திங்கள், 3 ஜூலை, 2023

அக்ஷரப்ரஹ்ம யோகம் 8.16 - 8.17

||8.16|| பிறவி எது? பிறவாமை எது?

ब्रह्मभुवनाल्लोका: पुनरावर्तिनोऽर्जुन

मामुपेत्य तु कौन्तेय पुनर्जन्म विद्यते ।। १६ ।। 

ஆப்3ரஹ்மபு4வநால்லோகா: புநராவர்திநோऽர்ஜுந  

மாமுபேத்ய து கௌந்தேய புநர்ஜந்ம வித்3யதே ।। 16 ।।


अर्जुन  அர்ஜுந  அர்ஜுனா   ब्रह्म भुवनात्  ஆப்3ரஹ்ம பு4வநாத்  ப்ரம்மலோகம் வரை   

लोका:  லோகாஉலகங்கள்   पुनरावर्तिन:  புநராவர்திந:  மறுபிறப்புடையவைகள்   तु  து  ஆனால்   

कौन्तेय  கௌந்தேய  குந்தியின் புதல்வா   माम् उपेत्य  மாம் உபேத்ய  என்னை அடைந்தால்   

पुनर्जन्म  புநர்ஜந்ம  மறுபிறப்பு   विद्यते  வித்3யதே  இல்லை.


அர்ஜுனா, ப்ரம்மலோகம் வரையில் உள்ள உலகங்களுக்கு மறுபிறப்புண்டு; குந்தியின் புதல்வா, மற்று என்னை அடைந்தவனுக்கு மறுபிறப்பில்லை.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

அர்ஜுனா, பிரம்மலோகம் வரை எல்லா உலகங்களும் மறுபிறப்பு உடையன. குந்தி மகனே! என்னை அடைந்தவனுக்கு மறுபிறப்பு இல்லை.


விளக்கம்:

=> எல்லா லோகங்களும் நிலையற்றது:

பிரம்மலோகம் வரையில், உயிர்கள் இருக்கும் உலகங்களுக்கு மறுபிறப்புண்டுஆப்3ரஹ்ம பு4வநாத் லோகா: புநராவர்திந:. இங்குஎன்கிற முன்னொட்டு, வரம்பைக் குறிக்கும் நோக்கில் ‘-வரைஎனும் பொருளைத் தருகின்றது. இது அந்த எல்லையை நிர்ணயிக்கும் புள்ளியை உள்ளடக்கியிருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். எனவே, ‘பிரம்மலோகம் வரையில்எனும் வெளிப்பாட்டில் ப்ரம்மலோகம்  சேர்க்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை இந்த சூழ்நிலையைப் பகுப்பாய்வு செய்து அறியலாம். உலகம் என்பது இங்கு ஆகுபெயர். பரமாத்மாவைத் தவிர மற்றவை அனைத்தும் படைக்கப்பட்டவை ஆதலால் ப்ரம்மலோகம் வரையில் எல்லா உலகங்களுக்கும் தோற்றமும் மறைவும் இருக்கின்றன. ஆதலால் இந்த உலகங்களில் உள்ள ஜீவர்களும் பிறக்கவும் இறக்கவும் செய்கின்றனர். எந்தவொரு லோகமும் திரும்பி வர வேண்டியதாக உள்ளதுபுநராவர்திந:. எனவே இங்குஎன்பதுவரை மற்றும் உள்ளடக்கியதுஎனும் அர்த்தத்தில், பிரம்மலோகத்தையும் உள்ளடக்குகிறது.

