வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

விஷ்வரூபதர்ஷன யோகம் 11.35 - 11.37

||11.35|| சஞ்ஜயன் கூறுதல்:

संजय उवाच

एतच्छृत्वा वचनं केशवस्य कृताञ्जलिर्वेपमान: किरीटी

नमस्कृत्वा भूय एवाह कृष्णं सगद्गदं भीतभीत: प्रणम्य ।। ३५ ।।

ஸஞ்ஜய உவாச

ஏதச்ச்2ருத்வா வசநம் கேச1வஸ்ய

க்ருதாஞ்ஜலிர்வேபமாந: கிரீடீ  

நமஸ்க்ருத்வா பூ4 ஏவாஹ க்ருஷ்ணம்

ஸக3த்333ம் பீ4தபீ4: ப்ரணம்ய ।। 35 ।।


संजय उवाच   ஸஞ்ஜய உவாச  சஞ்ஜயன் சொன்னது.

केशवस्य  கேச1வஸ்ய  கேசவருடைய    एतत् वचनं  ஏதத் வசநம்  இந்த வசனத்தை    श्रृत्वा  ச்1ருத்வா  கேட்டு    वेपमान:  வேபமாந:  நடுங்குகிற    किरीटी  கிரீடீ  கிரீடதாரி    कृताञ्जलि:   க்ருதாஞ்ஜலி:  கை கூப்பியவனாய்    नमस्कृत्वा  நமஸ்க்ருத்வா  நமஸ்காரம் செய்து   भीतभीत:  பீ4தபீ4:  அஞ்சியவனாய்    

प्रणम्य  ப்ரணம்ய  நன்கு வணங்கி    भूय एव  பூ4 ஏவ  திரும்பவும்     सगद्गदं  ஸக3த்333ம்  வாய் குளறி   कृष्णं  க்ருஷ்ணம்  கிருஷ்ணரிடம்   आह  ஆஹ  உரைக்கிறான்.


சஞ்ஜயன் சொன்னது:

கேசவருடைய இம்மொழி கேட்டு கிரீடியானவன் நடுங்கிக் கைகூப்பி நமஸ்கரித்து அஞ்சி நன்கு வணங்கி, மீண்டும் கிருஷ்ணரிடம் நாக்குளறி உரைக்கிறான்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:

சஞ்சயன் சொல்லுகிறான்: கேசவன் சொல்லிய இவ்வார்த்தையைக் கேட்டுப் பார்த்தன் மெய்ந் நடுக்கத்துடன் அஞ்சலி புரிந்தான். மீண்டும் கண்ணனை நமஸ்காரம் பண்ணி, அச்சத்துடன் வாய் குழறி வணங்கிச் சொல்லுகிறான்.


விளக்கம்:

=> அர்ஜுனனின் நிலை:

தனது பாஷ்யத்தில் இந்த சுலோகத்திற்கான விளக்கவுரையில் சங்கரர், அர்ஜுனனின் நிலையை விளக்குகிறார். முதலில் வலியால் துடித்து, பின் பயத்தினால் பீடிக்கப்பட்ட அவனுள் எழுந்த பேரானந்தத்தின் காரணமாக அவன் உள்ளன்பு மிகுந்து காணப்படுகிறான். அவனது கண்கள் கண்ணீரால் நிரம்பியுள்ளன; ஆழமான முரண்பட்ட உணர்ச்சிப் பெருக்கினால் அவனது தொண்டை அடைக்கப்பட்டுள்ளது. எனவே அவனது வார்த்தைகள் தெளிவானதாக இல்லாமல், குளறித் தடுமாறின, ஸக3த்333. மேலும் அவன் பயத்தினால் ஆட்கொள்ளப்பட்டவனாய், பீ4தபீ4:, மீண்டும் மீண்டும் வணங்கியவனாய், ப்ரணம்ய, கிருஷ்ணனிடம் பேசலானான்

கிரீடம் தரித்துள்ள கோமகன் யாருக்கும் தலை வணங்கலாகாது. அச்சம் தவிர்ப்பது அவனது தர்மம். பிறர் வணங்க, அவ்வணக்கத்தை ஏற்றுக் கொள்ளுதல் அரசனுக்கு முறை. திடமாக உறுதியளித்தல் அவனது இயல்பு. இங்கு ஈஷ்வரனது முன்னிலையில் அம் முறைமைகளெல்லாம் பறந்தோடுகின்றன. கடவுள் முன்னிலையில் குறுகுதல் உயிர்களது முடிவான செயல் என்பது வெளியாகிறது


