புதன், 10 பிப்ரவரி, 2021

ஸாங்கிய யோகம் 2.42 - 2.45

 ।।2.42।। - ।।2.44।। எதனால் ஒருவன் நிலையற்ற புத்தியுடன் உள்ளான்

यामिमां पुष्पितां वाचं प्रवदन्त्यविपश्चित:

वेदवादरता: पार्थ नान्यदस्तीति वादिन: ।। ४२

कामात्मान: स्वर्गपरा: जन्मकर्मफलप्रदाम्

क्रियाविशेषबहुलां भोगैश्वर्यगतिं प्रति ।। ४३

भोगैश्वर्यप्रसक्तानां तयापहृतचेतसाम्

व्यवसायात्मिका बुद्धि: समाधौ विधीयते ।। ४४

யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவத3ந்த்யவிபச்1சித:

வேத3வாத3ரதா: பார்த2 நான்யத3ஸ்தீதி வாதி3: ।। 42

காமாத்மான: ஸ்வர்க3பரா: ஜன்மகர்மப2லப்ரதா3ம்

க்ரியாவிசே1ஷப3ஹுலாம் போ4கை3ச்1வர்யக3திம் ப்ரதி ।। 43

போ4கை3ச்1வர்யப்ரஸக்தானாம் தயாபஹ்ருதசேதஸாம்

வ்யவஸாயாத்மிகா புத்3தி4: ஸமாதெள4 விதீ4யதே ।। 44


पार्थ    பார்த2    பார்த்தா  अविपश्चित:    அவிபச்1சித:   அக்ஞானிகள்(அறிவில்லாதவர்கள்)  

वेद वाद रता:  வேத3 வாத3 ரதா:   வேதத்தின் கர்ம காண்டத்தில் சுகித்திருப்பவர்கள்   

अन्यत्   அன்யத்  போகத்தை தவிர வேறு  अस्ति    அஸ்தி  எதுவுமில்லை  इति   இதி  என்று    

वादिन:  வாதி3:   வாதிடுபவர்கள்   कामात्मान:   காமாத்மான:    ஆசை நிறைந்தவர்கள்    

स्वर्गपरा:  ஸ்வர்க3பரா:   சுவர்கத்தையே முடிவான லக்ஷியமாகக் கொண்டவர்கள்   

जन्म कर्म फल प्रदाम्   ஜன்ம கர்ம 2 ப்ரதா3ம்    புதிய ஜென்மத்தை கர்ம பலனாக கொடுக்கிற       

भोगैश्वर्य गतिं प्रति    போ4கை3ச்1வர்ய 3திம் ப்ரதி   போகத்தையும் ஐஸ்வர்யத்தையும் அடைதற்கு உபாயமான   क्रिया विशेष बहुलां   க்ரியா விசே1 3ஹுலாம்   விதவிதமான அதிக கர்ம விசேஷங்கள் நிறைந்ததும்   याम् इमाम् पुष्पितां वाचं   யாம் இமாம் புஷ்பிதாம் வாசம்   எந்த இப்படிப்பட்ட அலங்காரமான வார்த்தையை  प्रवदन्ति   ப்ரவத3ந்தி   சொல்கிறார்கள்.

तया  தயா   அந்த வார்த்தையினால்   अपहृत चेतसाम्    அபஹ்ருத சேதஸாம்  அபகரிக்கப்பட்ட மனதையுடையவர்களாய்   भोगैश्वर्य प्रसक्तानां   போ4கை3ச்1வர்ய ப்ரஸக்தானாம்   போகத்திலும் ஐஸ்வர்யத்திலும் பற்றுடையவர்களுக்கு   व्यवसायात्मिका बुद्धि:   வ்யவஸாயாத்மிகா புத்3தி4:   உறுதியான புத்தி    समाधौ    ஸமாதெள4   மனதிலேயே  विधीयते      விதீ4யதே    உண்டாவதில்லை.


