ஞாயிறு, 6 டிசம்பர், 2020

ஸாங்கிய யோகம் 2.7 - 2.8

 

||2.7|| இங்கு அர்ஜுனனிடம் 4-ம் தகுதியானசரணடைதல்நடைபெறுகிறது:


      कार्पण्यदोषोपहतस्वभाव: पृच्छामि त्वां धर्मसम्मूढचेता:

यच्छ्रेय: स्यान्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं शाधि मां त्वां प्रपन्नम् ।।


கார்பண்யதோ3ஷோபஹதஸ்வபா4:

    ப்ருச்சா2மி த்வாம் 4ர்மஸம்மூட4சேதா

யச்ச்2ரேய: ஸ்யாந்நிஸ்சிதம் ப்3ருஹி தன்மே

    சிஷ்யஸ்தேऽஹம் சா1தி4 மாம் த்வாம் ப்ரபன்னம் ।। 7


कार्पण्य दोष उपहतस्वभाव:  கார்பண்ய தோ3 உபஹதஸ்வபா4:  சிறுமை என்னும் தோஷத்தினால் இயல்பிலிருந்து வீழ்ந்தவனாய்

धर्मसम्मूढचेता:  4ர்மஸம்மூட4சேதா:  தர்மத்தைப் பற்றிய அறிவை இழந்த மனதுடையவனாய்  

त्वां  த்வாம்  உங்களை  पृच्छामि  ப்ருச்சா2மி  கேட்கின்றேன்  मे  மே எனக்கு   यत्  யத்  எது   

श्रेय: स्यात्  ச்1ரேயஸ்யாத்  சிறந்ததாக இருக்கிறதோ (நன்மையை தருவதோ

तत्  தத்  அதை   निश्चितं   நிஸ்சிதம்  நிச்சயமாக  ब्रूहि  ப்3ருஹி  கூறுங்கள்  

अहं  அஹம்  நான்   ते  தே  உங்களுடைய   शिष्य:  சிஷ்ய:   சிஷ்யன்   त्वां  த்வாம்  உங்களை   

प्रपन्नम्  ப்ரபன்னம் சரணடைந்த  मां  மாம்  எனக்கு   शाधि  சா1தி4  உபதேசியுங்கள்


சிறுமை என்னும் தோஷத்தினால் இயல்பிலிருந்து வீழ்ந்தவனாய், அறநெறியை பற்றிய அறிவை இழந்து உங்களைக் கேட்கின்றேன். எனக்கு எது நன்மை என்பதை நிச்சயமாகக் கூறுங்கள். நான் உங்களுடைய சிஷ்யன். உங்களைச் சரணடைந்த எனக்கு உபதேசியுங்கள்.


பாரதியின் மொழிபெயர்ப்பு :

சிறுமையாகிய குறையால் இயல்பு அழிந்தவனாய், அறம் இன்னது என்றுணராமல் மயங்கிய அறிவுடன், யான் உன்னைக் கேட்கின்றேன். எது நன்றென்பதை எனக்கு நிச்சயப்படுத்தி சொல்லுக. நான் உன் சீடன். உன்னையே சரணமெனப் புகுந்தேன். கட்டளைத் தருக.


விளக்கம்: 

=> ச்1ரேயஸ் (நன்மை): 

கடோபநிஷதத்தில் யமதர்மராஜா நசிகேதனுக்கு 3 வரங்களை அருளுகிறார். அதில் முதலிரண்டு வரங்களை தனது தந்தைக்காகவும் மற்றவர்களுக்காகவும் உபயோகிக்கிறான் நசிகேதன். மூன்றாவது வரத்தை தன் பொருட்டு உபயோகித்து தனக்குள்ள சந்தேகமான, ‘மனிதன் இறந்த பின்னும் இருக்கின்றான் என சிலரும், இல்லையென்று சிலரும் கூறுகிறார்கள். இந்த சந்தேகம் குறித்த விளக்கத்தை மூன்றாவது வரமாக பெற விருப்புகிறேன்என கேட்கின்றான். முதலில் விளக்கம் அளிக்கத் தயங்கிய யமன், பிறகு உபதேசத்தை ஆரம்பிக்கின்றார்

வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் நன்மை(ச்1ரேயஸ்), இன்பம்(ப்ரேயஸ்இவைகளில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் உரிமை மனிதனுக்கு அளிக்கப்பட்டுள்ளது

ச்1ரேயஸ் (நன்மை)  x  ப்ரேயஸ் (இன்பம்). 