பு4வநஎனில் உயிரினங்கள் இருக்கும் உலகம் என்று பொருள். இந்த சுலோகத்தில் ப்ரம்ம என்பது பிரம்மலோகத்தில் வசிக்கும் ஹிரண்யகர்பரான பிரம்மதேவரைக் குறிக்கின்றது. எனவேப்3ரஹ்ம பு4வநஎன்பது பிரம்மா வசிக்கும் பிரம்ம-லோகத்தைக் குறிக்கின்றது. இங்கு பிரம்மலோகம் வரை உள்ள அனைத்து உலகங்களும் மறுபிறப்புடையவைகள்(புநராவர்திந:) என பகவான் கூறும்போது, ​​இந்த அனைத்து உலகங்களும் அழிவுக்கு உட்பட்டவை என்பது பொருள். இந்த உடலும் உலகின் ஒரு பகுதி என்பதால் அனைத்து பௌதிக உடல்களும், அவை இருக்கும் உலகங்களும் அழிவுக்கு உட்பட்டவைகள். தோன்றியுள்ள எல்லா காரியங்களும் காரணத்தில் கரைந்துபோகும் அந்த இறுதி ஒடுக்கம் மஹா-ப்ரளயம் ஆகும். அப்போது எஞ்சுவதற்கு என இங்கு எதுவுமில்லை. எனவே பகவான், ‘அர்ஜுனா, நீ பிரம்மலோகத்திற்கோ அல்லது வேறு எந்தவொரு லோகத்திற்கோ செல்ல திட்டமிட்டால், கண்டிப்பாக நீ திரும்பியே ஆகவேண்டும் ஏனெனில் அனைத்து லோகங்களும் அழிவிற்கு உட்பட்டவைகள்என்கிறார்

இதில் பிரம்மலோகத்திற்கென ஒரு விதிவிலக்கு உண்டு. நாம் ஏற்கனவே பார்த்ததுபோல, அங்கு பிரம்மதேவரால் கற்பிக்கப்பட்டு, பரமேஷ்வரன் தன்னிலிருந்து வேறானவராக இல்லை என்பது புரிந்து கொள்ளப்படும்போது அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள், மீண்டும் திரும்புவதில்லை. இதுவும்கூட ஞானத்தின் காரணமாகவே தவிர பிரம்மலோகத்திற்கு சென்றதன் காரணமாக அல்ல என்பதை புரிந்து கொள்ளவேண்டும்

ஆனால் கௌந்தேயா, என்னை அடைந்தவனுக்கு மறுபிறவி இல்லைது கௌந்தேய மாம் உபேத்ய புநர்ஜந்ம வித்3யதே. பரமேஷ்வரனை எப்படி அடைவது? வேறு எந்த லோகத்திற்காவது சென்று ஈஷ்வரனை அடையவேண்டுமென நினைப்பவர்கள் திரும்பி வரத்தான் வேண்டும். ஆனால் இவர்கள் ஞானத்தினால் அடைகிறார்கள்; ஸத்-சித்-ஆனந்த-ஆத்மாவாக, ப்ரம்மமாக, பரமேஷ்வரனிடமிருந்து வேறாக இல்லாதவனாகத் தன்னை   அறிவதனால் அடைகிறார்கள். எந்த ப்ரம்மத்திடமிருந்து இந்த அனைத்து படைப்புகளும் வந்துள்ளனவோ, எந்தவொன்று இந்த அனைத்திற்கும் அதிஷ்டானமாக மெய்ப்பொருளாக உள்ளதோ அதை தனது சொரூபமாக உணர்வதனால் அடைகிறார்கள். இவ்வாறு ஞானத்தினால் ஈஷ்வரனை அடைந்த இவர்களுக்கு மறுபிறவி இல்லை. மற்றபடி, எல்லா லோகங்களும் காலத்திற்கு உட்பட்டவை, ஆகையினால் ஒருவன் அவற்றிலிருந்து திரும்பத்தான் வேண்டும். ஒருவன் எவ்வளவு காலம் அங்கே இருக்கிறான் என்பது முக்கியமல்ல, அது நித்தியமானதாக இல்லை என்பதே சாரம்

ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

வேகவைத்த நெல்லை பூமியில் விதைத்தால் அது மறுபடியும் பயிராக முளைக்காது. அதுபோல சித்தனானபிறகு ஒருவன் இறப்பானானால் அவன் மறு ஜன்மம் அடைவதில்லை.

