செவ்வாய், 20 பிப்ரவரி, 2024

விபூதி யோகம் 10.17 - 10.19

||10.17|| அர்ஜுனனின் வேண்டுதல்:

कथं विद्यामहं योगिंस्त्वां सदा परिचिन्तयन्

केषु केषु भावेषु चिन्त्योऽसि भगवन्मया ।। १७ ।।

கத2ம் வித்3யாமஹம் யோகி3ம்ஸ்த்வாம் ஸதா3 பரிசிந்தயந்  

கேஷு கேஷு பா4வேஷு சிந்த்யோऽஸி 43வந்மயா ।। 17 ।।


योगिन्  யோகி3ந்  யோகியே   सदा परिचिन्तयन्  ஸதா3 பரிசிந்தயந்  எப்பொழுதும் சிந்தித்துக்கொண்டு   

कथं  கத2ம்  எப்படி   त्वां  த்வாம் உன்னை   अहं विद्याम्  அஹம் வித்3யாம்  நான் அறிவேன்    

भगवन्  43வந்  பகவானே   मया  மயா  என்னால்   केषु केषु   கேஷு கேஷு  என்னென்ன   

भावेषु  பா4வேஷு  பாவங்களில்/பொருள்களிடத்தில்   

चिन्त्य: असि  சிந்த்ய: அஸி  சிந்திக்க தக்கவராக இருக்கிறீர்கள்?           


யோகியே, எப்பொழுதும் உம்மையே சிந்தித்து நான் உம்மை அறிவது எப்படி? பகவானே, என்னென்ன பாங்குகளில் நீங்கள் என்னால் சிந்திக்கத் தக்கவர்?


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

யோகி! எப்போதும் உன்னையே சிந்தித்து நின்னை யுணருமாறெங்ஙனே? பகவனே! எவ்வெப் படிகளில் நின்னை யான் கருதல் வேண்டும்?


விளக்கம்:

அர்ஜுனன் தனது இரு கேள்விகளை பகவானிடம் வேண்டுதலாக வைக்கின்றான். என் மனம் வெளி விஷயங்களில் போய்க்கொண்டிருந்தாலும் அவ்விஷயங்களை நான் எப்படி பொருள்படுத்தினால் என் எண்ணம் உங்களைப் பற்றியதாக மாறும்? ஒரு தாய்க்குத் தன் குழந்தைகளின் விளையாட்டுக் கருவிகளைப் பார்த்தாலும் குழந்தையின் ஞாபகம் வந்தமைகிறது. எனக்கு அப்படி உலகினை இந்திரியங்கள் மூலமாகப் பார்ப்பதற்கிடையில் உங்களைப் பற்றிய சிந்தனையே வருவதற்கு ஏதேனும் உபாயம் உண்டா? என அர்ஜுனன் கேட்கின்றான்


=> கேசவா, தாங்கள் எனக்குச் செய்யத்தக்கதாவது:

எப்பொழுதும் உங்களையே சிந்தித்துக் கொண்டிருப்பவனாக உங்களது மஹிமையை நான் எப்படி அறிவேன்ஸதா3 பரிசிந்தயந், என்கிறான். நம்மைச் சுற்றி நாம் காண்பதெல்லாம் பொருள்கள் மட்டுமே. அந்த பொருள் ஒரு பொருளாக விளங்கக் காரணமான ஈஷ்வரனை அங்கீகரிக்க, நாம் புலன்களின் வழியாக கிரஹிப்பதைத் தாண்டிச் செல்லவேண்டியிருக்கிறது. இது முற்றிலும் புத்தியின் தரிசனமாக இருப்பதால், ஞானமெனும் கண்கொண்டு(ஞான-சக்ஷு) அதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஈஷ்வர தியானமே ஈஷ்வர மஹிமைகளைப் பார்ப்பதாகும்