=> சஞ்ஜயனின் எதிர்பார்ப்பு:

இதை சஞ்ஜயன் திருதராஷ்டிரரிடம் கூறுவதில் ஒரு உள்நோக்கம் உள்ளதாக சங்கரர் இங்கே குறிப்பிடுகிறார். துரோணர், பீஷ்மர், ஜயத்ரதன் மற்றும் கர்ணன் போன்ற வீரர்கள் ஏற்கனவே அவரால் அழிக்கப்பட்டதை கிருஷ்ணபகவான் சுட்டிக்காட்டினார். எனவே, அர்ஜுனன் இங்கே செய்ய வேண்டியது எல்லாம் ஒரு கருவியாக இருக்க வேண்டியது மட்டுமே, நிமித்தமாத்ர. துரியோதனனின் முழு பலமும் இந்த பெரிய ஜாம்பவான்களைச் சார்ந்திருப்பதால், அவர்கள் அழிக்கப்பட்டால் அவனது வெற்றிவாய்ப்பு கவலைக்கிடமாகி விடும். இந்த நால்வர் இல்லாவிட்டால் அவன் போர் தொடுக்கவே மாட்டான் என்பதையும் திருதராஷ்டிரர் அறிவார். எனவே, அவர்கள் ஏற்கனவே அழிந்துவிட்டதைக் கேள்விப்படும்போது, ​​தன் மகன் அழிவான் என்பதை அவர் அறிவார். இவர்கள் நால்வரும் இல்லாவிடில், பீமன் தனது சபதத்தை நிறைவேற்றி துரியோதனனைக் கொன்றுவிடுவான். எனவே இதை ஒருமுறை கேட்டால், துரியோதனனுக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையை திருதராஷ்டிரர் விட்டுவிடுவார் என்று சஞ்ஜயன் எதிர்பார்க்கிறார். இதன்மூலம் அவர் போர்நிறுத்தத்திற்கான முயற்சியை நாடலாம் என்பதும் அவரது எதிர்பார்ப்பாக இருந்தது. பேரரசரான தந்தையின் சொல், அரசனான துரியோதனனைக் கட்டுப்படுத்தும். ஆனால், செய்தி மிகவும் தெளிவாக இருந்தபோதும் திருதராஷ்டிரர் அதைக் கேட்கவில்லை. ஏன்? ஏனெனில் நடக்கவிருப்பதன் சக்தியின் காரணமாக, 4விதவ்ய-வசா1த். அது விதி, நிர்ணயிக்கப்பட்டு விட்டது. இல்லையேல் துரியோதனன் தனது எல்லா தவறுகளுக்கும் தண்டிக்கப்படாமல் அப்படியே தொடர்ந்திருக்க முடியாது. துரியோதனன் அழியவேண்டுமென்ற விதியின் காரணமாக, போரை நிறுத்தவேண்டுமென்ற எண்ணம் எழவில்லை. தனது மகன்களின் மீதான பற்றுதலால் திருதராஷ்டிரரின் மதிப்பீடு மழுங்கடிக்கப் பட்டுவிட்டது.

இனிவரும் சுலோகங்களில், பயந்து குறுகி நாக்குளறிய அர்ஜுனன் பகவானிடம் யாது மொழிந்தான் என்பது வருகிறது.

---------------------------------------------------------------------------------------------------------------------

||11.36|| அர்ஜுனன் பக்தி பாவனையுடன் பேசுதல்:

अर्जुन उवाच

स्थाने हृषीकेश तव प्रकीर्त्या जगत्प्रहृष्यत्यनुरच्यते

रक्षांसि भीतानि दिशो द्रवन्ति सर्वे नमस्यन्ति सिद्धसङ्घा: ।। ३६ ।। 

அர்ஜுந உவாச

ஸ்தா2நே ஹ்ருஷீகேச1 தவ ப்ரகீர்த்யா

ஜக3த்ப்ரஹ்ருஷ்யத்யநுரஜ்யதே  

ரக்ஷாம்ஸி பீ4தாநி தி3சோ1 த்3ரவந்தி

ஸர்வே நமஸ்யந்தி ஸித்34ஸங்கா4: ।। 36 ।।


अर्जुन: उवाच   அர்ஜுந: உவாச   அர்ஜுனன் சொன்னது

हृषीकेश  ஹ்ருஷீகேச1  ஹிருஷீகேச   तव  தவ  தம்முடைய    प्रकीर्त्या  ப்ரகீர்த்யா  புகழ்ச்சியில்     