வேதத்தின் கர்ம காண்டத்தில் சுகித்திருப்பவர்கள், சுவர்க்கத்தை விளைவிக்கிற கர்மத்திற்கு அன்னியமாக வேறு ஒன்றுமில்லை என்பவர்கள், ஆசை நிறைந்தவர்கள், சுவர்கத்தையே முடிவான லக்ஷியமாகக் கொண்டவர்கள்இத்தகைய அக்ஞானிகளுடைய அலங்காரமான வார்த்தையைக் கேட்டு அபகரிக்கப்பட்ட மனதையுடையவர்களுக்கும், போகத்திலும் ஐஸ்வர்யத்திலும் பற்றுடையவர்களுக்கும் உறுதியான புத்தி மனதில் உண்டாவதில்லை. அவர்களுடைய அலங்காரமான சொற்கள், போகத்தையும் ஐஸ்வர்யத்தையும் அடைதற்கு உபாயமான விதவிதமான காமிய கர்ம விசேஷங்கள் நிறைந்தனவாயும், புதிய பிறவிகளைக் கர்ம பலனாக கொடுப்பவைகளாயும் இருக்கும்.  


பாரதியின் மொழிபெயர்ப்பு :

வேதங்களின் வெளியுரையில் மகிழ்வார் சிலர், பூக்களைப்போன்ற(அலங்காரச்) சொற்கள் பேசுகிறார்கள். தமது கொள்கை யொழிய மற்றது பிழை யென்கிறார்கள். ।। 42 ।।

இவர்கள் காமிகள், ஸ்வர்கத்தை பரமாகக் கொண்டோர். பிறப்புக்கும் தொழிலுக்கும் பயன் வேண்டுவோர்; போகத்தையும் ஆட்சியையும் வேண்டுவோர்; பலவகையான கிரியைகளைக் காட்டிப் பேசுகிறார்கள்.।।43।।

இவர்கள் சொல்வதைக் கேட்டு மதிமயங்கி போகத்திலும் ஆட்சியிலும் பற்றுறுவோருடைய நிச்சய புத்தி சமாதியில் நிலைபெறாது. ।।44।।


விளக்கம்:

=> உலகத்தவர் போக்கு:

அவிபச்1சித: என்பது அறிந்தும் அறியாதவர்களை, அவிவேகிகளைக் குறிக்கிறது. அதாவது வேதத்தை கற்றறிந்த, அதன் உண்மைத்தன்மையில் நம்பிக்கைகொண்ட, ஆனால் அதனுடைய முக்கிய உபதேசமான ஆத்மஞானத்தை அறியாதவர்களைக் கூறுகிறது. இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில வாக்கியங்களைக் கொண்டு பேசி, வாதாடி மற்றவர்களையும் நம்பவைக்கிறார்கள் என்று சங்கரர் தனது உரையில் விமர்சிக்கிறார். கேட்பதற்கு இனிமையான அலங்காரச் சொற்களைக் கூறி(யாம் புஷ்பிதாம் வாசம்), குழந்தை பேறு, உடல் ஆரோக்யம், செல்வம் போன்ற அனைத்துவிதமான உலக போகத்தை அடையும் சடங்குகளைக் கூறும் வேதத்தின் கர்ம காண்டத்தை மட்டும் கூறி(வேத3 வாத3 ரதா:), சொர்ககத்தையே  மேலான முடிவான லக்ஷியமாக கொண்டவர்கள்(ஸ்வர்க3பரா:), மேலான பிறப்பை கொடுக்கும் கர்மபலனைப் பற்றியும்(ஜன்ம கர்ம 2 ப்ரதா3ம்), போகத்தையும் ஐஸ்வர்யத்தையும் அடைவதற்கான விதவிதமான சாதனைகளைப் பற்றியும் பேசுபவர்களிடம்(க்ரியா விசே1 3ஹுலாம்), அதில் பற்றுடையவர்களின் புத்தி சென்றுவிடுவதால்(அபஹ்ருத சேதஸாம்) உறுதியான புத்தி அவர்களிடம் உண்டாவதில்லை(வ்யவஸாயாத்மிகா புத்3தி4: விதீ4யதே). 

