திங்கள், 20 நவம்பர், 2023

ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம் 9.25 - 9.26

||9.25|| ஒவ்வொருவரும் அடையும் நிலையைப் பற்றிய உண்மை:

यान्ति देवव्रता देवान्पितॄन्यान्ति पितृव्रता:

भूतानि यान्ति भूतेज्या यान्ति मद्याजिनोऽपि माम् ।। २५ ।।

யாந்தி தே3வவ்ரதா தே3வாந்பித்ரூந்யாந்தி பித்ருவ்ரதா:

பூ4தாநி யாந்தி பூ4தேஜ்யா யாந்தி மத்3யாஜிநோऽபி மாம் ।। 25 ।।


देवव्रता:  தே3வவ்ரதா:  தேவர்களைத் தொழுபவர்   देवान्  தே3வாந்  தேவர்களை   

यान्ति  யாந்தி  அடைகின்றனர்   पितृव्रता:  பித்ருவ்ரதா:  பித்ருக்களைப் போற்றுபவர்கள்   

पितॄन्  பித்ரூந்  பித்ருக்களை   यान्ति  யாந்தி  பெறுகின்றனர்    भूतेज्या:  பூ4தேஜ்யா:  பூதங்களை வணங்குபவர்   भूतानि यान्ति  பூ4தாநி யாந்தி  பூதங்களைப் போய்ச் சேருகின்றனர்   

मद्याजिन:  மத்3யாஜிந:  என்னை பூஜிக்கின்றவர்கள்   माम् अपि यान्ति  மாம் அபி யாந்தி  என்னையே எய்துவார்.


தேவர்களைத் தொழுபவர் தேவர்களை அடைகின்றனர்; பித்ருக்களைப் போற்றுபவர் பித்ருக்களை பெறுகின்றனர்; பூதங்களை வணங்குபவர் பூதங்களைப் போய்ச் சேருகின்றனர்; என்னை பூஜிக்கின்றவர்கள் என்னையே எய்துவார்கள்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

தேவ விரதிகள் தேவரை எய்துவார்;
பிதிர்க்களை நோற்பார் பிதிர்க்களை யடைவார்;
பூதங்களைத் தொழுவார் பூதங்களை யடைவார்;
என்னை வேட்போர் என்னை எய்துவார்.


விளக்கம்:

=> சங்கல்ப நிமித்தம்:

ஒவ்வொரு பக்தனும் அடையும் நிலையைப் பற்றிய உண்மையை பகவான் இங்கு கூறுகின்றார். மனதின் விருப்பத்தின் அடிப்படையில் பலன் கிடைக்கிறது. ஒருவன் எதை பலனாக அடைகிறான் என்பது ஒரு தேவதையின் கையில் கிடையாது. உண்மையில் அது வழிபடுபவனிடம்தான் உள்ளது. வழிபடுபவனின் மனதில் எதை சங்கல்பம் செய்து அந்த பிரார்த்தனையைச் செய்கிறானோ அதைப் பலனாகப் பெறுகிறான். அனைவரின் முயற்சி சமமாக இருந்தபோதிலும் அவரவர்களின் சங்கல்பமே பலனைக் கொடுக்கிறது. இதுஆயாச சாமான்யம்எனப்படும். எனவே யாரொருவனும் எதையெதை நினைத்து வழிபடுகிறானோ, அவன் அதையதை அடைகிறான் என இச் சுலோகத்தில் பகவான் கூறுகிறார்.


=> தேவ வழிபாடு:

தே3வவ்ரதா: தே3வாந் யாந்திதேவர்களைத் தொழுபவர்கள் தேவர்களை அடைகின்றனர். தேவர்கள் மீது பக்தியும் ஈடுபாடும் கொண்டவர்கள்தே3வவ்ரதா:ஆவர். இவர்கள் இந்திரன் போன்ற குறிப்பிட்ட தேவர்களுக்கான வைதிக சடங்குகளைச் செய்கிறார்கள். அதன் விளைவாக, அந்த தெய்வங்கள் வசிக்கும் லோகத்திற்குச் செல்கிறார்கள். நாம் ஏற்கனவே விசாரித்ததைப் போல, அவர்கள் அதற்கான புண்ணியம் உள்ளவரை மட்டுமே அங்கு வாழ்ந்து பின் மீண்டும் பூலோகம் திரும்புகிறார்கள். சொர்க்கம் முதலிய நல்ல கதியை அடைந்தபோதிலும் அதுவும் வரம்பிற்கு உட்பட்டதே எனக் குறிப்பிடுவதே இதன் நோக்கமாகும்.


