तेनैव रूपेण चतुर्भुजेन सहस्रबाहो भव विश्वमूर्ते ।। ४६ ।।

கிரீடிநம் 3தி3நம் சக்ரஹஸ்தம் 

இச்சா2மி த்வாம் த்3ரஷ்டுமஹம் ததை2  

தேநைவ ரூபேண சதுர்பு4ஜேந

ஸஹஸ்ரபா3ஹோ 4 விச்1வமூர்தே ।। 46 ।।


अहं  அஹம்  நான்    त्वां  த்வாம்  உங்களை    तथा एव  ததா2 ஏவ  முன்போலவே    

किरीटिनं  கிரீடிநம்  கிரீடம் தரித்தவரை    गदिनं  3தி3நம்  கதையை ஏந்தினவரை    

चक्र हस्तम्  சக்ர ஹஸ்தம்  கையில் சக்கரத்தை உடையவரை    दृष्टुम्  த்3ரஷ்டும்  தரிசிக்க     

इच्छामि  இச்சா2மி   விரும்புகிறேன்   सहस्र बाहो  ஸஹஸ்ர பா3ஹோ  ஆயிரம் கைகளையுடையவரே    विश्वमूर्ते  விச்1வமூர்தே  விஷ்வரூபத்தை உடையவரே    तेन  தேந  அந்த    

चतुर्भुजेन रूपेण एव  சதுர்பு4ஜேந ரூபேந ஏவ  நான்கு கைகளையுடைய ரூபத்தோடேயே    

भव  4  இருப்பீராக.


முன்போலவே கிரீடமும் கதையும், கையில் சக்கரமும் உடையவராய் உம்மைக் காண விரும்புகிறேன். ஆயிரம் கைகளையுடைய விஷ்வமூர்த்தியே, நான்கு கைகளுடைய அந்த வடிவத்தில் மட்டும் இருப்பீராக.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:

முன்போலவே, கிரீடமும் தண்டும் கையில் சக்கரமுமாக நின்னைக் காண விரும்புகிறேன். அகில மூர்த்தியே. ஆயிரத் தோளாய், முன்னை நாற்றோள் வடிவினை எய்துக.


விளக்கம்:

=> விஷ்ணுவின் வடிவம்:

இது, பொதுவாக பகவான் விஷ்ணு வழிபடப்படும் வடிவம் ஆகும். பாகவதம் மற்றும் பிற புராணங்களில், சங்கு, சக்கரம் மற்றும் கதையுடன் நான்கு கைகளை உடையவராக விஷ்ணு திரும்ப திரும்ப விவரிக்கப்படுகிறார். மக்கள் வணங்கி மகிழும் அந்த வடிவத்தை அர்ஜுனன் பார்க்க விரும்புகிறான். அர்ஜுனனும் அதே வடிவத்தை வழிபட்டிருக்க வேண்டும். எனவே தனது நண்பனின் வடிவத்திற்குத் திரும்புவதற்கு முன், கிருஷ்ணரை அந்த குறிப்பிட்ட வடிவத்தில் பார்க்க விருப்பம் கொண்டு அவ்விதம் தோன்றும்படி கேட்கிறான். ‘அதேபோல, கிரீடமும் கதையும் கையில் சக்கரமும் உடையவராய் உம்மைக் காண விரும்புகிறேன்’, என்கிறான்.

இதில் சக்கரம் என்பது நமது எதிரிகளான அனைத்துவிதமான விருப்பு மற்றும் வெறுப்புகளை அழிப்பதாக உள்ளது. சங்கு என்பது வேதத்தைக் குறிக்கிறது, அது மக்களைத் தன்னிடம் வரும்படி அழைக்கிறது. ஆனால் காமமும் குரோதமும் ஒருவனை அதற்கு அனுமதிக்காமல் குறுக்கில் நிற்கலாம். அப்போது ஈஷ்வர அருளின் காரணமாக, இந்த விருப்பு-வெறுப்புகள் அனைத்தும் சக்கரத்தைக் கொண்டு அழிக்கப்படுகின்றன என்பது அதன் உட்கருத்தாகிறது. கதை என்பது ஒருவனின் அஹங்காரத்தின் அழிவைக் குறிக்கிறது. விஷ்ணுவின் நான்காவது கையானது, அவரது பாதங்களைச் சுட்டிக்காட்டுகிறது. ‘என்னிடம் சரணடையும் போது இவை அனைத்தையும் உங்களால் நிறைவேற்றிக் கொள்ளமுடியும்என்பதை நான்காவது கை குறிக்கிறது. பகவானை வழிபடும் இந்த வடிவில் அர்ஜுனன் அவரைக் காண விரும்புகிறான். அதேபோல(ததா2 ஏவ) அவன் கோரியபடி தனது நண்பனின் பழைய ரூபத்தைப் பார்க்க விரும்புகிறான்

விச்1வமூர்தே, ! விஷ்வரூபத்தை உடையவரே, ஆயிரம் கரங்களைக் கொண்டவரே, ஸஹஸ்ரபா3ஹோ, நான்கு கைகளை கொண்ட அந்த வடிவில் மட்டுமே இருப்பீராக’. நண்பனது வடிவத்திலும் மற்றும் மக்கள் பிரார்திக்கும் அந்த வடிவத்திலும் இருங்கள், ஆனால் விஷ்வரூப வடிவத்தில் அல்ல என்பதாக அர்ஜுனன் இவ்விதமாகக் கூறுகிறான்.

தமது காட்சியை பகவான் மாற்றியருள்கிறார். அர்ஜுனன் பயந்துவிட்டதை உணர்ந்து, கிருஷ்ணர் தனது விஷ்வரூபத்தை விலக்கி, அன்பான வார்த்தைகளால் ஆறுதல் அளிக்கின்றார் என அடுத்த சுலோகத்திற்கு சங்கரர் அறிமுகம் கொடுக்கின்றார்.

---------------------------------------------------------------------------------------------------------------------