தவறான விஷயத்தை சொல்பவர்களிடம் நம்பிக்கை வைத்து, அவர்களின் ஆசை வார்த்தைகளினால் மோஹமடைந்த காரணத்தினால் அவர்களின் புத்தி நிச்சயமானதாக இல்லை. ஆசை எனும் கயிற்றினால் கட்டுண்டு கிடப்பவர்கள் தங்களது கல்வியையும், கேள்வியையும், சொல்வன்மையையும் சிற்றின்பத்தை அடையும் பொருட்டே கையாளுகின்றனர். பலவகைப்பட்ட இன்பங்களை நாடி பிறவிப் பெருங்கடலில் அழுந்திக்கிடப்பவர்க்கு வேதத்தின் கருமகாண்டம் பயன்படுகிறது. இன்பங்களைப் பெறுவது வாழ்க்கையின் லக்ஷியமன்று. பரிபூரணமடைவதே முடிவான லக்ஷியமாகும். அதற்கு ஞானத்திலும் யோகத்திலும் உறுதிபெற்ற உள்ளம் வேண்டும்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:


கழுகு ஆகாயத்தில் உயரப் பறக்கிறது. ஆனால் கீழே எங்கு அழுகிய பிணம் கிடக்கிறது என்பதிலேயே அது கண்ணும்கருத்தும் உடையதாயிருக்கிறது. வேத சாஸ்திரங்களை எவ்வளவு கற்றிருந்தாலும் காமவசப்பட்டிருக்குமளவு அந்த சாஸ்திரிகள் கழுகு போன்றவர்களேயாவர். காமமும் காசு ஆசையும் உள்ளத்தில் குடிகொண்டிருக்குமளவு அவர்கள் ஈஷ்வர லாபத்தை அடைய முடியாது.

----------------------------------------------------------------------------------------------------------------

।।2.45।।  வ்யவஸாயாத்மிகா(உறுதியான) புத்திக்கான உபாயம்:

त्रैगुण्यविषया वेदा निस्त्रैगुण्यो भवार्जुन

निर्द्वन्द्वो नित्यसत्त्वस्थो निर्योगक्षेम अात्मवान् ।। ४५

த்ரைகு3ண்யவிஷயா வேதா3 நிஸ்த்ரைகு3ண்யோ 4வார்ஜுன

நிர்த்3வந்த்3வோ நித்யஸத்த்வஸ்தோ2 நிர்யோக3க்ஷேம ஆத்மவாந்।। 45


अर्जुन அர்ஜுன  அர்ஜுனா   वेदा:  வேதா3: வேதங்கள்   त्रैगुण्यविषया:     த்ரைகு3ண்யவிஷயா  முக்குண மயமான ப்ரபஞ்சத்தை விஷயமாகக் கொண்டவை    निस्त्रैगुण्य:  நிஸ்த்ரைகு3ண்ய:   முக்குணத்திலிருந்து விடுபட்டவன்   निर्द्वन्द्व:   நிர்த்3வந்த்3:  இருமைகளினின்று விடுபட்டவன்      

नित्यसत्त्वस्थ:   நித்யஸத்த்வஸ்த2 :    எப்போதும் சத்வ குணத்தில்(நடு நிலையில்) இருப்பவன்    

निर्योगक्षेम:   நிர்யோக3க்ஷேம:    யோக க்ஷேமங்கள் அற்றவன்    अात्मवान्   ஆத்மவாந்  ஆத்மசொரூபத்தில் நிலைத்தவன்   भव   4   ஆகக்கடவாய்.


அர்ஜுனா, வேதங்கள்(கர்மகாண்டம்) முக்குண மயமான ஸம்ஸாரத்தைப் பற்றியவைகள். நீ இருமைகளினின்று விடுபட்டவனாக, எப்பொழுதும் சத்வ குணத்தில் இருப்பவனாக, யோக க்ஷேமங்கள் அற்று, ஆத்மசொரூபத்தில் நிலைத்திருந்து, முக்குணங்களைக் கடந்தவனாகுக.


பாரதியின் மொழிபெயர்ப்பு :

மூன்று குணங்களுக்குட்பட்டனவற்றைக் குறித்து வேதங்கள் பேசுகின்றன. அர்ஜுனா, நீ மூன்று குணங்களையும் கடந்தோனாகுக. இருமைகளற்று, எப்போதும் உண்மையில் நின்று, யோக க்ஷேமங்களைக் கருதாமல், ஆத்மாவை வசப்படுத்தியவனாகுக.


