திங்கள், 12 பிப்ரவரி, 2024

விபூதி யோகம் 10.14 - 10.16

||10.14|| அர்ஜுனன் தனது சிரத்தையை வெளிப்படுத்துகிறான்:

सर्वमेतदृतं मन्ये यन्मां वदसि केशव

हि ते भगवन्व्यक्तिं विदुर्देवा दानवा: ।। १४ ।।

ஸர்வமேதத்3ருதம் மந்யே யந்மாம் வத3ஸி கேச1

ஹி தே 43வந்வ்யக்திம் விது3ர்தே3வா தா3நவா: ।। 14 ।। 


केशव  கேச1  கேசவா   यत् मां वदसि  யத் மாம் வத3ஸி  எனக்கு எதை சொல்லுகிறீரோ   एतद्  ஏதத்3  அது    सर्वम्  ஸர்வம்  யாவும்    ऋतं मन्ये   ருதம் மந்யே  உண்மை என்று கருதுகிறேன்    हि  ஹி  நிச்சயமாக   

भगवन्  43வந்  பகவானே    ते व्यक्तिं  தே வ்யக்திம்  உம்முடைய வெளிப்பாட்டை   

देवा: विदु:   தே3வா: விது3:  தேவர்கள் அறிகிறதில்லை  

दानवा:  தா3நவா:  அசுரர்களும் அறிகிறதில்லை.         

    

கேசவா, நீர் எனக்கு ஓதுவது யாவும் உண்மை என்றே எண்ணுகின்றேன். பகவானே, உமது தோற்றத்தைத் தேவர்களும் அறியார், அசுரர்களும் அறியார்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

கேசவா, நினது கிளவி யனைத்தையும் மெய் யெனக் கொண்டேன். பகவனே, விண்ணவரும் அசுரரும் நின் விளக்கத்தை யறிவரோ?


விளக்கம்:

இந்த சுலோகத்தில் அர்ஜுனன் தனது சிரத்தையை வெளிப்படுத்துகிறான். இந்த ரிஷிகள் கொடுத்த அனைத்து விளக்கங்களும் உண்மை என்று நான் கருதுகிறேன். மேலும் நீங்கள் முந்தைய அத்தியாயங்களில் என்னிடம் கூறியதும் நான் முற்றிலும் உண்மை என்றே கருதுகிறேன், என்கிறான் அர்ஜுனன். ‘ருதம்எனில் முற்றிலும் உண்மை என்பது பொருள். இவ்வார்த்தையை உபயோகிப்பதன் மூலம் சொல்லப்பட்ட விஷயத்தில் துளியும் சந்தேகமில்லாமல் அதை முற்றிலும் உண்மை என்று உணர்வதாக அர்ஜுனன் கூறுகிறான். உண்மையை உண்மை என்று புத்தி நிச்சயம் செய்வது ஒருவகையில் மனத்தூய்மையின் வெளிப்பாடாகும். சித்தம் சுத்தியடைந்திருக்கும் போது தான் இது நடைபெறுகிறது

அடுத்த வரியில் அர்ஜுனன், ‘! பகவானே, தேவர்களோ அசுரர்களோ உங்களுடைய தோற்றத்தின் பெருமையை அறிவதில்லை’, என்கிறான். உங்களின் வெளிப்பாட்டின் மஹிமை தேவர்களுக்கே விளங்குவதில்லை. இந்நிலையில், அசுத்த புத்தியுடையவர்களான அசுரர்கள் எப்படி அறியப்போகிறார்கள்! அனைத்திற்கும் தாங்களே காரணம் என்கிற உண்மையை அவர்கள் பார்ப்பதில்லை. காரணத்தின் விளைவாக தோன்றிக் கொண்டுள்ள இந்த சிருஷ்டையைத் தான் அவர்களால் பார்க்கமுடிகிறது


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

சூரியன் பூமியைக் காட்டிலும் பன்மடங்கு பெரியதாயினும் வெகுதூரத்துக்கு அப்பாலிருப்பதால் ஒரு சிறிய தட்டைப் போலக் காணப்படுகிறது. அதுபோலவே, ஈஷ்வரன் அளவற்ற மகத்துவம் உடையவனாயிருந்தும், நமக்கும் அவனுக்குமிடையே உள்ள தூரத்தினால் நாம் அவனுடைய உண்மையான மகத்துவத்தை அறியச் சக்தியற்றவர்களாக இருக்கிறோம்.