जगत्   ஜக3த்  ஜகத்தானது    प्रहृष्यति  ப்ஹ்ருஷ்யதி  மகிழ்ச்சியடைகிறது   

अनुरच्यते   அநுரஜ்யதே   ஆனந்தமடைகிறது    रक्षांसि  ரக்ஷாம்ஸி   ராக்ஷசர்கள்    

भीतानि  பீ4தாநி  பீதியடைந்தவர்களாய்    दिश:  தி31:  திசைகளில்    द्रवन्ति  த்3ரவந்தி  ஓடுகிறார்கள்    सिद्धसङ्घा:  ஸித்34ஸங்கா4:  சித்தர்கள்    सर्वे  ஸர்வே  எல்லாரும்    

नमस्यन्ति   நமஸ்யந்தி   நமஸ்கரிபதும்     स्थाने  ஸ்தா2நே   உமது ஸ்தானத்துக்கு ஏற்றது.  


ஹிருஷீகேச, உமது புகழில் உலகம் இன்புற்று மகிழ்கிறது. ராக்ஷசர்கள் அஞ்சி நாலாப்பக்கமும் ஓடுகிறார்கள்சித்தர் கணங்கள் எல்லாரும் உங்களை வணங்குகிறார்கள். இவை யாவும் பொருத்தமானவைகளேயாம்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:

அர்ஜுனன் சொல்லுகிறான்: இருஷீகேசா, உன் பெருங்கீர்த்தியில் உலகங்களிப்பதும், இன்புறுவதும் பொருந்தும், ராட்சதர் அச்சமுற்றுத் திசைகளில் மறைகிறார்கள், சித்தக் குழாத்தினர் அனைவரும் நின்னை வணங்குகிறார்கள்.


விளக்கம்:

சுலோகம் முப்பத்து ஆறு முதல் நாற்பத்தி ஐந்து வரை அர்ஜுனன் பக்தி எனும் பாவனை மேலெழ பேசுகிறான். ஈஷ்வரன் மீது செலுத்தப்படும் அன்பு, சிரத்தை பக்தி எனப்படுகிறது. சரியான பக்தி அறிவினால்தான் வளரும். ஒருவரை நாம் புரிந்துகொண்ட அளவுதான் அவர் மீது அன்பை நமக்கு உண்டாக்குகிறது. அவ்விதம் இறைவனை பற்றிய ஞானம் ஏற்படுமளவு அவர் மீதான பக்தி அதிகரிக்கிறது. விஷ்வரூப தரிசனத்தை பார்த்த அர்ஜுனனுக்கும் முதலில் ஆச்சரியமும், பின்னர் பயமும் ஏற்பட்டது. அது இப்போது பக்தியாக மாறுகிறது.


=> புகழ்தலும் இன்புறுதலும்:

இப்பகுதி பொதுவாக பிரார்த்தனையாக உச்சாடனம் செய்யப்படும் பகுதியாகும். இங்கு கிருஷ்ணர், ‘ஹ்ருஷீகேச1என்று அழைக்கப்படுகிறார். அனைத்து புலன்களின் தலைவன் என்பது இதன் பொருள் என ஏற்கனவே பார்த்துள்ளோம் - இந்த்3ரியாணாம் ஈச1:, அதாவது பரமாத்மாவைக் குறிக்கிறது. ‘ஸ்தா2நேஎனில் சரியானது, பொருத்தமானது என்பது பொருள். அனைத்து பெருமைகளும் அவருக்கு பொருத்தமானது, பகவானது ஸ்தானத்துக்கு ஏற்றது. ‘ உங்களது புகழைப் பாடுவதன் மூலம் உலகம் மகிழ்கிறதுதவ ப்ரகீர்த்யா ஜக3த் ப்ஹ்ருஷ்யதி’. பகவானின் மஹிமைகளை போற்றிப் பாடுவதன் மூலமும், அவரது பெருமைகளைக் கேட்பதன் மூலமும் இந்த உலகில் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியை அடைகிறார்கள் என்று சங்கரர் கூறுகிறார். ஆனால் இது சரியானதே என்கிறான் அர்ஜுனன். அதாவது இறைவனைத் துதிப்பதில் மிகையேதுமில்லை என்று அவரை அறிந்திருப்பதால் இப்போது அர்ஜுனனால் உறுதியாகச் சொல்ல முடிகிறது. வரையறைக்குட்பட்ட அறிவு, ஆற்றல் அல்லது நற்பண்புகள் கொண்ட ஒரு நபரையோ அல்லது ஒரு பொருளையோ மிகையாகப் புகழ்கிறோம். ‘கருணைக் கடல்என்று ஒருவரை புகழும்போதும், அவர் அப்படி இல்லாத சந்தர்ப்பமும் வரத் தான் செய்கிறது. இரக்கமுள்ளவர் என்பதை மிகைப்பட கருணைக் கடல் என்று புகழும்போது அது முகஸ்துதியாக மாறுகிறது.