விளக்கம்:

=> யோகத்தின் திறவுகோல்:

போகத்திலும் ஐஸ்வர்யத்திலும் உறுதி கொண்ட புத்தியுடையவர்களுக்கு முக்குண விஷய மயமான வேதத்தின் பூர்வ பாகமே அதன் முக்கிய அம்சமாகிறது. அதில் சொர்க்கம், மறுபிறவி போன்ற அறியாத சாத்யங்கள் மற்றும் குழந்தை பேறு, ஆயுள் விருத்தி போன்ற அறியப்பட்ட சாத்யங்களை அடையும் வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன

மூன்று குணங்களின்(த்ரைகு3ண்ய) விளைவு:

(1) ஸத்வ குணம் - அமைதி, அறிவு

(2) ரஜோ குணம் - ஆசை, செயல்

(3) தமோ குணம் - மோஹம், செயலின்மை

ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குண மயமான இந்த ப்ரபஞ்சத்திலிருந்து போகத்தை அடைய வழிகாட்டியாக வேதத்தின் கர்ம காண்டம் உள்ளது. அர்ஜுனா, ஸம்ஸாரத்திற்கு காரணமான இந்த முக்குணத்தில் வைராக்யம் கொண்டவனாக இரு என பகவான் கூறுகிறார். இவ்வுலகம் அநித்யமானது, அதிருப்தியானது, முழுமையான சுகம் அற்றது என உணர்ந்து அதில் வைராக்யத்துடன் இரு நிஸ்த்ரைகு3ண்ய: 4. சங்கரர் தனது உரையில், ஆசையிலிருந்து விடுபட்டவனாக இருநிஷ்காம: 4 என விளக்கம் கூறுகிறார்.

லாபம்-நஷ்டம், வெற்றி-தோல்வி, சுகம்-துக்கம் போன்ற இருமைகளைக்(த்3வந்த்3:) கடந்தவனாக, விருப்பமான விருப்பமற்ற சூழ்நிலைகளைச் சமமாக பாவிப்பவனாக இரு என்கிறார். ஸத்வ குணத்திலிருக்கும் போது தான் ஒருவன் இருமையை கடந்தவனாக இருக்க முடியும். ஆகவே எப்பொழுதும் ஸத்வ குணத்திலேயே, நடுநிலைத் தவறாமல் இருநித்யஸத்த்வஸ்த2: 4

* ஸத்வ குணத்தின் அடையாளம்: அமைதியாக, பொறுமையாக இருத்தல்; ஒரு சூழ்நிலையை சரியாகக் கணித்தல்.

* செயல், பேச்சு, உணவு அளவாக இருத்தல் ஒருவனை ஸத்வ குணத்திலிருக்க வைக்க உதவும்.

=> யோகக்ஷேமம்:

பொருளை தேடிச் சேர்த்தல் யோகம் என்றும், சேர்த்த பொருளை வைத்துக் காப்பாற்றுதல் க்ஷேமம் என்றும் சொல்லப்படும். தனி மனிதனது எந்தவொரு பிரச்சனையும் இவை இரண்டுடன் சம்பந்தப்பட்டதாகவே இருக்கும். தனக்கு தேவையானது கிடைக்கவில்லை அல்லது ஏற்கனவே இருந்த ஒன்று இழக்கப்பட்டு விட்டது என தலைமுடியில் ஆரம்பித்து நூற்றுக்கணக்கான பொருட்களில், விஷயங்களில் தொடரும் அனைத்துவித ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும் ஒருவிதத்தில் யோகக்ஷேமத்தோடு தொடர்புடையதே. எல்லா நேரத்திலும் யோகக்ஷேமத்தில் ஈடுபடுபவனது புத்தி ஸத்வத்தில் நிற்காது. ஆகவே யோகக்ஷேமமற்றவனாக இரு  நிர்யோக3க்ஷேம: 4.

இப்படிப்பட்டவனாக ஒரு சாதகன் ஆத்ம சொரூபத்திலேயே திளைத்திருக்க வேண்டும்ஆத்மவாந் 4. தமோ குணத்திலிருந்து விடுதலை அடைந்தவனாக, எந்தப் பொருளும் தனது மனதை மயக்க அனுமதிக்காதவனாக இரு.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

கீதா, கீதா, கீதா என்று அடுத்தடுத்து அவசரமாக உச்சரித்தால்தாகி, தாகிஎன்ற சப்தம் வருவது போலக் கேட்கும்[தாகி என்பது தியாகி என்பதின் சிதைவு]. உலகப் பற்றுள்ளவர்களே, துறவு கொள்ளுங்கள்; எல்லாவற்றையும் விட்டு ஈஷ்வரனிடம் மனதை நிலைநிறுத்துங்கள் என்று கீதையானது ஒரே வார்த்தையில் போதிக்கிறது.

-------------------------------------------------------------------------------------