---------------------------------------------------------------------------------------------------------------------

||10.15|| பகவானிடம் தோன்றும் பக்தியுணர்வை வெளிப்படுத்துகிறான்:

स्वयमेवात्मनात्मानं वेत्थ त्वं पुरुषोत्तम

भूतभावन भूतेश देवदेव जगत्पते ।। १५ ।।

ஸ்வயமேவாத்மநாத்மாநம் வேத்த2 த்வம் புருஷோத்தம  

பூ4தபா4வந பூ4தேச1 தே3வதே3 ஜக3த்பதே ।। 15 ।।


पुरुषोत्तम  புருஷோத்தம  புருஷோத்தமா     भूतभावन  பூ4தபா4வந  உயிர்களைப் படைத்தவரே   

भूतेश  பூ4தேச1  உயிர்களைக் காப்பவரே   देवदेव  தே3வதே3  தேவர்களுக்கும் தேவனாக இருப்பவரே   जगत्पते  ஜக3த்பதே  உலகை ஆளுபவரே  त्वं  த்வம்  நீங்கள்  त्मना  ஆத்மநா  உங்களால்    

त्मानं  ஆத்மாநம்  உங்களை   स्वयं एव  ஸ்வயம் ஏவ   தாங்களே    वेत्थ  வேத்தஅறியவல்லீர்.


புருஷோத்தமா, உயிர்களைப் படைத்தவரே, உயிர்களைக் காப்பவரே, தேவர்களுக்கும் தேவனாக இருப்பவரே, உலகை ஆளுபவரே, உம்மை உம்மால் நீரே உள்ளபடி அறிவீர்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

புருஷோத்தமா, உன்னை நீயே அறிவாய். பூதங்களானாய்! பூதத் தலைவனே! தேவ தேவ! வையத் திறைவா!


விளக்கம்:

பகவானிடம் தனது புரிதலைக் கூறுவதை அர்ஜுனன் இங்கும் தொடர்கிறான். அந்தச் செயல்பாட்டில் அவன் இதுவரை சேகரித்த அறிவை வெளிப்படுத்துகிறான்.

கிருஷ்ணரை ஈஷ்வரன்என்று கூறும் ரிஷிகளின் கருத்தை உறுதிப்படுத்தும் விதமாக அர்ஜுனன் பேசி வருகிறான். இந்த முழு பிரபஞ்சத்தையும் உள்ளடக்கிய அனைத்து மஹிமைகள் குறித்தும் பேசுவதற்கு கிருஷ்ணர் மட்டுமே தகுதியானவர் எனக் கூறப்போகிறான். அதற்கான காரணங்களை இந்த சுலோகத்தில் வர்ணிக்கிறான்


=> உங்களை நீங்களே அறிவீர்கள்:

நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை நீங்களே அறிவீர்கள்ஸ்வயம் ஏவ வேத்த2. எனில், வேறு யாராலும் அது அவருக்கு கற்பிக்கப்படவில்லை என்பது பொருள். அப்படியானால் அவரைப் பற்றி அவருக்கு என்ன தெரியும்? உங்களின் சொரூபத்தை பற்றிய உண்மைஆத்மாநம், என்கிறான் அர்ஜுனன். எப்படி தெரியும்? உங்களது சொந்த மனதின் மூலமாகத் தெரியும்ஆத்மநா. வேறு யாரும் உபதேசிக்காமலேயே உங்களின் சொரூபத்தை பற்றிய உண்மை உங்களுக்கு தெரியும். அதனாலேயே உங்களை நீங்களே ஈஷ்வரன் எனக் கூறுகிறீர்கள். ஞானம், வைராக்கியம், வீர்யம், தேஜஸ் மற்றும் எதையும் ஆசைப்படாத சக்தியுடையவராக உங்களை நீங்களே அறிகிறீர்கள் என சங்கரர் விளக்கம் கொடுக்கிறார். சுருக்கமாக, ‘ புருஷோத்தமா, ஜீவர்களில் உயர்ந்தவரே, உங்களை நீங்களே ஈஷ்வரன் என அறிவீர்கள்என்கிறான் அர்ஜுனன்.

