செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

அக்ஷரப்ரஹ்ம யோகம் 8.26 - 8.27

||8.26|| இரு பாதைகள்:

शुक्लकृष्णे गती ह्येते जगत: शाश्वते मते

एकया यात्यनावृत्तिमन्ययावर्तते पुन: ।। २६ ।।

சு1க்லக்ருஷ்ணே 3தீ ஹ்யேதே ஜக3: சா1ச்1வதே மதே

ஏகயா யாத்யநாவ்ருத்திமந்யயாவர்ததே புந: ।। 26 ।।


हि  ஹி  நிச்சயமாக   जगत:  ஜக3:  ஜகத்தினுடைய    

शुक्लकृष्णे एते गती  சு1க்லக்ருஷ்ணே ஏதே 3தீ  ஒளியும் இருளும் ஆகிய வழிகள்   

शाश्वते मते  சா1ச்1வதே மதே  என்றென்றும் உள்ளவைகளென்று கருதப்படுகின்றன   

एकया  ஏகயா  ஒன்றினால்    अनावृत्तिम् याति  அநாவ்ருத்திம் யாதி   பிறவாமையை அடைகிறான்    

अन्यया  அந்யயா  மற்றொன்றினால்      वर्तते पुन:  ஆவர்ததே புந:  திரும்பவும் பிறக்கிறான்.


ஒளியும் இருளும் ஆகிய இவ்விரண்டு வழிகள் இயற்கையில் என்றென்றும் உள்ளவைகளென்று கருதப்படுகின்றன. ஒன்று பிறவாமைக்குப் போவது; மற்றொன்று பிறப்பைத் தருவது.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

உலகத்தில் எந்த ஒளி வழியும், இருள் வழியும் சாசுவதமாகக் கருதப்பட்டன. இவற்றுள் ஒன்றினால் மனிதன் மீளாப் பதம் பெறுவான். மற்றொன்று மீளும் பதந் தருவது.


விளக்கம்:

=> ஆறு வகையான மனிதர்கள்:

(1) கர்மி - பூஜை, யக்ஞம் முதலிய வேதத்தில் சொல்லப்பட்ட கர்மங்களைச் சரியாக செய்பவன். இதன் பலனாக சொர்க்கம் முதலிய நல்ல லோகங்களை அடைகிறான்.

(2) கர்மயோகி - கர்மி செய்யும் அதே கர்மங்களை கர்மயோகமாக, ஈஷ்வரார்ப்பண-புத்தியுடன் செய்பவன்; அனைத்தையும் ஈஷ்வர பிரசாதமாக ஏற்றுக் கொள்பவன். இதன் பலனாக இவன் சித்த சுத்தியையும் வைராக்கியம் முமுக்ஷுத்வம் மற்றும் மோக்ஷத்தை அடைய ஏதுவான சூழ்நிலையையும் அடைகிறான்.

(3) உபாசகர்கள் - மானஸீக கர்மம், விரதம் மற்றும் தியானத்தில் ஈடுபடும் இந்த உபாசகர்களை மேலும் இரண்டாகப் பிரிக்கலாம்

(i) நிஷ்காம உபாசகன் - மோக்ஷத்தை மட்டுமே லக்ஷியமாகக் கொண்ட இவன் அதற்கான பலனாக ஞானத்திற்கான தகுதிகளை அடைகிறான்

(ii) ஷகாம உபாசகன் - ஒரு குறிப்பிட்ட லோகம் அல்லது பதவிக்காக ஷகாமமாக உபாசனையில் ஈடுபடும் இவன் அதற்கான பலனை அடைகிறான்.  

(4) நிஷித்த கர்மி - தர்மப்படி வாழாமல், அதர்மமான செயலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் இவன் அதர்மி என்றும் அழைக்கப்படுகிறான். அதன் பலனாக இவன் அதோகதி-யை அதாவது நரகம் உள்ளிட்ட ஏழு வகையான கீழான அல்லது பாதாள லோகங்களை அடைகிறான்.

(5) யோகபிரஷ்டன்ஞானம் அடைய போதிய காலமில்லாமல் பிராரப்தம் முடிந்த இவன், நல்ல லோகங்களை அடைந்து பின்னர் மீண்டும் மனிதனாக மற்றும் மோக்ஷத்தை அடைய ஏதுவான சூழ்நிலையில் பிறக்கிறான்

(6) ஞானி - ஞான நிஷ்டையை அடைந்த சித்தனான இவன் அகதியை அடைகிறான், அதாவது சூக்ஷம மற்றும் காரண சரீரத்திலிருந்து விடுதலை அடைந்து விதேஹ முக்தியை அடைகிறான்

இந்த எட்டாவது அத்தியாயத்தில் பகவான் கர்மி மற்றும் காம்ய உபாசகனைப் பற்றி பேசுகிறார்.  