ஆகவே, எந்தெந்த பொருள்களில் நீங்கள் தியானிக்கத் தக்கவர்கேஷு கேஷு பா4வேஷு சிந்த்ய: அஸி, என்கிறான் அர்ஜுனன். இந்த பிரபஞ்சத்தில் பல பொருள்கள் மற்றும் உயிரினங்கள் உள்ளன; அவைகளில் சிலவற்றில் இறைவனின் மஹிமைகள் சிறப்பாக வெளிப்படுகின்றன. இவைகள் வேதங்கள் அல்லது புராணங்களால் சிறப்பு வாய்ந்தவையாக அடையாளம் காணப்படுகின்றன. எனவே, அர்ஜுனன், ‘இறைவா! நீங்கள் விசேஷமாக வெளிப்பட்டுள்ள, உங்களை தியானிக்கத்தக்க அந்த மகிமைகளையெல்லாம் எனக்குச் சொல்லுங்கள்என்கிறான். படைக்கப்பட்டுள்ள அனைத்திலும் இறைவனின் மஹிமை வெளிப்பட்டபோதிலும் ஏதேனும் சில பொருள்கள் அல்லது மனிதர்கள் அவற்றில் தனித்து நிற்கிறார்கள். எனினும், தனித்துவமாகக் கருதப்படும் இவற்றின் சிறப்புகள் எப்படி ஈஷ்வரனோ, அப்படியே எந்தவொன்றிலும் சாதாரணமாக இருக்கும் உள்ளியல்பான தன்மையும் அதன் மதிப்பும் ஈஷ்வரனே ஆவார். சிறப்பானதோ சாதாரணமானதோ எந்தவொரு மதிப்பும் ஈஷ்வரனையே சார்ந்தது.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

விளையாட்டுப் பழமும் விளையாட்டு யானையும் வாஸ்தவமான பழத்தையும் யானையையும் நினைப்பூட்டுவதைப் போல, ஆராதிக்கப்படும் விக்கிரகங்கள் நித்தியனும் அரூபியுமான ஈஷ்வரனை நினைப்பூட்டுகின்றன.

---------------------------------------------------------------------------------------------------------------------

||10.18|| விளக்கமாகச் சொல்லுங்கள் எனும் கோரிக்கை:

विस्तरेणात्मनो योगं विभूतिं जनार्दन

भूय: कथय तृप्तिर्हि शृण्वतो नास्ति मेऽमृतम् ।। १८ ।। 

விஸ்தரேணாத்மநோ யோக3ம் விபூ4திம் ஜநார்த3

பூ4: கத2 த்ருப்திர்ஹி ச்1ருண்வதோ நாஸ்தி மேऽம்ருதம் ।। 18 ।।


जनार्दन  ஜநார்த3  ஜனார்தனா   त्मन: योगं  ஆத்மந: யோக3ம்  உம்முடைய யோகத்தையும்   

विभूतिं   விபூ4திம்   மஹிமைகளையும்    भूय:  பூ4:  மறுபடியும்   विस्तरेण  விஸ்தரேண  விஸ்தாரமாக    कथय  கத2   சொல்லுக   हि  ஹி  ஏனென்றால்   अमृतम्  அம்ருதம்   மொழியமுதை   

शृण्वत: मे  ச்1ருண்வத: மே  கேட்கின்ற எனக்கு   तृप्ति:  த்ருப்தி:  திருப்தி    अस्ति  அஸ்தி  இல்லை.


ஜனார்தனா, உம்முடைய யோகத்தையும் மஹிமைகளையும் மீண்டும் விரித்து விளக்குவீராக. ஏனென்றால், உமது அமுதமொழி எனக்குத் தெவிட்டவில்லை


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

ஜனார்த்தனா, நின் யோகத்தையும் பெருமையையும் விரித்து மற்றொரு முறை சொல்க. அமிர்தம் போன்ற நின் சொற்கள் எனக்குத் தெவிட்டவில்லை.


விளக்கம்:

=> விரிவாகச் சொல்லுங்கள்:

இங்குயோக3ம்எனும் சொல், ஈஷ்வரனாகிய பகவானின் தனித்துவமான திறன்களாகவுள்ள அனைத்தையும் அறியும் தன்மை, ஆளும் தன்மை ஆகிய இரண்டு இயல்புகளையும் குறிக்கின்றது. அவரது சக்தியின் மஹிமைகளாக தோன்றிக் கொண்டுள்ள சூரியன் மற்றும் சந்திரன் போன்ற படைப்பின் வெளிப்பாடுகள் அவரின் விபூதிகளைக் குறிக்கின்றன. எந்தெந்த வஸ்துவின் மூலம் அவர் உபாஸிப்பதற்குத் தகுந்தவரோ, அவைகளெல்லாம் அவரது விபூதிகளாகின்றன

! ஜனார்தனா, உங்களது யோகத்தையும் மஹிமைகளையும் மீண்டும் விஸ்தாரமாகச் சொல்லுங்கள்விஸ்தரேண ஆத்மந: யோக3ம் விபூ4திம் பூ4: கத2’, என்கிறான்.