ச்1ரேயஸ் - நன்மை - வீடுபேறு - மோக்ஷம்

ப்ரேயஸ் - இன்பம் - அறம், பொருள், இன்பம்

நசிகேதன் யமனிடம் இந்த நன்மையையே (ச்1ரேயஸ்) கேட்டான்


 => அர்ஜுனனும் தனக்கு இன்பம் வேண்டாம்(முந்தய ஸ்லோகங்களிலிருந்து), எது நன்மை என சொல்லுங்கள் என்று கூறி சிஷ்யனாக மாறுகிறான்

     शिष्य:  சிஷ்ய: - शासने योग्य: शिष्य: சா1சனே யோக்3ய: சிஷ்ய: - உபதேசம் செய்வதற்கு தகுதியானவன்.

=> நன்மையை தற்காலிக நன்மை(relative), முழுமையான நன்மை(absolute) என பிரிக்கலாம் என்ற போதிலும், இங்கு அர்ஜுனன் முழுமையான நன்மையை கேட்பதாகவே எடுத்துக் கொண்டு பகவான் உபதேசத்தை செய்கிறார்.

-------------------------------------------------------------------------------------


||2.8|| தனக்கு சரணடைவதற்கு வேறு இடம் கிடையாது என அர்ஜுனன் காட்டுதல்:  

 

         हि प्रपश्यामि ममापनुद्याद्यच्छोकमुच्छोषणमिन्द्रियाणाम्

        अवाप्य भूमावसपत्नमृध्दं राज्यं सुराणामपि चाधिपत्यम् ।।


ஹி ப்ரபச்1யாமி மமாபனுத்3யாத்3

யச்சோ2கமுச்சோஷணமிந்த்ரியாணாம்

அவாப்ய பூ4மாவஸபத்னம்ருத்3த்4ம் 

ராஜ்யம் ஸுராணாமபி சாதி4பத்யம் ।। 8

 

भूमौ பூ4மெள  பூமியில்   असपत्नं  அஸபத்னம்  எதிர்ப்பில்லாத   ऋध्दं  ருத்3த்4ம்  செழிப்பான   

राज्यं   ராஜ்யம்   ராஜ்யத்தையும்  सुराणाम् अपि  ஸுராணாம் அபி  சுரர்களுக்கும்   

आधिपत्यम्   ஆதி4பத்யம்  அதிபதியாயிருப்பதையும்  अवाप्य  அவாப்ய  அடைந்து  मम  மம  என்னுடைய   इन्द्रियाणां  இந்த்ரியாணாம் புலன்களுடைய  उच्छोषणम्   உச்சோஷணம் எரிக்கின்ற  

शोकम्   சோ1கம்   சோகத்தை   अपनुद्यात्  அபனுத்3யாத்  நீக்கும்  

यत् हि प्रपश्यामि  யத் ஹி ப்ரபச்1யாமி  என்பதை நிச்சயமாக பார்க்கவில்லை.


பூமியில் செழிப்பான நிகரில்லாத ராஜ்ஜியத்தை அடைந்த போதிலும், அமரர்களுக்கும் அதிபதியானாலும், என் புலன்களைப் பொசுக்குகின்ற துன்பத்தை அவை துடைக்குமென்று எனக்குத் தோன்றவில்லை


பாரதியின் மொழிபெயர்ப்பு :

பூமியின் மேல் நிகரில்லாத செல்வமுடைய ராஜ்யம் பெறினும், அன்றி வானோர்மிசை ஆட்சி பெறினும்புலன்களை யடர்க்கும் இயல்புடைய இந்தத் துயர் எம்மை விட்டு நீங்குமென்று தோன்றவில்லை.