=> மூதாதையர் வழிபாடு:

பித்ருவ்ரதா: பித்ரூந் யாந்திபித்ருக்களைப் போற்றுபவர்கள் பித்ருக்களை பெறுகின்றனர். முன்னோர்களை, பித்ருக்களை வழிபடுபவர்கள் இறந்தவர்களின் லோகத்தை அடைகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் நினைவு நாளன்று இறந்த ஆன்மாவிற்கு செய்யப்படும் ஸ்ராத்த கர்மத்திற்கான வேத சடங்குகளையும், ஸ்மார்த்த கர்மங்களையும் செய்கிறார்கள். ‘பித்ருஎன்பது மறைந்த முன்னோரின் ஆன்மா ஆகும். ஒரு குறிப்பிட்ட அனுபவத்தில் வாழும் இந்த பிரிந்த ஆன்மாக்களின் உலகம் பித்ரு-லோகம் எனப்படுகிறது. அங்கே அவர்கள் இறக்கும் போதுஅக்னிஷ்வாத்தபோன்ற பித்ரு அந்தஸ்தைப் பெறுகிறார்கள். பூலோகத்தைக் காட்டிலும் சற்று மேலானதாக எண்ணப்படும் இது போன்ற லோகத்தை விரும்பியவர்களாக மூதாதையர்களை வழிபடுபவர்கள்பித்ருவ்ரதா:ஆவர். இவர்கள் பித்ரு-லோகத்தை அடைகிறார்கள்.


=> பூத வழிபாடு:

பூ4தேஜ்யா: பூ4தாநி யாந்திபூதங்களை வணங்குபவர் பூதங்களைப் போய்ச் சேருகின்றனர். பூதங்கள், ஆவிகள், சிறிய தெய்வங்களான யக்ஷர்கள், ராக்ஷசர்கள் மற்றும் பூதகணங்களை வழிபடுபவர்கள்பூ4தேஜ்யா:ஆவர். இவர்களுள் சிலர் கணபதியையும் கூட பூதகணங்களின் அதிபதியாக, மேலான ஆன்மாவாக தொழுவார்கள். மண்ணுலகைக் காட்டிலும் ஓரளவு மேலான அனுபவத்தை கொடுப்பதாகக் கருதப்படும் இத்தகைய லோகத்திற்கு ஆசைப்படுபவர்கள், அதற்கான வழிபாடுகளில் ஈடுபட்டு அதையையே அடைகிறார்கள்


=> ஈஷ்வர வழிபாடு:

மத்3யாஜிந: மாம் அபி யாந்திஎன்னை பூஜிக்கின்றவர்கள்   என்னையே எய்துவார். இங்குஎன்னைஎன்பது அனைத்திற்கும் காரணமான பரமேஷ்வரனை, பரமாத்வாவைக் குறிக்கிறது. ஞானத்தின் மூலம் தங்களை ஈஷ்வரனாக அடையாளம் கண்டுகொண்டு, ஈஷ்வரனையே அடைகிறார்கள்

இனி எது வேண்டுமென தீர்மானிப்பது அவரவர் கையில் உள்ளது. கொடுக்கப்பட்ட சில அனுபவங்களை அடைய விரும்புகிறீர்களா அல்லது அந்த ஒவ்வொரு அனுபவமாகவே இருக்க விரும்புகிறீர்களா? எல்லா அனுபவங்களும் நானே, என்னைவிட்டு எதுவும் தனியாக இல்லை. எனவே என்னை நாடும்மத்3யாஜிந:’, எல்லா தேவதைகளிலும் என்னையே காண்கிறார்கள், என்கிறார் பகவான். இந்த முமுக்ஷுக்களே சுலோகம் 9.22 - ல் நாம் பார்த்தஅநந்யா:ஆவர்


=> முயற்சி ஒன்றே:

முயற்சி ஒன்றுதான் என்றாலும் அறியாமையினால் என்னை வழிபடுவதால், குறைந்த பலன்களையே அனுபவிக்கிறார்கள் என்பதை பகவான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறார். ஒவ்வொரு வழிபாட்டு முறைக்கும் வழிபடுபவர்களுடைய பிரயத்தனம் என்பது சமமானதே ஆகும். ஆனால் அந்த வழிபாட்டின் இறுதி போக்தாவாக என்னை அவர்கள் அறிவதில்லை. இந்த அறியாமையினால் வெவ்வேறு லோகங்களைப் பெறுவதற்காகத் வெவ்வேறு தெய்வங்களை தொழுவதாக நினைக்கிறார்கள். இதன் காரணமாக, அவர்கள் குறிப்பிட்ட அனுபவத்திற்கு தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொள்கிறார்கள். மோக்ஷத்திற்கு தகுதியைக் கொடுக்கும் மனத்தூய்மையை அடையவும் அதே முயற்சிதான் தேவைப்படுகிறது. ஆனால் தங்களின் அறியாமையினால் அவர்கள் முடிவிற்குட்பட்ட பலனையே அடைகிறார்கள்.  

முக்திக்கு அடித்தளமாய் இருக்கும் அந்தக்கரண-சுத்தியை அடைய நிறைய சடங்குகள் மற்றும் பிரார்த்தனைகளைச் செய்ய வேண்டியிருக்கும் என ஒருவன் நினைக்கலாம். இல்லை என்கிறார் பகவான் கிருஷ்ணர்.

எனில் அவன் என்ன செய்ய வேண்டும்? என்பதை அடுத்த சுலோகத்தில் கூறுகிறார்.

---------------------------------------------------------------------------------------------------------------------

||9.26|| இறைவணக்கம் மிக எளிது:

पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्त्या प्रयच्छति

तदहं भक्युपहृतमश्नामि प्रयतात्मन: ।। २६ ।।

பத்ரம் புஷ்பம் 2லம் தோயம் யோ மே 4க்த்யா ப்ரயச்ச2தி  

தத3ஹம் 4க்த்யுபஹ்ருதமச்1நாமி ப்ரயதாத்மந: ।। 26 ।।


:  : யார்    मे  மே  எனக்கு    भक्त्या  4க்த்யா  பக்தியோடு   पत्रं  பத்ரம்  இலை   पुष्पं  புஷ்பம்  மலர்    

फलं  2லம்  கனி    तोयं  தோயம்  நீர்   प्रयच्छति  ப்ரயச்ச2தி  அளிக்கிறான்   अहं  அஹம்  நான்    

भक्युपहृतम्  4க்த்யுபஹ்ருதம்  பக்தியினால் கொடுக்கப்பட்ட    

प्रयतात्मन:  ப்ரயதாத்மந:  தூய மனத்தானுடைய   तत्  தத்  அதை    अश्नामि  அச்1நாமி  அருந்துகிறேன்.


யார் எனக்கு இலை, மலர், கனி அல்லது நீரை பக்தியோடு படைக்கிறானோ, அத்தூய மனத்தையுடையவனின் அன்பளிப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

இலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும் அன்புடனே எனக்கு அளிப்பவன் ஆயின், முயற்சியுடைய அன்னவன் அன்புடன் அளித்ததை உண்பேன் யான்.


விளக்கம்:

இதுவும் அடிக்கடி மேற்கோளாகக் காட்டப்படும் ஒரு சுலோகம் ஆகும். ஒருவன் எதை வழங்குகிறான் என்பது முக்கியமல்ல. அது இலை(பத்ரம்), பூ(புஷ்பம்), பழம்(2லம்), நீர்(தோயம்) என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அதை அவன் எப்படி, எந்த பாவனையுடன் வழங்குகிறான் என்பது தான் முக்கியமாகிறது

=> மனப்பாங்கு:

: மே 4க்த்யா ப்ரயச்ச2திஎனக்கு பக்தியோடு அளிப்பவன். யார் என்னை ஈஷ்வரனாக அங்கீகரித்து பக்தியோடு படைக்கின்றானோ, என்கிறார் பகவான். ‘ஞானம் மற்றும் மோக்ஷத்தின் பொருட்டு, சித்த-சுத்திக்காக இதை நான் ஈஷ்வரனுக்கு படைக்கிறேன்’ - இப்படிப்பட்ட எந்த செயலும் கர்ம-யோகத்தைக் குறிக்கிறது. பக்தி என்பது ஒரு மனப்பான்மை அல்லது பாவனை ஆகும். பக்தியுடன் செய்யப்படும் எந்தவொரு பூஜையும் வழிபாடும் கர்ம-யோகமாக மாறுகிறது. பூஜை மற்றும் வணங்குதல் முதலிய உடலினால் செய்யப்படும் காயிகம்-கர்ம; கீர்த்தனை, மந்திர உச்சாடனம் முதலிய வாய்வழி செயல்கள், வாசிகம்-கர்ம; மனதினால் செய்யப்படும் தியானம், ஜபம் முதலிய மானஸம்-கர்ம, என எந்தவொரு செயலும் பக்தியோடு செய்யப்படும்போது அது கர்மயோகமாக ஆகிறது. இங்கு, பக்திக்கு அறிகுறியாக இயற்கையில் எளிதில் அகப்படுகின்ற கனி, மலர், இலை, நீர் ஆகிய எதைப் படைத்தாலும் மகிழ்வோடு ஏற்றுக் கொள்வதாக பகவான் கூறுகிறார்.

யார் இதைச் செய்கிறான்? ப்ரயதாத்மந:தூய்மையடைந்த மனதை உடையவன். ப்ரயத + ஆத்மந: = ப்ரயதாத்மந:, சரியான முயற்சியைக் கொண்டவன்; தூய நல்ல மனதையுடையவனைக் குறிக்கிறது. இத்தகையவனின் மனதில்தான் பக்தி வெளிப்படுகிறது. ஆகவே தூய்மையான இதயத்துடன் வழிபாடெனும் செயல் செய்யப்படுகிறது, மேலும் அந்த தூய்மையான இதயத்தைப் பெறுவதற்காகவும் நாம் பக்தியுடன் வழிபடுகிறோம்


=> பக்தியினால் செய்யும் செயல்:

பக்தி மட்டும் போதுமானதா? அல்லது பக்தியினால் செய்யப்படும் செயல் தேவைப்படுகிறதா? பக்தியினால் செய்யும் கர்மமும் முக்கியமானதாகும் ஏனெனில் அது பக்தியெனும் உணர்வை மேம்படுத்துகிறது. உண்மையில் ஈஷ்வரனின் மீதுள்ள பக்தியே போதுமானதுதான், அதை வெளிப்படுத்த எந்த ஒரு செயல்பாடும் தேவையில்லை. ஆனால் செயல் செய்யாவிடில், உணர்வு மறைந்துவிடும். தானெனல் எனும் அஹங்காரம் ஒருவனது யோகக்ஷேமத்தை பார்த்துக் கொள்வதாக, ஈஷ்வரனை அதற்கு துணையாக உபயோகித்துக் கொள்ளவதாக நினைக்கும்போது, அங்கு செயலின் வடிவில் பக்தியின் வெளிப்பாடு கண்டிப்பாகத் தேவைப்படுகிறது. எனவே பக்தியைப் போலவே பக்தியினால் செய்யப்படும் செயலும் முக்கியமாகிறது. இதனால் பக்தியெனும் உணர்வு வெளிப்படுகிறது. இந்த வெளிப்பாடு மிக அவசியம். இது ஒரு பேரார்வமாக மாற வேண்டும். அஹங்காரத்தை இல்லாமல் ஆக்கி பக்தியின் உட்பொருளாகத் தன்னை மாற்ற வேண்டும். எனவேதான் நமது கலாசாரத்தில் தினசரி வழிபாடு என்பது வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே உள்ளது


=> பிரார்த்தனை:

இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான், தன்னுள்ளும் தனக்கு வெளியேயும் இருக்கிறான் எனில் ஏன் பிரார்த்திக்க வேண்டும் என்று பலரும் எண்ணுவதுண்டு. உண்மையில் இறைவன் எங்கும் இருக்கின்றான் என்பதை தெளிவாக அறிந்த ஒருவன் வழிபடத் தேவையில்லை. ஒருகால் அந்த அறிவு இல்லையெனில் அதை அடைவதற்காக, வழிபாடு அவசியம். அனைத்தையும் அறிந்த, எங்கும் வியாபித்துள்ள, எல்லாவற்றையும் உள்ளடக்கிய இறைவனிலிருந்து தன்னைப் பிரித்து பார்க்கும் ஒருவனுக்கு பிரார்த்தனை அவசியம். ஈஷ்வரனைப் பற்றிய அறியாமை நீங்க ஈஷ்வரனிடம் பிரார்த்தனை செய்யவேண்டும்

ஒவ்வொரு கலாச்சாரத்திலும் பிரார்த்தனையின் முக்கியத்துவம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு முறைகள் வேறுபட்டாலும் அதிலுள்ள பக்தியுணர்வு ஒன்றேயாகும். வேள்வியாக இருக்கலாம், அல்லது இலை, பூ, பழம், நீர் போன்றவற்றை அளிக்கும் பூஜையாக இருக்கலாம், அதுவும் இல்லாத பட்சத்தில் மனதினாலேயே அவைகளைப் படைக்கின்ற மானச பூஜையாகவும் இருக்கலாம், எதுவாக இருப்பினும் பக்தியுணர்வே முக்கியம். பக்தியுடன் செய்யப்படும் செயல் முக்கியம் என்பதை பகவான் இங்கு கூறுகிறார். இப்படிப்பட்ட எந்தவொரு வழிபாடும் பூஜையாகிறது.  


=> இறை அணுகிரஹம்:

ஆகவே எதை வழங்கிய போதிலும் அது பக்தியுடன் வழங்கப்பட வேண்டும்4க்தி உபஹ்ருதம். தூய மனதுடன் கூடிய பக்தியோடு படைக்கும்போது என்ன நடக்கிறது? அது பகவானால் பெறப்படுகிறது.

அஹம் அச்1நாமிநான் உட்கொள்கிறேன், என்கிறார். இதை நான் ஏற்றுக் கொள்கிறேன்அஹம் க்ர்ஹ்நாமி, என்று பொருள்படுத்த வேண்டுமென்று சங்கரர் கூறுகிறார். எனில், அவன் தனது வழிபாட்டின் பலனான அந்தக்கரண-சுத்தியை அடைகிறான், அணுகிரஹம் கிடைக்கப் பெறுகிறான் என்பது பொருள். எனவே ஒரு வேள்விச் சடங்கை செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை; பக்தியுடன் செய்யப்படும் எந்தவொரு எளிமையான இறைவணக்கமும் கூட போதுமானது. ஆனால் செயல் முக்கியமானது, ஏனெனில் அதுவே தனியொருவனின் வரையறைகளை அங்கீகரிக்கச் செய்து, ஒரு குறிப்பிட்ட அளவு சரணடைதல் உணர்வை உண்டாக்கி பக்தியை ஊக்குவிக்கும். சரணாகதி எனும் பாவனை சரணாகதியின் மூலமே மேலும் மேலும் வளர்கிறது.

எப்பொருளைக் கொண்டும் பகவானைப் பெறமுடியாது. நல்ல மனமுடையவர்களது பக்திவலையொன்றில் மட்டுமே அவர் அகப்படுகிறார். பக்திக்கு அறிகுறியாக எதைப் படைத்தாலும் அவர் மகிழ்வோடு ஏற்றுக் கொள்கிறார். விதுரர் வார்த்த கஞ்சியை அமிழ்தெனப் பாராட்டி அவர் அருந்தினார். சுதாமா என்று அழைக்கப்பட்ட குசேலர் கொண்டு வந்த அவலை அவர் வலியப் பிடுங்கி வாயில் போட்டுக் கொண்டார். சபரி கொடுத்த உலர்ந்த காய்கனிகள் இராமனுக்கு ஏற்புடையனவாயின. கண்ணப்பனது உமிழ் நீரும் அவன் மென்ற மாமிசமும் சிவனாருக்கு ஒப்பற்ற நைவேத்தியமாயின. பக்தியானது பகவானுக்கு அவ்வளவு பெரியது

---------------------------------------------------------------------------------------------------------------------