ஆனால் எல்லையற்றதான ஒன்றை எவ்வளவு பாராட்டும்போதும் அது மிகையாக ஆகாது. அப்படியிருக்கையில் இங்கோ, பகவானைப் புகழும் எந்தப் புகழ்ச்சியும் உண்மையில் போதுமானதாக இல்லை. நமது வரம்புக்குட்பட்ட அறிவிலிருந்து, சர்வமாக விளங்கும் அறிவைப் பற்றி நாம் எவ்வளவு தெரிந்துகொள்ள முடியும்? அப்படியே அறிந்தாலும் அதை எந்த அளவு வார்த்தையில் காட்டிவிட முடியும். எனவே இவ்விஷயத்தில் நாம் எவ்வளவு புகழ்ந்தாலும் மிகையாக செய்துவிட்டோம் என்ற குற்றம் நேராது. எனவேதான் ஆனந்த வடிவினனான பகவானை துதிக்கையில் மக்கள் மகிழ்ச்சியைக் அடைகிறார்கள். அதனை அர்ஜுனன், நீங்களே ஆனந்த சொரூபம் ஆகையால் உங்களின் பெருமையினால் இவ்வுலகு இன்புற்று இருப்பது பொருத்தமானது தான், என்கிறான்.

அதுமட்டுமின்றி, அவர்கள் இன்புறுகிறார்கள், உங்களை நேசிக்கத் தொடங்குகிறார்கள்அநுரஜ்யதே , என்கிறான். அதற்கும் நீங்கள் தகுதியானவர் என்பதால் அதுவும் சரியானதே ஆகும். போதுமான அளவு போற்றப்பட முடியாதவர், சர்வவல்லமையுள்ள, எல்லாமறிந்த இந்த பகவான், எல்லோராலும் எளிதில் அணுகக்கூடியவராக இருக்கிறார். இடைத்தரகர்களும் இல்லை; மூடிய கதவுகளும் இல்லை. எனவே இயற்கையாகவே மக்கள் உங்களை நேசிக்கிறார்கள்; பக்தி செலுத்துகிறார்கள். ஆனால் அதுவும் பொருத்தமானதே.


=> அஞ்சுதலும் ஓடுதலும்:

மகிழ்ச்சி, ஹர்ஷ, மற்றும் பக்தி, அநுராக3 ஆகியவற்றிற்கான விஷயமாக பகவான் இருக்கிறார். இது பொருத்தமானது. அதேபோலதர்மத்தைப் பின்பற்றாதவர்கள் அவருக்குப் பயப்படுகிறார்கள் என்பதும் பொருத்தமானது, ஸ்தா2நே. தர்மத்திற்கும் ஒழுக்க நெறிகளுக்கும் எதிராகச் செல்பவர்கள், ராக்ஷசர்கள், ரக்ஷாம்ஸி, அஞ்சியவர்களாய், பீ4தாநி, உங்களை விட்டு எல்லாத் திசைகளிலும் ஓடுகிறார்கள், தி31: த்3ரவந்தி. பயமின்மை மற்றும் பயம் இரண்டிற்கும் பகவானே காரணம் என்பதால் அதுவும் சரியானதே. அவர் நம்முடன் இருந்தால் எந்த பயமும் இல்லை. இறைவனை சரியாகப் புரிந்துகொள்வதனால் ஒருவன் முற்றிலும் அச்சமற்றவனாக ஆகிவிடுகிறான். ஏனென்றால் அங்கு இரண்டாவது விஷயம் இல்லை; சுயமே இறைவன். ஒரு பக்தனின் நிலையில் இருக்கும்போதும்கூட பயம் இல்லை, ஏனென்றால் நம்மை ஆதரிக்க வல்லவர் ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கை பயத்தை அகற்றுகிறது. எவ்வாறாயினும் நியதிகளை மீறுபவர்களுக்கு, அந்த நியதிகளின் மூலமாகவே இறைவன் தண்டிப்பவராக மாறுகிறார். நெருப்பைத் தொட்டால் சுடும் என்பது பொது நியதி. ஆனால் குளிர்காலத்தில் கதகதப்பை கொடுக்கவும் சமைக்கவும் அது உதவுகிறது. இருப்பினும் அதை தொடும்பொழுது சுடும் எனும் நியதி மாறுவதில்லை. அதன் தன்மையை அறிந்து அதைச் சரியாகக் கையாள்கிறோமா என்பதே கேள்வி. அப்படி இங்கு பகவானின் நியதிகளை மீறுபவர்கள் அவரைக் கண்டு அஞ்சி நாலாப்பக்கமும் ஓடுகிறார்கள்.