புருஷர்களில் இவரே அழிவற்றவர், ஒப்பற்றவர்; ஆதலால் இவர் புருஷோத்தமர். உயிர்களுக்கெல்லாம் இவர் முதற்காரணமாதலால் இவர் பூதபாவனன்(பூ4தபா4வந). படைத்தபின் அவைகளுக்குத் தலைவராயிருக்கிறார். அவைகளை காப்பவரும் அவரேயாதலால் பூதேசன்(பூ4தேச1). பின்பு, அவைகளையெல்லாம் ஆளுகிறபடியால் அவர் ஜகத்பதி(ஜக3த்பதே). தமது முழுமஹிமையை அவர் தாமே அறிந்துகொள்கிறார். அனந்த கல்யாண குணங்களையுடைய அப்புருஷோத்தமனை மற்றவர்கள் உள்ளபடி அறிந்துகொள்ள இயலாதவர்கள்

உங்களை நீங்களே நன்கு அறிவீர்கள்; எனவே வேறொருவரால் அதை உபதேசிக்க முடியாது. ஆகையினால் நீங்கள்தான் உங்களது பெருமையை எனக்கு முழுவதுமாக கூற வேண்டும் என அர்ஜுனன் அடுத்துவரும் சுலோகங்களில் கோரிக்கை வைப்பதற்கான ஆரம்பத்தை இங்கு விதைக்கிறான்


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

வைரம் ஒன்றை ஒருவன் கடைத்தெருவுக்கு விற்பனைக்கு எடுத்துச் சென்றான். அது என்ன விலைபெறும் என்று அவன் ஒரு கத்திரிக்காய் கடையில் கேட்டான். கத்திரிக்காய் கடைக்காரன் அதற்கு ஒரு கூடை கத்திரிக்காய் கொடுக்கலாம் என்றான். அரிசிக் கடைக்காரன் அந்த வைரத்துக்கு ஒரு மூட்டை அரிசி கொடுக்கலாம் என்றான். இப்படி ஒவ்வொருவனும் தன் அறிவுக்கு எட்டியபடி அதை மதிப்பிட்டான். பிறகு வைர வியாபாரி அது பத்து லட்சம் ரூபாய் பெறும் என்று மதிப்பிட்டான். இப்படி பிரம்மத்தையும் அவரவர் அறிவுக்கு எட்டியபடி மதிப்பிடுகிறார்கள். பிரம்மமே பிரம்மத்தை முழுதும் அறியும்.

---------------------------------------------------------------------------------------------------------------------

||10.16|| அர்ஜுனனின் கோரிக்கை:

वक्तुमर्हस्यशेषेण दिव्या ह्यात्मविभूतय:

याभिर्विभूतिभिर्लोकानिमांस्त्वं व्याप्य तिष्टसि ।। १६ ।।

வக்துமர்ஹஸ்யசே1ஷேண தி3வ்யா ஹ்யாத்மவிபூ4தய:  

யாபி4 ர்விபூ4திபி4ர்லோகாநிமாம்ஸ்த்வம் வ்யாப்ய திஷ்ட2ஸி ।। 16 ।।


याभि: विभूतिभि:  யாபி4: விபூ4திபி4:  எந்த விபூதிகளினால்    त्वं  த்வம்  நீங்கள்    

इमान् लोकान्  இமாந் லோகாந்  இந்த உலகங்களை   व्याप्य  வ்யாப்ய  வியாபித்து    

तिष्टसि  திஷ்ட2ஸி  இருக்கின்றீரோ   दिव्या:  தி3வ்யா  தெய்வத் தன்மையுடைய   

त्मविभूतय:  ஆத்மவிபூ4தய:  உங்களது பெருமைகளை   

अशेषेण हि  அசே1ஷேண ஹி  பாக்கியில்லாமலேயே    वक्तुम्  வக்தும்  வர்ணிப்பதற்கு    

अर्हसि  அர்ஹஸி  கடமைப்பட்டிருக்கிறீர்கள்.    