-------------------------------------------------------------------------------------------------------------------------

||8.17|| பிரம்மதேவரின் இரவு பகல்:

सहस्रयुगपर्यन्तमहर्यद्ब्रह्मणो विदु:

रात्रिं युगसहस्रान्तां तेऽहोरात्रविदो जना: ।। १७ ।।

ஸஹஸ்ரயுக3பர்யந்தமஹர்யத்3ப்3ரஹ்மணோ விது3:  

ராத்ரிம் யுக3ஸஹஸ்ராந்தாம் தேऽஹோராத்ரவிதோ3 ஜநா: ।। 17 ।।


सहस्र युग पर्यन्तम्  ஸஹஸ்ர யுக3 பர்யந்தம்  ஆயிரம் யுகங்களை முடிவாயுடையது   

ब्रह्मण:  ப்3ரஹ்மண:  பிரம்மாவினுடைய   यत्  யத்   எது   अह: அஹ:  பகல்   

युग सहस्रान्तां  யுக3 ஸஹஸ்ராந்தாம்  ஆயிரம் யுகங்களை முடிவாயுடையது   रात्रिं  ராத்ரிம்  இரவை   

विदु:  விது3:  அறிகிற   ते जना:  தே ஜனா:  அம்மனிதர்கள்   

अहोरात्रविद:  அஹோராத்ரவித3:  பகலையும் இரவையும் அறிந்தவர்கள்.


ஆயிரம் யுகம் பிரம்மாவுக்கு ஒரு பகல் என்றும், ஆயிரம் யுகம் அவருக்கு ஓர் இரவு என்றும் அறிபவர் இரவு பகலின் தத்துவத்தை அறிபவர் ஆகின்றனர்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

பிரம்மத்துக்கு ஆயிரம் யுகம் ஒரு பகல் ஆயிரம் யுகம் ஓரிரவு. இதையறிந்தோரே இராப் பகலின் இயல்பறிவார்.


விளக்கம்:

=> பிரம்மாவின் நாள்:

பிரம்மதேவரின் பகல் மற்றும் இரவு பற்றி அறிந்தவர்கள், அவரின் ஒரு பகல் ஆயிரம் யுகங்களைக் கொண்டது என்பதை அறிவார்கள். இங்குயுகஎன்ற சொல் மஹா-யுகத்தைக் குறிக்கிறது. ஆக, பிரம்மதேவரின் ஒரு பகல் ஆயிரம் மஹா யுகங்கள், ஒரு இரவு ஆயிரம் மஹா யுகங்கள் என அவருடைய ஒரு நாள் மொத்தம் இரண்டாயிரம் மஹா யுகங்களைக் கொண்டதாக இருக்கின்றது

ஒரு மஹா-யுகம் அல்லது சதுர்யுகத்தில் கிருத, திரேதா, துவாபர, கலி ஆகிய நான்கு யுகங்களும் அடங்கியிருக்கின்றன. இனி ஒவ்வொரு யுகமும் எத்தனை வருடங்களைக் கொண்டது என்பதைப் பார்ப்போம்.

 (1) கலி யுகம் - 432 ஆயிரம் வருடங்கள் = 432000

 (2) துவாபர யுகம் (கலி x 2) - 864 ஆயிரம் வருடங்கள் = 864000

 (3) திரேதா யுகம் (கலி x 3) - 1296 ஆயிரம் வருடங்கள் = 1296000 

 (4) க்ருத யுகம் (கலி x 4) - 1728 ஆயிரம் வருடங்கள் = 1728000

இதிலிருந்து,

ஒரு மஹா யுகம்(சதுர்யுகம்) (கலி x 10) - 4320 ஆயிரம் வருடங்கள் = 4320000. 