விளக்கம்: 

ஒருவன் தனது துயரத்திற்கு எது காரணமென முடிவு செய்கிறானோ அதை அடிப்படையாகக் கொண்டுதான் அவனுடைய வாழ்க்கை பயணத்தை தேர்ந்தெடுப்பான். செல்வம் இல்லாதது காரணம் என நினைத்தால் பணம் சம்பாதித்தல் அவனது குறிக்கோளாகிறது.

ஆனால் இங்கு அர்ஜுனன் தனது துயரத்தை எது நீக்கும் என தெரியாதவனாக, எவைகளெல்லாம் தனது சோகத்தை நீக்காது(எந்த ராஜ்யமும் என்னை திருப்திப்படுத்தாது) என்ற அறிவுடனும், தனது மனக் குழப்பத்தை பகவான் நீக்குவார் என்ற முழுமையான நம்பிக்கையுடனும் அவரைச் சரணடைகிறான்.



சாஸ்திரத்தை படித்து அதிலிருந்து பயனை அடைய 4 வித தகுதிகளை ஒருவன் பெற்றிருக்க வேண்டும். அத்தகுதிகளை உடையவன் அதிகாரி(अधिकारी) என்று அழைக்கப்படுகின்றான். அவை

சாதன சதுஷ்டய சம்பத்தி (साधन चतुष्टय सम्पत्ति):

        சாதன – தகுதிகள்

        சதுஷ்டய – 4

        சம்பத்தி – அடைய வேண்டும்      

    சம்பந்ந:  - அதிகாரி – 4 தகுதியுடையவன் 


ஞான யோக சாதனைக்கு முன் அடைய வேண்டிய தகுதிகள்:

   (1) விவேகம்

     நித்ய-அநித்ய வஸ்து விவேக:

         நிலையானது, நிலையற்றது என பிரிக்கும் அறிவு.

    நம்முடைய அனுபவம் மற்றும் பிறரது அனுபவம் வாயிலாக நிலையானது(ப்ரம்மம்) எது, நிலையற்றது(உலகம்) எது என அறிவது. உபாயம் – கர்ம யோகம்

 

   (2) வைராக்யம்

போகத்தில் (இந்திரிய சுகம், உலகப் பொருட்கள்) விருப்பமில்லாத மனநிலை.  

உபாயம் – அணுதர்சனம்; மீண்டும் மீண்டும் விவேகத்தை விசாரம் செய்ய, வைராக்யம் பிறக்கும்.

 

   (3) சமாதி ஷக்க சம்பத்தி:

இதில் 6 பண்புகள் உள்ளன.

(i)   1ம: – மனக்கட்டுப்பாடு (அ) மனஅமைதி

          (ii)  1ம: – இந்திரியக் கட்டுப்பாடு 

(iii) உபரம: / உபரதி: – நிலைத்து இருந்து பழகுதல்

சமத்தையும், தமத்தையும் தொடர்ந்து செய்யும் முயற்சி.

          (iv)   திதிக்ஷா (சகித்தல்) – பொறுமை (endurance)

                    சுக - துக்கம் முதலான இருமைகளை சகித்துக் கொள்ளுதல்;

           (v)  ஸ்ரத்தா4 - நம்பிக்கை (belief)

                   குருவினிடத்தும், சாஸ்த்திரத்தினடத்தும்(ஈஸ்வரத்துவம்) நம்பிக்கை

            (vi)  சமாதானம் – இலட்சியத்தில் மனதை வைத்தல்

                     ஞான யோகம் என்ற சாதனத்தில் மனதை வைத்துப் பழகுதல்

 

     (4) முமுக்சுத்வம்

           மோட்ஷம் அடைய இச்சை; உபாயம் – ஞான யோகம்

-------------------------------------------------------------------------------------