எந்த விபூதிகளைக் கொண்டு இந்த உலகங்களை நிரப்பியுள்ளீரோ, மேலான அந்த மஹிமைகளை மிச்சமின்றி நீங்களே வர்ணித்தருள்க.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

எந்த மகிமைகளால் நீ இவ்வுலகங்களைச் சூழ்ந்து நிற்கிறாயோ, அந்த நின் மகிமைகள் தேவத்தன்மையுடையன. அவற்றை எனக்கு மிச்சமின்றி உணர்த்த வேண்டுகிறேன்.


விளக்கம்:

இறைவனின் மஹிமையைப் பற்றி பேச மற்றவர்கள் இருந்தாலும், நீங்களே அதற்கு மிகவும் தகுதியானவர் எனக் கூறி அர்ஜுனன் தனது கோரிக்கையை பகவானிடம் முன்வைக்கிறான்.


=> விளக்க வல்லவர்:

உங்களின் பெருமையை முழுமையாக எடுத்துச் சொல்வதற்கு நீங்களே தகுதியானவர்வக்தும் அர்ஹஸி அசே1ஷேண. இங்குஅசே1ஷேணஎனில் பாக்கியில்லாமல், எதையும் மிச்சம் வைக்காமல் முழுமையாக எடுத்துக் கூறுவதற்கு, என்பது பொருள். எதை விளக்க வேண்டுமென அர்ஜுனன் கேட்கிறான்? திவ்யமான உங்களது சொந்த மஹிமைகள்தி3வ்யா ஆத்மவிபூ4தய:. இங்குஆத்மாஎனும் வார்த்தை பகவானை மட்டுமல்ல, சுயத்தைக் குறிக்கின்றது. எனவே அர்ஜுனன் மறைமுகமாக, ‘ஆத்மாவாகிய என்னைப் பற்றி உங்களுக்கே நன்றாகத் தெரியும். ஆகவே ஆத்மாவின் மஹிமைகளை உங்களாலேயே முழுவதுமாக விளக்க முடியும்என்கிறான்.

எந்த விபூதிகளையெல்லாம் கொண்டு இந்த உலகத்தை நிரப்பியுள்ளீரோ அதைக் குறித்து பேச உங்களுக்கு மட்டுமே தகுதியுள்ளதுயாபி4: விபூ4திபி4: த்வம் இமாந் லோகாந் வ்யாப்ய திஷ்ட2ஸி.

சங்கீதத்தின் மஹிமையை சங்கீத வித்வானே நன்கு விளக்க வல்லவன். யானையின் பலத்தை யானையே தன் செயலால் விளக்கவல்லது. அரசனுடைய ஐஸ்வர்யத்தை அரசனே நன்கு எடுத்துச் சொல்ல வல்லவன். அதுபோல, ஈஷ்வர விபூதிகளை ஈஷ்வர அவதாரமே நன்கு விளக்க வல்லதாகிறது.

ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

ஈஷ்வரன் தனது கிருபையாலேயே தன்னைத் தோற்றுவிக்கிறான். அவன் ஞான சூரியன். அவனுடைய ஒற்றைக் கிரணமே இவ்வுலகம் முழுமைக்கும் அறிவைக் கொடுத்துள்ளது. அதனால்தான் நாம் ஒருவரை ஒருவர் தெரிந்துகொள்ளவும் பலவிதமான ஞானங்களைப் பெறவும் வல்லவர்களாய் இருக்கிறோம். அவன் தனது ஒளியைத் தனது திருமுகத்திலே திருப்பிக்கொள்ளும் பொழுதுதான் நம்மால் அவனைக் காணமுடியும்.

---------------------------------------------------------------------------------------------------------------------