பிரம்மதேவரின் ஒரு பகல் என்பது ஆயிரம் சதுர்யுகம் = 4,320,000,000 வருடங்கள்.

பிரம்மதேவரின் ஒரு இரவு என்பது ஆயிரம் சதுர்யுகம் = 4,320,000,000 வருடங்கள்.

இறுதியாக,

பிரம்மாவின் ஒரு நாள் = 2000 சதுர்யுகம் = 4320000 x 2000 = 8640,000,000 மனித வருடங்கள்.

இவற்றில் பிரம்மாவின் ஒரு பகலான நானூற்றி முப்பத்தி இரண்டு கோடி ஆண்டுகள் முடிந்தவுடன், அவரின் இரவு துவங்கும்போது பிரம்மலோகம் தவிர மற்ற அனைத்து லோகங்களும் அழிக்கப்படுகின்றன. தர்க்கரீதியாக பார்க்கும்போது, எவ்விதம் நாம் தூங்கச் செல்லும்போது நமது உலகங்கள் ஒடுங்குகின்றனவோ, அதுபோலவே பிரம்மாவின் தூக்கத்தில் அவரது லோகம் தவிர இந்த முழு படைப்பும் ஒடுக்கத்தை அடைகிறது. பிறகு அவரின் இரவு முழுவதும், அதாவது நானூற்றி முப்பத்தி இரண்டு கோடி ஆண்டுகள் அனைத்து லோகங்களும் ஒடுக்கத்திலேயே உள்ளன. பிரம்மாவின் ஒரு நாள் இரு கல்ப காலம்; ஒரு கல்பகாலம் என்பது பிரம்மனின் ஒரு பகலை மட்டும் குறிக்கும். முதல் கல்பமான பகல் பொழுதின் முடிவில் நிகழும் பிரளயம், கல்ப-பிரளயம் என்றழைக்கப்படும். இப்பிரளயம் பிரம்மாவின் இரவுப் பொழுது முழுவதும், அதாவது ஒரு கல்ப காலம் நீடிக்கிறது. பிரம்மதேவர் எழுந்ததும் அவரது நாள் தொடங்கும் போது மீண்டும் அனைத்து லோகங்களும் சிருஷ்டிக்கு வருகின்றன.

=> பிரம்மாவின் ஆயுள்:

பிரம்மாவின் ஆயுட்காலம் நூறு ஆண்டுகள் ஆகும். இதன் முடிவில் பிரம்மலோகம் உட்பட அனைத்தும் அழிவை அடைகின்றது. இது மஹா-பிரளயம் என்றழைக்கப்படும். பிரம்மாவின் நாட்கணக்கைக் கொண்டு நேரத்தை கணக்கிடுபவர்கள் இந்த தத்துவத்தையே அறிகின்றனர். உண்மையில் இந்த கணக்கு இங்கு சொல்லப்படுவதற்கான நோக்கம், அனைத்து லோகங்களும் காலத்தால் வரையறுக்கப்பட்டவை என்பதால் மறுபிறப்புடையவைகள்; இதனால் அவைகள் திரும்ப வேண்டிய இடங்கள் ஆகின்றன. ஆகையினால் பிரம்மலோகம் உட்பட எந்தவொரு லோகத்திற்குச் செல்வதும் உதவப் போவதில்லை.

எவ்வளவு நீண்ட காலமாக இருப்பினும் அது வரையறைக்கு உட்பட்டது. நித்திய சொர்க்கம் என எதுவுமில்லை, ஏனெனில் காலத்தின் போக்கில் நித்தியம் என்பது இல்லை. பிறகு நித்தியம் என்றால் என்ன? ‘இப்போதுமட்டுமே; இப்போது என்பது காலத்திற்கு உட்பட்டது அல்ல; அதுவே ஆத்மாவாக இருப்பது; அதுவே பரமேஷ்வரன்; வேறு நித்தியம் இல்லை.

-------------------------------------------------------------------------------------------------------------------------