=> நமஸ்கரித்தலும்:

சித்தர் கணங்கள் எல்லாரும் வணங்குகிறார்கள்ஸர்வே ஸித்34 ஸங்கா4: நமஸ்யந்தி’. பகவானை வணங்கி அவரிடத்து யோகம் செய்து அவருக்கு உரியவர் ஆகின்றவர்கள் சித்தர்கள் ஆவர். இறைவனின் பெருமைகளையும், படைப்பில் உள்ள ஒழுங்கையும் அறிந்து, இந்த உயர்ந்த மனிதர்கள், கபிலர் முதலான அனைத்து சித்தர்களும் பகவானை நமஸ்கரித்தலும் பொருத்தமானதே, ஸ்தா2நே.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

தெய்விகம் வாய்ந்த ரிஷிகள் ஈஷ்வரனுடைய நெருங்கிய உறவினரைப் போன்றவர்கள். அவர்கள் அவனுடைய நண்பர்கள் போலவும், சகாக்கள் போலவும், உறவினர்கள் போலவும் இருக்கின்றனர். சாதாரண மனிதர்கள் எல்லாரும் எட்டிய உறவினர் போன்றவர்கள். அவர்கள் கேவலம் ஈஷ்வர சிருஷ்டிகள் மாத்திரமே.

---------------------------------------------------------------------------------------------------------------------

||11.37|| இவர்களனைவரும் பகவானை ஏன் வணங்குகிறார்கள் என அர்ஜுனன் கூறுகிறான்:

कस्माच्च ते नमेरन्महात्मन् गरीयसे ब्रह्मणोऽप्यादिकर्त्रे

अनन्त देवेश जगन्निवास त्वमक्षरं सदसत्तत्परं यत् ।। ३७ ।।

கஸ்மாச்ச தே நமேரந்மஹாத்மந்

3ரீயஸே ப்3ரஹ்மணோऽப்யாதி3கர்த்ரே

அநந்த தே3வேச1 ஜக3ந்நிவாஸ

த்வமக்ஷரம் ஸத3ஸத்தத்பரம் யத் ।। 37 ।।


महात्मन्  மஹாத்மந்  மஹாத்மாவே    अनन्त  அநந்த  அந்தமில்லாதவர்     

देवेश  தே3வேச1  தேவர்களுக்கெல்லாம் ஈசன்    जगन्निवास  ஜக3ந்நிவாஸ  ஜகத்துக்கு இருப்பிடமானவர்   ब्रह्मण: अपि  ப்3ரஹ்மண: அபி   பிரம்மாவுக்கும்    गरीयसे  3ரீயஸே  பெரியவர்    

आदिकर्त्रे ஆதி3கர்த்ரே   முதற்காரணமானவரும் ஆகிய    ते  தே  உங்களுக்கு    कस्मात्  கஸ்மாத்  ஏன்    नमेरन्  நமேரந்  நமஸ்காரம் செய்யமாட்டார்கள்    सत्   ஸத்  தோன்றியுள்ளதும்    

असत्  அஸத்  தோன்றாததும்   परं  பரம்  (இவ்விரண்டிற்கும்) அப்பாற்பட்டதும்     यत्  யத்  எதுவோ    

तत् अक्षरं   தத் அக்ஷரம்   அந்த அழியாப் பொருளும்    त्वं  த்வம்  நீங்களே.


