செவ்வாய், 1 டிசம்பர், 2020

ஸாங்கிய யோகம் 2.5 - 2.6

                                     ||2.5||

गुरूनहत्वा हि महानुभावान् श्रेयो भोक्तुं भौक्ष्यमपीह लोके

हत्वाऽर्थकामांस्तु गुरूनिहैव भुञ्जीय भोगान्रुधिरप्रदिग्धान् ।। ।।


                 கு3ரூனஹத்வா ஹி மஹாநுபா4வான்                             
                            ஸ்ரேயோ போ4க்தும் பை4க்ஷயமபீஹ லோகே।
ஹத்வாऽர்த்த2காமாம்ஸ்து கு3ரூனிஹைவ

பு4ஞ்ஜீய போ4கா3ந் ருதி4ரப்ரதி3க்3தா4ன் ।। 5 ।।


महानुभावान्   மஹாநுபா4வான்  மேன்மை பொருந்திய    गुरून्   கு3ரூன்  குருவை    

अहत्वा   அஹத்வா  கொல்லாமல்    इह लोके   இஹ லோகே  இவ்வுலகில்    

भौक्ष्यम् अपि  பை4க்ஷயம் அபி பிச்சையெடுத்த உணவு கூட  भोक्तुं   போ4க்தும்  உண்பது  

श्रेयहि  ஸ்ரேயோ ஹி   நிச்சயமாக சிறந்தது    तु  து  ஆனால்  

 गुरून्   கு3ரூன்  பெரியவர்களை     हत्वा  ஹத்வா  கொன்றால்    

रूधिरप्रदिग्धान्  ருதி4ரப்ரதி3க்3தா4ன்  இரத்தம் கலந்த  

अर्थकामान्  भोगान्  அர்த்த2காமான்  போ4கா3ந்  சுகம் தரும் பொருட்களை   

इह एव  இஹ ஏவ  இவ்வுலகிலேயே   भुञ्जीय  பு4ஞ்ஜீய  அனுபவிப்பேன்.


உத்தமர்களாகிய குருமார்களைக் கொல்லாமல், இவ்வுலகில் பிச்சையெடுத்த உணவு உண்பது கூட சிறந்தது. ஆனால் குருக்களைக் கொன்றால் இரத்தம் கலந்த போகத்தை தான் இவ்வுலகில் அனுபவிப்பேன்.


பாரதியின் மொழிபெயர்ப்பு :

பெரியோராகிய குருக்களைக் கொல்லாமல், உலகத்தில் பிச்சை யெடுத்துண்பதும் நல்லது. பொருளை விரும்பி குருக்களைக் கொன்று நாம் துய்க்கும் இன்பங்கள் உதிரத்திற் கலந்தனவாம்.


விளக்கம்: 

=> சந்நியாச வாழ்க்கைமுறை:

அர்ஜுனன், குருவை கொன்று அவரின் ரத்தத்தால் நனைந்த சுக போகங்களை அனுபவிப்பதைக் காட்டிலும் பிச்சையெடுத்தல் சிறந்தது என்கிறான். சாஸ்த்திரப்படி 2 விதமான மனிதர்கள் யாசிக்கலாம் - ப்ரம்மசாரிகள் மற்றும் சன்னியாசிகள். கற்றலின் பொருட்டு ஆசாரியர்களுடன் குருகுலவாசம் மேற்கொள்ளும் ப்ரம்மசாரிகளுக்கு யாசித்தல் அனுமதிக்கப்படுகிறது. ஏற்கனவே இந்நிலையை அர்ஜுனன் கடந்துவிட்டான். எஞ்சியிருப்பது சந்நியாச வாழ்க்கைமுறை மட்டுமே. போரிலிருந்து விலகுவதன் மூலம், ராஜ்ஜியத்தை துறந்து, சுக போகங்களை விட்டு துறவறம் மேற்கொள்ள வேண்டுமென்பது அவனுடைய எண்ணமாக இருந்தது. இதனை மனதில் கொண்டே பகவானிடம், ‘எது சிறந்தது, கர்ம யோக வாழ்க்கைமுறையா? அல்லது சந்நியாசமா?’, ‘என்னை ஏன் கர்மத்தில் ஈடுபட சொல்கிறீர்கள்?’ என மீண்டும் மீண்டும் அத்யாயம் 3 மற்றும் 5-லும், மேலும் 18வது அத்யாயத்திலும் கூடத்யாகத்திற்க்கும் சந்நியாசத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?’ என்று கேட்கின்றான்.