=> இரு கதிகள்:

ஒளி மார்க்கம் என்று அழைக்கப்படும் சு1க்ல, மற்றும் இருள் மார்க்கம் என்றழைக்கப்படும் க்ருஷ்ண என இருவேறு பாதைகளின் வழியாக மனிதர்கள் வெவ்வேறு முடிவுகளை அடைகின்றனர். ‘ஹிஎன்பது இங்கு சாஸ்திரத்தில் கூறியபடி என்பதைக் குறிக்கின்றது. இந்த விஷயங்களை அறியும் ஒரே மூலமாக இருப்பது சாஸ்திரங்கள் மட்டுமே. உலகம் என்ற பொருள் கொண்டஜகத:எனும் சொல் இங்கு உலக மக்களைக் குறிக்கும் விதமாக உபாசகர்களையும் பூஜை யாகம் முதலிய புண்ணிய கர்மங்களைச் செய்யும் கர்மிகளையும் குறிக்கின்றது. இத்தகையவர்களுக்கு இந்த இரு பாதைகள் உள்ளன எனக் கூறப்படுகின்றது

=> நித்தியமானவை:

சா1ச்1வதே மதேஎன்றென்றும் உள்ளவைகளென்று கருதப்படுகின்றன. சம்சாரம் என்பது காலவரையின்றி செல்ல வாய்ப்புள்ளதால், இந்த இரு பாதைகளும் ஒப்பீட்டளவில் நித்தியமானவைகளாகச் சொல்லப்படுகின்றன. ஒருவன் தன்னறிவின் மூலம் மோக்ஷத்தை அடையாத வரை இந்த பயணம் முடிவிற்கு வருவதில்லை; அதாவது இயற்கையான விடுதலை என எதுவுமில்லை. ஆகவே ஆத்ம-ஞானத்திற்கான இச்சை உருவாகும் வரை, இந்த சம்சாரம் தொடர்கிறது; அறியாமையிலிருக்கின்ற ஜீவர்களுக்கு சம்சாரம் நித்தியமானவைகளாக உள்ளன.  

ஏகயா யாதி அநாவ்ருத்திம் ஒரு பாதையின் வழியாக அவன் பிறவாமையை அடைகிறான். சுக்ல-கதியின் மூலம் அவன் பிரம்மலோகத்தை அடைந்து அங்கு பிரம்மதேவரால் கற்பிக்கப்பட்டு மோக்ஷத்தைப் பெறுகிறான். மற்றொரு பாதையின், அதாவது கிருஷ்ண-கதி வழியாகச் செல்பவன் திரும்பவும் பிறக்கிறான்அந்யயா ஆவர்ததே புந:. இவ்விரண்டில், மோக்ஷத்திற்கு வழிவகுக்கும் மற்றும் பிரகாசமான பாதையாக கருதப்படும் கதியையே தேர்ந்தெடுக்க ஒருவன் விரும்புவான். உண்மையில் மோக்ஷம் என்பது கதியினால் அடையப்படுவதல்ல, ஞானத்தினால் அடையப்படுவது என அடுத்த சுலோகத்தில் பகவான் தொடர்கிறார்

-------------------------------------------------------------------------------------------------------------------------

||8.27|| அர்ஜுனனுக்கு பகவான் கொடுக்கும் அறிவுரை:

नैते सृती पार्थ जानन्योगी मुह्यति कश्चन

तस्मात्सर्वेषु कालेषु योगयुक्तो भवार्जुन ।। २७ ।।

நைதே ஸ்ருதீ பார்த2 ஜாநந்யோகீ3 முஹ்யதி கச்1சந

தஸ்மாத்ஸர்வேஷு காலேஷு யோக3யுக்தோ 4வார்ஜுந ।। 27 ।।


पार्थ  பார்த2  பார்த்தா   एते सृती  ஏதே ஸ்ருதீ  இவ்விரண்டு வழிகளையும்   जानन्  ஜாநந்  அறிகிற    

कश्चन योगी  கச்1சந யோகீ3  எந்த யோகியும்    मुह्यति  முஹ்யதி  மோஹத்தை அடைகிறதில்லை   

तस्मात्   தஸ்மாத்  ஆகையினால்   अर्जुन  அர்ஜுந  அர்ஜுனா   सर्वेषु कालेषु  ஸர்வேஷு காலேஷு  எப்பொழுதும்   योगयुक्त:  யோக3யுக்த:  யோகத்தில் நிலைத்தவனாக    भव  4  இரு.