மஹாத்மாவே, அந்தமில்லாதவரே, தேவர்களின் தலைவரே, வையகத்தின் இருப்பிடமே, பிரம்மாவுக்கும் பெரியவரே, முதற்காரணமே உங்களை ஏன் அவர்கள் நமஸ்கரிக்க மாட்டார்கள்? தோன்றியது தோன்றாததும் அவ்விரண்டுக்கும் அப்பாற்பட்டதும் அழியாப் பொருளும் நீங்களே.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:

மகாத்மாவே, நின்னை எங்ஙனம் வணங்காதிருப்பார்? நீ ஆதி கர்த்தா. பிரம்மனிலும் சிறந்தாய், அநந்தா, தேவேசா, வையத்தின் உறைவிடமே, நீ அழிவற்ற பொருள், நீ சத்; நீ அசத்; நீ அவற்றைக் கடந்த பிரம்மம்.


விளக்கம்:

=> முழுமுதற்காரணம்:

உலகைப் படைத்த ஹிரண்யகர்பன் அல்லது நான்முக பிரம்மாவை விடவும் பெரியவராக, மேலானவராக இருப்பதால் சித்தர்கள் கூட பகவானை நமஸ்கரிக்கின்றனர் என்பதில் அர்ஜுனனுக்கு ஆச்சரியம் ஏதுமில்லை. ஆகவேதான் அவன், ‘அனைத்து கடவுளர்களை விடவும் பெரியவரும், சிருஷ்டி கர்த்தாவான பிரம்ம தேவருக்கும் முதல்காரணமாக விளங்கும் உங்களை அவர்கள் ஏன் வணங்கக்கூடாது?’ என்று தனது ஆச்சரியத்தை கேள்வியாகக் கேட்கின்றான். அதாவது, இப்படிப்பட்ட பெருமையுடைய உங்களை சித்தர்களும் வணங்கித்தான் ஆவார்கள் என்பது இதனுடைய பொருள். பிரம்மா, இந்திரன் போன்ற தேவர்களுக்கும்கூட பகவானே காரணமாகவும், நிலைநிறுத்தும் காரணியாகவும் இருக்கும்போது, அவருடைய இத்தகைய மஹிமைகளை அறிந்த அனைவரும் அவரிடம் சரண்புகுதல் என்பது பொருத்தமானது.


=> அனைத்து பெருமைகளுக்கும் உரியவர்:

பகவானை, அநந்த_அந்தமில்லாதவர், தே3வேச1_தேவர்களுக்கெல்லாம் ஈசன், ஜக3ந்நிவாஸ_ஜகத்துக்கு இருப்பிடமானவர், என்று அர்ஜுனன் அழைக்கின்றான். கால, தேச நிமித்தத்தில் கட்டுப்படாதவர் ஆதலால் அவர் அநந்தர். தேவர்களுக்கெல்லாம் அவரே அதிபதி. வையகத்துக்கு இருப்பிடமாக அவரே இருக்கிறார். இவ்விதமாக பகவானின் மஹிமைகளைப் போற்றிப் புகழும் கடவுளர்களையும் சித்தர்களையும், மற்றும் அதர்மத்திற்கு அடைக்கலம் கிடைக்காதபடியால் எல்லாத் திசைகளிலும் பயந்து ஓடிக்கொண்டிருக்கும் ராக்ஷஸர்களையும் வெளிப்படுத்துவதன் மூலம் பகவானை உயர்த்திப் பேசினான். இப்போது பகவானைப் பற்றிய புரிதலை வெளிப்படுத்துகிறான். ‘தோன்றியுள்ளதும் தோன்றாததும் அவ்விரண்டுக்கும் அப்பாற்பட்டதுமான அழியாப் பொருளாக, எல்லையற்ற ப்ரம்மமாக நீங்களே இருக்கிறீர்கள்என்கிறான். உலகாகத் தோன்றியுள்ளது, வெளித்தோற்றத்திற்கு வந்துள்ளது, அல்லது காரியம், ‘ஸத்எனப்படும். தோன்றாத மூலப்பிரக்ருதி, வெளித்தோற்றத்திற்கு வராதது, அல்லது காரணம், ‘அஸத்எனப்படும். அதனிடமிருந்து அனைத்தும் தோன்றியும் அது சிறிதும் தேய்வடையவில்லை ஆதலால் அது அக்ஷரம். ஸத் அஸத் இரண்டையும் கடந்திருப்பதால் அது பரம். பகவான் இத்தனையுமாயிருப்பதால் அவரை வாழ்த்தி வணங்காது வேறு என்ன செய்யமுடியும்? என அர்ஜுனன் வியக்கிறான்.

---------------------------------------------------------------------------------------------------------------------