=> ! ஜனார்தனா:

சரியான கர்ம-பலனைக் கொடுப்பதன் மூலம் முறையற்ற நடத்தையுடைய தீயவர்களை அழிப்பவர்ஜனார்தனர்’.‘ஜநார்த3எனும் சொல்அர்த்3எனும் வினையடியிலிருந்து வந்துள்ளது. இந்த வினையடி, ‘செல்_3மநமற்றும்கோருவது_யாசநஎனும் இரு பொருளைக் கொண்டது. சங்கரர் இந்த இரு அர்த்தங்களையும் கொண்டு இச்சொல்லுக்கு பொருளைத் தருகிறார். அதன்படி முதல் பொருளாக, தேவர்களுக்கு எதிரான அனைத்து அசுரர்களையும் நரகம் உள்ளிட்ட விரும்பத்தகாத இடத்திற்கு செல்லச் செய்பவர், ஜனார்தனர். தன்னிடமிருந்து வேறாக இல்லாத கர்ம-நியதிகளைக் கொண்டு அவர் இதைச் செய்கிறார். வினையடியின் இரண்டாவது பொருளின்படி, புத்தி முக்தி ஆகிய இரண்டின் பொருட்டு ஜனங்களால் ஆராதிக்கப்படுபவர் ஜனார்தனர்ஜநை: அர்த்3யதே யாச்யதே யஸ்மாத் : ஜநார்த3:. பொதுவாக மக்கள் இறைவனை வரையறுக்கப்பட்ட முடிவுகளுக்காகவோ அல்லது வரம்பற்ற முடிவாக விளங்கும் முக்திக்காகவோ வழிபடுகின்றனர். ஒரு பிரார்த்தனையில் இரண்டு விஷயங்கள் உள்ளன. எது கேட்கப்படுகிறது என்பது முதன்மையான விஷயம் மற்றும் யாரிடம் கேட்கப்படுகிறது என்பது இரண்டாவதான விஷயம். ஒரு சம்சாரிக்கு இவை இரண்டும் வேறுவேறாக இருக்கின்றது. அவன் இன்பம், செழிப்பு போன்ற முடிவிற்குட்பட்ட பலனை, தனக்கு வேறாக இருக்கும் இறைவனிடம் யாசித்துப் பெறுகிறான். அதற்காக இறைவனை வழிபடுகிறான். ஆனால் ஒரு சாதகனுக்கோ இவை இரண்டும் ஒன்றேயாம். அவன் இறைவனை அறிய இறைவனிடம் வேண்டுகிறான். எந்தவித பலனாக இருந்தபோதிலும் இவைகளெல்லாம் யாரிடம் வேண்டப்படுகிறதோ அவர் ஜனார்தனர்.

எனவே ! ஜனார்தனா என கிருஷ்ணரை அழைத்து, உமது அமுதமொழி எனக்குத் தெவிட்டவில்லையாதலால் தங்களது விபூதிகளை எனக்கு மீண்டும் வர்ணியுங்கள்அம்ருதம் ச்1ருண்வத: மே த்ருப்தி: அஸ்தி, எனக் கோருகிறான் அர்ஜுனன். கிருஷ்ணர் உபதேசிக்கும் வார்த்தைகளை அர்ஜுனன் அமிர்தம் என்று குறிப்பிடுகிறான். அமுதமான உங்களின் சொல்லை கேட்டுக் கொண்டிருக்கும் எனக்கு திருப்தி இல்லை. கேட்க கேட்க இன்னும் கேட்கவேண்டும் என்றே தோன்றுகிறது என்கிறான்.