---------------------------------------------------------------------------------

||2.6||சிஷ்ய லக்ஷணம் - 3வது படியானதனக்கு தெரியாததைஉணர்வது:

 

चैतद्विद्म: कतरन्नो गरीयो यद्वा जयेम यदि वा नो जयेयु:

यानेव हत्वा जिजीविषामस्तेऽवस्थिता: प्रमुखे धार्तराष्ट्रा: ।।


சைதத்3வித்3: கதரந்னோ 3ரீயோ

          யத்3வா ஜயேம யதி3 வா நோ ஜயேயு:

யாநேவ ஹத்வா ஜிஜீவிஷாமஸ்

தேऽவஸ்தி2தா: ப்ரமுகே தா4ர்தராஷ்ட்ரா: ।। 6


:  :  எங்களுக்கு   कतरत्  கதரத்  எது   गरीय:  3ரீய:  சிறந்தது एतत्  ஏதத் இதை   

विद्म:   வித்3:  நாம் அறியோம்  यद्वा जयेम  யத்3வா ஜயேம  (நாம்) ஜெயிப்போமா   

यदि वा  யதி3 வா  அல்லது   : जयेयु:   : ஜயேயு:  நம்மை ஜெயிப்பார்களோ    

यान् एव  யான் ஏவ  எவர்களை   हत्वा   ஹத்வா கொன்று     

जिजीविषाम:   ஜிஜீவிஷாம:  உயிர்வாழ விரும்பமாட்டோமோ 

ते धार्तराष्ट्रा:  தே தா4ர்தராஷ்ட்ரா:  அந்த திருதராஷ்டிரக் கூட்டத்தார்   

प्रमुखे   ப்ரமுகே  எதிரில்    अवस्थिता:  அவஸ்தி2தா:  நிற்கின்றனர்.


நாம் வெற்றி கொள்வோமா? அல்லது அவர்கள் நம்மை வெற்றி கொள்வார்களா? இதில் எங்களுக்கு எது சிறந்தது என்பதை நாம் அறியோம். எவர்களைக் கொன்று வாழ்வதற்கு கூட விரும்பமாட்டோமோ அந்த திருதராஷ்டிரக் கூட்டத்தார் எதிரில் நிற்கின்றனர்.


பாரதியின் மொழிபெயர்ப்பு :

மேலும், நாம் இவர்களை வெல்லுதல், இவர்கள் நம்மை வெல்லுதல் —  இவற்றுள் எது நமக்கு மேன்மை என்பது விளங்கவில்லை. எவரைக் கொன்ற பின் நாம் உயிர் கொண்டு வாழ விரும்போமோ, அத்தகைய திருதராஷ்டிரக் கூட்டத்தார் போர் முனையில் வந்து நிற்கின்றார்கள்.


விளக்கம்:

=> அர்ஜுனனின் மனக்குழப்பம்

இங்கு அர்ஜுனன் தனக்கு எது சிறந்தது என தெரியவில்லைஎதிரிகளாக நின்று கொண்டிருக்கும் தன் சொந்தங்களையே வெல்வதா? அல்லது அவர்களிடம் தோற்பதா? இவர்கள் அனைவரையும் கொன்று பெற்ற வெற்றி இரு தரப்பிற்க்கும் எந்த நன்மையையும் அளிக்காது. அதை விரும்பவும் இல்லை. ஆகவேகோழையை போல் பேசாதே! எழு, போர் புரிஎன கூறும் க்ருஷ்ணனைப் பார்த்து குழம்பியவனாக, திருதராஷ்டிரக் கூட்டத்தினரை அழிப்பதால் கிடைக்கும் வெற்றியை பாண்டவர்கள் விரும்பமாட்டார்கள் என வாதிடுகிறான். தனது மனகுழப்பத்திற்கான விடை தெரியாதவனாக மேலும் தொடர்கிறான்.

---------------------------------------------------------------------------------