இவ்விரண்டு வழிகளையும் அறிகிற எந்த யோகியும் மோஹத்தை அடைகிறதில்லை. ஆகையால் அர்ஜுனா, எப்பொழுதும் யோகத்தில் நிலைத்தவனாயிரு.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

இவ் வழிகளிரண்டையும் உணர்ந்தால் அப்பால் யோகி மயக்கமுறுவதில்லை. ஆதலால், அர்ஜுன, எப்போதும் யோகத்தில் கலந்திரு.


விளக்கம்:

=> யோகி மோஹமடைவதில்லை:

! அர்ஜுனா, இந்த இரண்டு பாதைகளையும் அறிந்த எந்தவொரு யோகியும் மோஹமடைவதில்லைஏதே ஸ்ருதீ பார்த2 ஜாநந் கச்1சந யோகீ3 முஹ்யதி. இங்கு யோகி என்பது விவேகி அல்லது ஜிக்ஞாசுவைக் குறிக்கின்றது. ஈஷ்வரனை அடைவதைத் தவிர மற்ற அனைத்தும் சாதனையே அதாவது சாத்யத்திற்கான கருவியே ஆகும். ஈஷ்வரன் மட்டுமே புருஷார்த்தம்(இலக்கு). இதையறியாது வேறு லோகங்கள், அல்லது இந்த லோகத்தில் செல்வம், புகழ், பதவி, உடல் ஆரோக்கியம் போன்ற விஷயங்களை லக்ஷியமாக எடுத்துக் கொள்ளுதல் மோஹம் ஆகும். இங்கு கூறப்பட்டுள்ள இருபாதைகளில் ஒன்று சம்சாரத்திற்கானது, மற்றொன்று மோக்ஷத்திற்கானது என்பதை அந்த யோகி அறிந்திருப்பதால் இதில் மோஹமடைவதில்லை. வேறு லோகத்திற்கு செல்லுதல் முக்தியைத் தராது என்பதில் அவனுக்கு எந்தக் குழப்பமும் இல்லை. ஞானத்தினால் மட்டுமே விடுதலை, அது இங்கேயோ அல்லது பிரம்மலோகத்திலோ பெற முடியும்

சொர்க்கம் செல்வது மோக்ஷம் என்ற மாயையால் ஒட்டுமொத்த மனித இனமும் தவிக்கிறது. இக்கருத்தே பெரும்பாலான மதங்களால் முறையாக பிரச்சாரம் செய்யப்படுவதாலும் மற்றும் மனிதகுலத்தில் இது மிகவும் பரவலாக நம்பப்படுவதாலும், கிருஷ்ணர் அதை ஒரு மாயை என்று வெளிப்படையாக இங்கு கூற வேண்டியிருக்கிறது. ஆனால் ஒரு யோகி இதனால் மோஹமடைவதில்லை

எனவே அர்ஜுனா, எப்பொழுதும் இந்த ஞானத்தில் பொருந்தியவனாக இருதஸ்மாத் அர்ஜுந ஸர்வேஷு காலேஷு யோக3யுக்த: 4. ஞானத்திற்கு தேவையானவற்றை செய்யத் தயார் நிலையில் இரு என்பது இதன் பொருள். இங்கு யோகம் என்பது ஞானத்தைக் குறிக்கிறது, மேலும் அதைப் பெற உதவும் எந்த ஒரு வழிமுறையும் யோகம் ஆகும். எனவேயோக-யுக்த:என்பது மன அமைதியை அடைந்தவனாக, மனதை ஒருமுகப்படுத்தியவனாக, சிதறடிப்படாத மனதை உடையவனாக இருப்பவனைக் குறிக்கிறது. சமாதானப்படுத்திய மனதுடன் இருப்பாயாகஸமாஹித மநா: பவ, என்கிறார் சங்கரர்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

கப்பல் எத்திடையில் போய்க்கொண்டிருந்தாலும் அதில் உள்ள திசைக்காட்டி முள் வடதுருவத்தையே நோக்கி நிற்கிறது. அங்ஙனம் மனிதன் எதைச் செய்துகொண்டிருந்தாலும் அவனது மனது யாண்டும் சர்வேசுவரனிடத்தே நிலைத்திருக்கட்டும்.

-------------------------------------------------------------------------------------------------------------------------