=> சுயசொரூபம்:

சுலோகம் பதினாறில், உங்களது மஹிமைகளை விளக்குங்கள் என அர்ஜுனன் கூறியதில்ஆத்மவிபூ4தய:எனும் சொல்லிலுள்ளஆத்மாஎன்பது பகவானை மட்டுமல்ல, சுயத்தையும் குறிக்கின்றது என்பதைப் பார்த்தோம். அதிலிருந்து அர்ஜுனன் மறைமுகமாக, ‘உங்களைப் பற்றி நீங்கள் கூறியதில் எனக்கு இன்னும் திருப்தி இல்லை. நீங்கள் உங்கள் பெருமைகளைப் பற்றி மட்டுமல்ல, என்னுடைய பெருமைகளைப் பற்றியும்தான் பேசுகிறீர்கள். ஆகவே மேலும் என அதை நான் கேட்க விரும்புகிறேன்எனக் கூறுகிறான். பொதுவாக நாம் நமது பெருமைகளைக் கேட்பதில் பெரிதும் சோர்வடைய மாட்டோம். இன்னும் அதிகம் கேட்கவே விரும்புவோம்

கீதையில் பகவான் அர்ஜுனனுக்கு வெறுமனே கிருஷ்ணனாகிய நான்தான் அனைத்தும் எனக் கூறவில்லை. அவர் அதை நிரூபித்துக் காட்டுகிறார். மேலும் அர்ஜுனனோ அல்லது சுயசொரூபத்தை புரிந்து கொள்ளும் வேறுயாரும்கூட ஈஷ்வரனிடமிருந்து வேறானவனாக இல்லை என்பதையும் குறிப்பிட்டுச் சொல்லுகிறார். எனவே இந்த மஹிமைகள் அனைத்து அவனுக்கும் உரியதாக ஆகிறது. இது வெறும் முகஸ்துதி அல்ல, நிரூபிக்கப்பட்ட உண்மை. எனவே புரிந்து கொள்ளப்படாதபோதும் இது உண்மையையும் தருக்கவியலையும் தன்னகத்தே கொண்டுள்ளது. ஒருவனை மேம்படுத்துகிற இந்த உண்மையைக் கேட்க கேட்க மேலும் தெரிந்து கொள்ளவேண்டும் என்றே விருப்பம் உண்டாகும். பொதுவாகவே, நாம் அனைவருமே தேவையானதைவிட அதிக நேரம் நம்மை கண்ணாடியில் பார்க்க விரும்புகிறோம். ஏனெனில்நான்என்பதை ஒருவனால் நேசிக்க மட்டும்தான் முடியும். முழுமையை, ஆனந்தத்தை தனது இயல்பெனக் கொண்ட ஆத்மாவை நேசிக்க மட்டும்தான் முடியும். அதைப் பற்றிய சில நுண்ணறிவானது ஒருவனிடம் இருப்பதால், யாராவது ஒரு வார்த்தை-கண்ணாடியைப் பிடித்து அவனைஅனைத்துமாக நீயே இருக்கின்றாய்என்பதைப் பார்க்க வைக்கும்போது அது அவனுக்குச் சோர்வைத் தருவதில்லை

ஆகவே அர்ஜுனன் கூறுகிறான், ‘உங்களது மற்றும் அதுபோலவே எனது மஹிமைகளை வெளிப்படுத்தும் இந்த அமிர்தம் போன்ற சொற்களைக் கேட்டு எனக்கு தெவிட்டவில்லை. எனவே அதைப் பற்றி மேலும் கூறுங்கள். உங்களின் மஹிமைகளை நேரடியாக உணரமுடியாதவர்கள் எந்தெந்த விஷயங்களைத் தியானப் பொருளாக கொள்ளலாம்?’ என்ற கோரிக்கையை விடுக்கிறான்


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

ஈஷ்வரனுக்கும் மனிதனுக்கும் உள்ள சம்பந்தம் காந்தத்துக்கும் இரும்புக்குமுள்ள சம்பந்தத்தை போன்றது.

---------------------------------------------------------------------------------------------------------------------

||10.19|| கிருஷ்ணபகவானின் பதில்:

श्रीभगवानुवाच

हन्त ते कथयिष्यामि दिव्या ह्यात्मविभूतय:

प्राधान्यत: कुरुश्रेष्ठ नास्त्यनतो विस्तरस्य मे ।। १९ ।।

ஸ்ரீப43வாநுவாச

ஹந்த தே கத2யிஷ்யாமி தி3வ்யா ஹ்யாத்மவிபூ4தய:  

ப்ராதா4ந்யத: குருச்1ரேஷ்ட2 நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே ।। 19 ।।


श्रीभगवान्  ஸ்ரீப43வான்  ஶ்ரீ பகவான்    उवाच  உவாச  சொன்னது

हन्त  ஹந்த  நல்லது    कुरुश्रेष्ठ  குருச்1ரேஷ்ட2  குருகுல சிரேஷ்டனே     

दिव्या:  தி3வ்யா:  தெய்வத் தன்மையுடைய    त्मविभूतय:  ஆத்மவிபூ4தய:  என் விபூதிகளில்   

प्राधान्यत:  ப்ராதா4ந்யத:  முக்கியமானவைகளை   ते  தே  உனக்கு   

कथयिष्यामि  கத2யிஷ்யாமி  சொல்லுகிறேன்    हि  ஹி  ஏனென்றால்    मे  மே  என்னுடைய    

विस्तरस्य  விஸ்தரஸ்ய  விபூதியின் விஸ்தரிப்புக்கு    अन्त: அந்த:  முடிவு    अस्ति  அஸ்தி  இல்லை.


நல்லது, குருகுல சிரேஷ்டனே, எனது மேலான மஹிமைகளில் முக்கியமானவைகளை உனக்கு மொழிகிறேன். ஏனெனில் என் விபூதியின் விஸ்தரிப்புக்கு முடிவு இல்லை.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அச்ச! என் ஆத்மப் பெருமைகள் தேவத்தன்மை உடையனவே. அவற்றுள் பிரதானமானவற்றை நினக்குச் சொல்லுகிறேன். எனது விஸ்தாரத்துக்கு முடிவில்லை.


விளக்கம்:

இங்கு பகவான் அர்ஜுனனின் வேண்டுகோளுக்கு பதில் கூற ஆரம்பிக்கிறார். தனது சிறப்புகளையெல்லாம் முழுவதுமாக கூறுவதென்பது இயலாத ஒன்றாகும். எனவே உன் தியானத்திற்காகச் சிலவற்றை மட்டும் கூறுகிறேன் என்கிறார்.

ஹந்தஎனும் சொல் ஆச்சரியம் அல்லது மகிழ்ச்சியின் வெளிப்பாடு. இவ்விதமாக அர்ஜுனன் தன்னிடம் கேட்டதில் கிருஷ்ணர் மகிழ்ச்சியடைந்துள்ளார். எனது திவ்யமான மஹிமைகளை நான் உனக்கு விளக்குகிறேன்தி3வ்யா: ஆத்மவிபூ4தய: தே கத2யிஷ்யாமி. அவைகள் முடிவற்றவை, ஆகவே அவற்றின் முக்கியத்துவத்தை வைத்து நான் அவற்றைப் பட்டியலிட்டுக் கூறுகிறேன். ‘ப்ராதா4ந்யத:எனில் பிரதானப்படி என்பது பொருள்.

எதையும் விட்டுவிடாமல் அனைத்தையும் விவரிக்கமுடியாது. நூறு வருடங்களில் கூட இந்தப் பட்டியல் முடிவுக்கு வராது. எனவே, அவைகளில் முக்கியமான சிலவற்றை மட்டும் கூறுவதாக அர்ஜுனனிடம் பகவான் உரைக்கிறார் என சங்கரர் தனது பாஷ்யத்தில் விளக்கமளிக்கிறார்.

இயற்கையின் சிறப்பு அனைத்தும் ஈஷ்வர விபூதிகளே. அவைகளைச் சொல்லில் அடக்குவது ஈஷ்வரனுக்கே இயலாது. ஆங்காங்கு முக்கியமான சிலவற்றை மட்டும் எடுத்து மொழிய முடியும். அவைகளினின்று மற்றவைகளை யூகித்து அறிந்து கொள்ளலாம்.

ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

கிரந்தங்களைப் படித்துவிட்டு மட்டும் ஈஷ்வரனை விவரிக்க முயலுவது தேசப்படத்தில் மட்டும் காசியைப் பார்த்துவிட்டு, அந்நகரைப் பற்றி இன்னொருவனுக்கு விவரிக்க முயல்வதை ஒக்கும்.

---------------------------------------------------------------------------------------------------------------------